Saturday, August 25, 2007

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

(அரசு வெளியிட்ட காங்கேயம் காளை சிறப்பு தபால் தலை!)

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு ... என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.

இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.

இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.

அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.

எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என "UNO" போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.

அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.

இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால் -கர்நாடகா

2) பச்சூர் - பிகார்

3) பர்கூர் - தமிழ்நாடு

4) தாங்கி - மகாராஷ்டிரா

5) தியோனி - மகாராஷ்டிரா

6) கவொலாவோ - மகா

7) கீர் - குஜராத்

8) ஹல்லிகர் - கர்நாடகா

9) ஹரியானா - ஹரியானா

10) காங்கேயேம் - தமிழ்நாடு

11) காங்ரெஜ் - ராஜஸ்தான்

12) கேன்கதா - உத்திரப்பிரதேசம்

13) கேரிகார்க் - உத்திரப்பிரதேசம்

14) ஹில்லார் - மகாரஷ்டிரா

15) கிருஷ்ணா வாலி - கர்நாடகா (250க்கும் குறைவாக)

16) மால்வி - ராஜஸ்தான்

17) மேவாதி - உத்திரபிரதெசம்

18)நகோரி - ராஜஸ்தான்

19)நிமாரி - மகா

20)ஓங்கோல் - ஆந்திரா

21) பொன்வார் - உத்திரபிரதேசம்

22) புங்கனூர் - ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)

23) ரதி -ராஜஸ்தான்

24) சிவப்பு காந்தாரி - மகா, குஜராத்

25) சிவப்பு சிந்தி - பஞ்சாப்,

26) சாஹிவால் - பஞ்சாப்

27) சிறி - மேற்குவங்கம் , சிக்கிம்

28) தார்பார்க்கர் - ராஜஸ்தான்

29) உம்பளச்சேரி - தமிழ்நாடு

30) வச்சூர் - கேரளா (100 க்கும் குறைவாக)

31) கங்காத்திரி - உ.பி, பீகார்,

32) மல்நாட் ஹிடா - கர்நாடகா

33) தோ தோ - நாகாலாந்த்

*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!

மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது , அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!

14 comments:

Anonymous said...

We have 2 காங்கேயேம் நாட்டுக்காளைகள் 3 Eruthukal

Anonymous said...

One more tip

காளைகள் - 0 to 2 Bigger teeth in lower row
Eruthukal - 4 & Above - Bigger Teeths in lower row

Unknown said...

வவ்ஸ்,

ரொம்ப வருத்தப்பட வைக்கும் செய்திதான். பழையன கழிதலும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, அடையாளங்களை இழக்கும் சமூகம்/சூழல்.

எங்கள் வீட்டில காங்கேயம் காளை மற்றும் உம்பளச்சேரி உழவு மாடுகள் (ஒருகாலத்தில்!) இருந்தன. உழவு மாடுகளை விற்கும்போது அழுதது இன்னும் நினைவில் :(்

Anonymous said...

We have 2 காங்கேயேம் நாட்டுக்காளைகள் 3 Eruthukal

காளைகள் - 0 to 2 Bigger teeth in lower row
Eruthukal - 4 & Above - Bigger Teeths in lower row

Typical Vivasayi sitting in USA and Still loving all my காளைகள்....In-law got 2 more Kandrukal for my son (3 years) he really liked when he was India....

My son is lucky to have their grandpa's getting and Unlucky to see only on Vactions (4-6 weeks) then Only seeing on photos

He heeeeeee
Goundan - Kunnathoor Erode
(the name meant as Kudiyanavan not as caste)

வவ்வால் said...

அனானி ,
நன்றி,
எல்லா தகவலும் நீங்கள் போட்டது தானே.

இப்போதும் கிராம பகுதிகளில் சில விவசாயிகள் மட்டும் சொந்தமாக உழவு மாடுகள் வைத்துள்ளனர், மற்றபடி எல்லாம் டிராக்டர தான்.
நீங்கள் சொந்தமாக மாடு வளர்த்துள்ளது நல்ல அனுபவமாக இருந்து இருக்கும்.

