Friday, April 13, 2012

சித்திரை-1 இல் புத்தாண்டு கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்




பெரும்பாலோனோர் ஜனவரி -1 அன்று புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் ,ஏனில் பொதுவாக உத்தியோகப்பூர்வ நிமித்தமாக ஆங்கில நாட்காட்டியினை பின்ப்பற்றுவதால் ஏற்பட்ட பழக்கம் ஆகும். ஆனால் அது ஆங்கில காலண்டரும் அல்ல ஆங்கில ஆண்டுப்பிறப்பும் அல்ல போப் கிரிகோரி ரோமன் நாட்காட்டி அடிப்படையில் அமைத்ததுவே நாம் பொதுவாக பயன்ப்படுத்தும் நாட்காட்டி, எனவே ரோமன் ஆண்டுப்பிறப்பே ஜனவரி ஒன்றில் வருவது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில்  ,பஞ்சாங்க நாட்காட்டி அடிப்படையில் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாக கொண்டு ,சித்திரை ஒன்றில் ஆண்டு பிறப்பு கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் சித்திரை ஒன்றில் புழங்கும் 
வருடப்பிறப்புகள்;

காஷ்மீர் -நவரேக்

மஹாராஷ்டிரா- குடி பட்வா

கோவா- குடிபட்வா

பஞ்சாப்&ஹரியானா- பைசாஹி

பீஹார்- வைஷாகா

மேற்கு வங்கம்-போஹேலா பைசாஹி

இராஜஸ்தான் -தப்னா

மணிப்பூர்-சஜிபு நோங்மா பன்பா

பாலி ,இந்தோனேசியா,மொரிஷியஸ் ஹிந்துக்கள்-நியேபி

அஸ்ஸாம்-போஹாஹ் பிஹு

சிந்தி- சேத்தி சந்த்

ஆந்திரா -உகாதி

கர்நாடகா-உகாதி

கேரளா- விஷு

தமிழ்நாடு- சித்திரை புத்தாண்டு

இதில்

#ஆந்திரா,கர்நாடகாவில் சித்திரை ஒன்று மார்ச்-23 இல் வருவதாக கணக்கிட்டு அன்று உகாதி கொண்டாடுகிறார்கள்.

#மஹாராஷ்டிரா,கோவாவில் குடி பட்வா சித்திரை ஒன்று மார்ச் 23 இல் வருவதாக கொண்டாடப்படுகிறது.

மற்ற இடங்களில் சித்திரை ஒன்று ஏப்ரல்-13 இல் வருகிறது, இது சாலிவாகன சகாப்தம் அடிப்படையில் வரும் சாகா சகாப்த காலண்டர் முறையில்.

வட இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு அனைத்தும் அவர்களது அறுவடை திருநாளை ஒட்டி என்பதை கவனிக்கவும். ஆனால் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றுடன் அறுவடை தொடர்புடையது அல்ல , தை முதல் தேதியே அறுவடைக்கு அருகில் வரும்,அன்று பொங்கல் என கொண்டாடுவதே புத்தாண்டு ஆகும். ஆனால் அப்படி நாம் இது நாளும் சொல்லிக்கொள்ளவில்லை அல்லது மறந்து விட்டோமோ அல்லது மறக்கடிக்கப்பட்டமோ. ஆதலால்  சித்திரை ஒன்று என்று இந்திய(இந்துத்வ) வருடப்பிறப்பை கொண்டாடி வருவது வழக்கமாகி போய் இருக்கலாம்.

ஆகவே மக்களே சித்திரை ஒன்றில் கொண்டாடப்படுவது தமிழ் புத்தாண்டா அல்லது இந்திய-இந்துத்வ புத்தாண்டா நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்.


சித்திரை ஒன்றில் புத்தாண்டு கொண்டாடுவோரையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் எனவே வாழ்த்துவோம்...ஏக் கவாலி கானா பாடுவோம்... பங்க்ரா ஆட்டம் ஆடுவோம் ஓஹ் பல்லே ..பல்லே ...

ஜாத்தா ஆயி பைசாஹி !!!
----
பின்குறிப்பு:

#தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,

தை-1 தமிழ் புத்தாண்டு

# படங்கள் தகவல்கள் உதவி ,கூகிள், விக்கிப்பீடியா,நன்றி!

11 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
எனது உளங் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

தி.தமிழ் இளங்கோ,

வணக்கம்,நன்றி!

ஹி..ஹி அப்பவும் தமிழ் புத்தாண்டு தானா? இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்!

Unknown said...

nalla "podi" in the post

Unknown said...

nalla "podi" in the post

ILA (a) இளா said...

எனக்கு மூன்று மாநிலங்கள்தான் கொண்டாடுதுன்னு நினைச்சிட்டு இருந்தேங்க. இவ்வளவா? அறியவைத்தமைக்கு நன்றிங்க!

krishy said...
This comment has been removed by the author.
krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get vote button


தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

சார்வாகன் said...

வணக்கம் சகோ!,

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர்கள் இதை ஒரு பிரச்சினை என்று விவாதம் செய்வது நமக்கு பிடிக்கவில்லை. யார் யாருக்கு எந்த பண்டிகை,என்று எப்படி கொண்டாடனுமோ கொண்டாடுங்கள்.

