Friday, May 05, 2006

நீங்காத நினைவுகள்!

அன்பர்களே கவிதைக்கு பொய் அழகு இதை நான் கவிதை என்று சொல்வது உ(எ)னக்கு அழகானு கேட்காம ..திரைப்படம் பார்க்கும் போது வரும் பாடல் காட்சிகளுக்கு எல்லாம் கதாநாயகியின் நாபிகமல தரிசனத்தை தியாகம் செய்து புகை பிடிக்க போவது போல் போகாமல் தம் கட்டி படிக்கவும் இந்தக் கவிதையை!

நீங்காத நினைவுகள்!


சிலந்தி பின்னும் வலையென

என் மனகுகையெங்கும் நினைவு வலைகள்

முடிவற்று படர்கின்றது

முன்னிரவில் தேய்பிறை நிலவொளியில்

தேங்கிய மழை நீரில்

நான் கண்ட உன் பிம்பம்

நாள் தோறும் வளர் பிறையென வளர்கிறது

நினைவு அடுக்குகளில் நீக்கமற நிறைந்துவிட்ட

நீங்காத நினைவுகள் முடிவற்று நீள்கிறது

தூக்கமற்ற இரவுகளின் நினைவோடை கனவுகளில்!