மாடு வாங்கும் போது பல் பார்த்து வாங்குவாங்க , அது வயதினை அறிய , ஆனா எப்படினு விவரம் தெரியாது. நீங்க சொன்ன பல் கணக்கும் புதிது தான் எனக்கு!

வவ்வால் said...

வாங்க தஞ்சாவூரார் ,
நன்றி,
ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்த உம்பளச்சேரி மாடுகள் இப்போது ஆயிரக்கணக்கில் மட்டுமே இருக்கு , அதுவும் பாதுகாக்கப்பட வேண்டியப்பட்டியளில் உள்ளது.

உற்பத்தி அளவை மட்டும் நோக்கமாக கொண்டு செயல் படுவதால் ஏற்படும் விளைவு இது .

//எங்கள் வீட்டில காங்கேயம் காளை மற்றும் உம்பளச்சேரி உழவு மாடுகள் (ஒருகாலத்தில்!) இருந்தன. உழவு மாடுகளை விற்கும்போது அழுதது இன்னும் நினைவில் :(்//

பிராணிகள் வளர்த்தால் அதன் மீது ஒரு பாசம் ஏற்பட்டு விடும்.தஞ்சாவூர் பக்கதில கூட ஒரு கால் நடை ஆராய்ச்சி நிலையம் இருக்கு.

வடுவூர் குமார் said...

இதில் கூடவா கலப்படம்?
மாடு வளர்பது எல்லாம் எங்க தாத்தா காலத்துடன் போய் விட்டது.
அவர் வளர்த்த பசு பெயர் "லக்ஷ்மி" எனபதாம்,எங்கிருந்து கூப்பிட்டாலும் வந்துவிடுமாம்.ஒரு நாள் புகைவண்டியை முட்டப்போய் உயிரை விட்டதாம்,அதிலிருந்து சோகமாய் மாடு வளர்பதையே விட்டுவிட்டார்களாம்.

வவ்வால் said...

வாங்க குமார்,

பாவம் ஏன் அந்த மாடு ரயில முட்ட போச்சு? பெரும்பாலும் விலங்குகளுக்கு உள்ளுணர்வு அதிகம் ஆச்சே!

ஆமாம் இப்பொ இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாடுகள் கலப்பின வகை தான். கால் நடைமருத்துவ மணைகளில் செயற்கை கருவூட்ட ஊசி போட்டு தானே கன்று போடுகின்றன. இப்படி எல்லா மாடும் கலப்பினம் ஆகி கடைசியில் ஒரிஜினல் காணாம போய்டுச்சு!

நாடோடி இலக்கியன் said...

என்னதான் கலப்பினம் பால் தந்தாலும், நாட்டு மாடுகளின் கம்பீரமும்,சுறுசுறுப்பும்(சன்டியர் தனம்) எப்போதுமே வியக்கவைக்கக் கூடியது.அப்படிப்பட்ட மாட்டினம் அருகி வருவது வருந்ததக்க விஷயம்.

//தஞ்சாவூர் பக்கதில கூட ஒரு கால் நடை ஆராய்ச்சி நிலையம் இருக்கு//

அந்த ஊர் பெயர் ஈச்சங்கோட்டை(தஞ்சையில் இருந்து 13 கி.மீ).

வவ்வால் said...

வாங்க நாடோடி இலக்கியன்,

நன்றி, என் பெயரை விட நல்ல பெயர்!

சரியா சொன்னிங்க, நாட்டு மாடெல்லாம் மண்ணின் மைந்தர்கள்!