நாம் இரண்டும் கொண்டாடுவோம்!.பார்டிக்கு வர்ரீங்களா!
அவ்வளவுதான்!

நன்றி

கோவி.கண்ணன் said...

சித்திரை 1 'இந்தி'ய புத்தாண்டு.
:)

இப்ப சமஸ்கிரதம் இருந்த இடத்தில் இந்தி இருக்கு

:)))))

*******

//உத்தியோகப்பூர்வ நிமித்தமாக //

ஏன் இப்படி ? தமிழ்ச் சொற்கள் சிக்கவில்லையா ?

வேலைத் தொடர்பில் - என்றிருக்க வேண்டும்.
:)

R.Puratchimani said...

சகோ வவ்வால்.
ஏன் எல்லோரும் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்? இதில் மிகப்பெரும் உண்மை, இரகசியம் உள்ளது. :)

//ஆகவே மக்களே சித்திரை ஒன்றில் கொண்டாடப்படுவது தமிழ் புத்தாண்டா அல்லது இந்திய-இந்துத்வ புத்தாண்டா நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்//

தமிழ்நாடு வேறு இந்தியநாடு வேறா சகோ :) எல்லாம் ஒண்ணுதான் என்பதே என்னுடைய நினைப்பு

வவ்வால் said...

சூர்யா,
வணக்கம்,நன்றி!
இட்லி பொடி அல்லது மிளகாய்ப்பொடி? :-))

-----
இளா,
வணக்கம்,நன்றி!

நீங்களே இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டிங்களா? :-(
இன்னும் எஞ்சிய மாநிலங்களிலும் வேறு பெயரில் கிட்டத்தட்ட ஒரே போல கொண்டாடுறாங்க, எனவே தமிழ்ப்புத்தாண்டுனு சொல்லிக்கொள்ள முகாந்திரமேயில்லை.

------
கிருஷி,
வணக்கம்,நன்றி!
உங்க திரட்டியப்பார்த்தேன் நல்லா "பளிச்சுனு" இருக்கு.இணைய முயற்சிக்கிறேன்(அப்பாலிக்கா என்னை திட்டப்படாது )

-------
சகோ.சார்வாகன்,
வணக்கம்,நன்றி!

என்ன சகோ ஏதோ மூன்றாம் மனிதர்ப்போல பேசுறிங்க, நம்ம தமிழ், தமிழர்கள், அவங்களுக்கான ஒரு சிறப்பை மூடி மறைக்கப்படும் போது நாம தான் எடுத்து சொல்லணும். சித்திரை எல்லாம் வட மொழி ஊடுருவலுக்கு பின்னர் தான் தமிழகம் வந்திருக்க வேண்டும்.ரொம்ப நாளா ஆகிட்டதாலே அது சரி என விட்டு விட முடியுமா?

10 புத்தாண்டு கூட கொண்டாடலாம் ,பார்ட்டி வைக்கலாம் எல்லாத்துக்கும் வர நான் தயார், அதே போல நமக்கும் ஒரு தமிழ்ப்புத்தாண்டு, இருக்கட்டுமே என்ன இப்போ!

-----
கோவி,
வணக்கம்,நன்றி!

நட்சத்திர வாரத்தில் ரொம்ப முனைப்புடன் பதிவுகள் எழுதி கலக்கிட்டிங்க, இளைப்பார ஒரு பீர் அடிங்க அப்போ தான் புத்துணர்ச்சி பொங்க்கும் :-))

இந்தியப்புத்தாண்டு கொண்டாட எல்லாருக்கும் ஏனோ அதீத மோகம் என்ன செய்ய?
-------
////உத்தியோகப்பூர்வ நிமித்தமாக //

ஏன் இப்படி ? தமிழ்ச் சொற்கள் சிக்கவில்லையா ?

வேலைத் தொடர்பில் - என்றிருக்க வேண்டும்.
:)//
ஹி..ஹி அது வேண்டுமென்றே பயன்ப்படுத்தியது கொஞ்சம் பழைய பாணியில் முயற்சிக்கலாம்னு செய்தது. நான் அவ்வப்போது பழைய பாணி எழுத்து நடையை முயற்சித்து பார்ப்பேன். இன்னும் கூட சில வடச்சொல்களை போடனும்னு நினைச்சேன்,பொறுமையா தேட முடியலை விட்டுட்டேன்.
------
புரட்சிமணி,
வணக்கம்,நன்றி!

எல்லாரும் இந்தியர்களேனு நாம நினைக்கிறோம், ஆனால் மற்றவர்கள் நினைக்கவில்லையே. தமிழன் என்பது இனக்குழு அவர்களுக்கு தனி அடையாளம் உண்டல்லவா,அதை துறந்து விட வேண்டுமா?

பேரில புரட்சிய வைத்துக்கொண்டு இப்படிக்கேட்கலாம சார்வாள்!

உண்மை,இரகசியம் என்றெல்லாம் சொல்றிங்க அதையும் கொஞ்சம்ம் சொல்லிடுங்கோ!
-----