ஈச்சங்கோட்டை தான் , சரியா சொன்னிங்க எனக்கு மறந்து விட்டது. அங்கு தான் இந்த செயற்கை கருத்தரிப்புக்கு மாட்டின் விந்தணு ஊசி தயாரிக்கிறார்கள்.(ஊசி என்று சொல்வது வழக்கம் என்றாலும் அது ஊசி அல்ல மெல்லிய குழல் அதனை உட்செலுத்துவார்கள், அதன் பெயர் ஸ்ட்ரா என்று நினைக்கிறேன்)அதனை உறைனிலையில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
இது பற்றிப் பல வருடங்களுக்கு முன் எண்ணிக் கவலைப்பட்டேன். இந்தியக் காளைகளின் கம்பீரமே தனிதான், அன்று எங்கள் ஈழத்துக்கு தென்னிந்தியக் காளைகள் இறக்குமதியானது, நீங்கள் அறிந்திருக்கலாம். அவற்றை நாம் வடக்கன் (எங்களுக்கு வடக்கால்) மாடுகள் என்போம்.
மாடு,ஆடு, கோழி மாத்திரமா??காய்கறி,பூவகை, நெல் ,ஆற்று மீன் என எல்லாமே நம் சொந்த இனங்களை அழிய விடுகிறோம்.
இந்த நாடுகளில் புதிய இனங்களை உருவாக்கிய போதும் பழைமை பேணும் உணர்வால் club உருவாக்கி
அவற்றைப் பாதுகாப்பதுடன், வருடாவருடம் கண்காட்சி வைத்து அதைப் பரவவைப்பதில் வெற்றி கண்டுவருகிறார்கள். இப்படிக் கண்காட்சி பார்த்து வியந்துள்ளேன்.
இப்போது கூட தாமதம் அல்ல, நம் நாட்டில் உடன் நடவடிக்கை எடுத்து இந்த அரிய பொக்கிசங்களைக் காக்கலாம்.
இயந்திர மயம் தந்த பரிசு, இந்தப் பழைமை அழிவு.
சக பதிவர் கானா பிரபா...ஓவண்டிகாரா எனும் பதிவில்
இந்தத் தென்னக மாடுகள் பற்றி அருமையாகச் சொல்லியுள்ளார். பின்பு தொடுப்புத் தேடித் தருகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட மாட்டுப் படங்கள் பார்க்க முடியுமா??

வவ்வால் said...

வாங்க யோகன் ,
நன்றி,

நீங்கள் சொல்வது போல தான் நடக்கிறது, அழிந்துவரும் பாரம்பரிய வகை உயிர் இனங்களை இப்போது காக்காவிட்டால் எப்போதும் இயலாது!

இப்படி கண்காட்சிகளில் மட்டும் தான் சிலவற்றை பார்க்க முடியும்.

இயந்திரங்கள் வருகை மட்டும் காரணம் அல்ல , உற்பத்தியை அளவுக்கதிகமாக சந்தைபடுத்துதலும் ஒரு காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக தான் அப்படி வழக்கொழிந்த்து போகும் இனங்களை பாதுகாக்க அரசு முயல்கிறது. இத்தனை காலம் சில இனங்கள் இன்னும் இருக்க பல தன்னார்வலர்கள் தான் காரணம். அதனால் தான் சில நூறு பாரம்பரிய காளைகள் மிச்சம் இருக்கிறது.

படங்கள் கூட இணையத்தில் அவ்வளவாக இல்லை. ஓங்கோல்,சிந்தி , காங்கேயம் போன்ற ஒன்றிரண்டு இனங்கள் தான் கிடைக்கிறது , இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்து படங்களை மட்டும் ஒரு பதிவாக போடுகிறேன்.

சிவபாலன் said...

வவ்வால்

ஆமாங்க.. நிறைய காணாமல் போயிருக்கு.. எவ்வளவு காளைகள்..ம்ம்ம்..

பகிர்வுக்கு நன்றி!

வவ்வால் said...

நன்றி சிவபாலன்,

காணாம போகப்போகுது, முழுசா காணாம போகும் முன்னர் அதை காப்பாற்ற வேண்டும்!