Saturday, November 03, 2012

என்ன கொடுமை சார் இது-9:துவித்தர்,சுவாமி,நாயகன்.



(ஹி..ஹி வருகைப்புரிந்தோர் அனைவருக்கும் வணக்குமுங்க)


முட்டை மந்திரம்!




தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இல் உள்ள பிரிவு 66ஏ என்றால் என்ன என இணையத்தில் தேடிய போது கிடைத்தது...

//Information Technology Act, 2000

66. Hacking with Computer System. -


(1) Whoever with the intent of cause or knowing that is likely to cause wrongful loss or damage to the public or any person destroys or deletes or alters any information residing in a computer resource or diminishes its value or utility or affects it injuriously by any means, commits hacking.

(2) Whoever commits hacking shall be punished with imprisonment up to three years, or with fine which may extend up to two lakh rupees, or with both.//

மூலம்:http://www.vakilno1.com/bareacts/informationtechnologyact/s66.htm

செக்‌ஷன் 66 ஏ கணினியை ஹேக் செய்த குற்றத்திற்கான பிரிவு என இந்த இணைய தளம் சொல்கிறது.

ஹி...ஹி துவித்தரில் ஆபாசமாக கமெண்ட் போட்டதாக சொல்லப்பட்டு  ராஜன் என்பவரும், கார்த்தி சிதம்பரம் அவர்கள் பற்றி கமெண்ட் போட்டதற்காக ,புதுவையை சேர்ந்த ரவிஶ்ரீனிவாசன் மீதும் பிரிவு 66ஏ வின் கீழ் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அப்போ துவித்தரில் கமெண்ட் போடுவது தான் ஹேக்கிங்கா அவ்வ்வ் :-))

என்ன கொடுமை சார் இது!
*****
update:

section 66A of information tectchnology act 2000 , செய்தியில் வந்ததை அப்படியே தேர்வு செய்து கூகிளில் தேடியப்போது கிடைத்த வக்கீல் நம்பர்-1 தளத்தில் இருப்பதை அப்படியே போட்டேன், சட்டம் 2008 இல் திருத்தப்பட்டு , புதிய பிரிவுகளும் 66ஏ வில் சேர்க்கப்பட்டுள்ளதை பதிவர் நந்தவனம் குறிப்பிட்டுள்ளா ,அது இங்கே,

"நந்தவனத்தான் said...
வவ்வாஜி, இன்னமும் 2000ல்ல போட்ட சட்டத்தையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி? சட்டத்தை 2008ல்ல திருத்திவிட்டார்கள்.

66 A Punishment for sending offensive messages through communication service, etc.( Introduced vide ITAA 2008)

Any person who sends, by means of a computer resource or a communication device,-

a) any information that is grossly offensive or has menacing character; or

b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,

c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages (Inserted vide ITAA 2008)

shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine."


முழு ஐடி தண்டனை சட்டமும் இங்க இருக்கு

http://cybercrime.planetindia.net/ch11_2008.htm

சுட்டியில் சென்று முழு சட்டமும் அறிக.

நன்றி, திரு.நந்தவனம்.

------------------
சொல்லி அடிக்கும் சு.சுவாமிகள்!




ஜனதா கட்சியின் தலைவர் அதிரடி பட்டாசு சு.சுவாமி அவர்களின் துவித்தரில் இது போல நிறைய பட்டாசுகள் வெடிக்கிறார் ...



நன்றி:
//https://twitter.com/Swamy39/status/264183595843862528

வலைப்பதிவு:http://swamy39.blogspot.in/2011/11/news-makers-of-2011-dr-subramanian.html

ஹி...ஹி போட்டு தாக்குற பெருந்தலைகளை எல்லாம் விட்டுப்புட்டு புள்ளைப்பூச்சிகளை போட்டு தாளிக்குறாங்களே :-))

என்ன கொடுமை சார் இது!
-------------------------------
லோக நாயகர்- ரீல் அந்து போச்சு!




கி.பி.1987 இல் தமிழில் வெளிவந்த நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு கிரானைட் கல்(எத்தினி நாளுக்கு மைல் கல்லையே இழுப்பதாம்) என்றால் மிகை இல்லை, நாயகன் படம் வெளிவந்த காலத்தில் இருந்தே காட்பாதரின் தமிழ் பரிணாமம் என்றே கூறப்பட்டு வந்தாலும் Time magazine இல் சிறந்த 100 படங்களின் பட்டியலில் இடம் பெற்று ,தரத்தில் குறைவில்லாத தமிழ் படம் தான் நாயகன் என ISO  சான்றும் பெற்றாச்சு, படம் வந்து 25 ஆண்டுகள் உருண்டோடி போயிற்று, ஆனால் இப்போ வந்து லோகநாயகன் அந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.முக்தா ஶ்ரீனிவாசன் மட்டும் கொஞ்சம் தாரளமாக நடந்துக்கொண்டிருந்தால் உலகப்படமாக நாயகன் வந்திருக்கும் என சாம்பிராணி போடுகிறார்.

மணிரத்னத்தின் திறமைக்கும், லோகநாயகரின் திறமைக்கும் உரிய மதிப்பு கொடுத்து கலைப்படமாக ,உலகப்படமாக எடுக்காமல் மிகப்பெரும் லாப நோக்கோடு 5 லட்சம் லாபம் சம்பாதிக்க மட்டுமே தயாரிப்பாளர் ஆசைப்பட்டார் என குண்டை போடுகிறார்.

1987 கால கட்டத்தில் ஒரு கோடி என்பது பெரிய தொகை, 60 லட்சம் பட்ஜெட் போட்டு ஒரு கோடி செலவழித்த படத்தில் இருந்து 5 லட்சம் லாபம் கிடைத்தால் போதும் என நினைப்பது எந்த வகையில் குற்றம் ஆகும்?

5 லட்சம் என்பது முதலீட்டில் மீது 5% லாபமே ஆகும், எந்த ஒரு தொழிலிலும் 12% ரிட்டர்ன் எடுப்பதே சரியான லாப விகிதம் ஆகும், 12% க்கு மேல் கிடைத்தால் உபரி லாபம். பொருளாதாரம் படித்தவர்களுக்கு தெரியும், படிக்காமலே வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் கூட 10% கம்மியா லாபம் வருவது போல வியாபாரம் செய்ய மாட்டார்கள்.

இந்த சமாச்சாரத்தில் அலச நிறைய விடயங்கள் இருக்கு, ஆனால் லோக நாயகர் சொன்னதில் ஃபில்ம் ரோல் குற்றச்சாட்டினை மட்டும் பிரதானமாக பார்க்கலாம்.

தேவையான ஃபில்ம் ரோல்கள் கூட கொடுக்காமல் தினசரி கோட்டா வைத்து கஞ்சத்தனமாக தயாரிப்பாளர் நடந்து கொண்டார் என சொல்லி இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் 1987 இலேயே 100 ரோல்கள் பில்ம் செலவழித்து எடுத்தப்படம் என உண்மையை சொல்லி இருக்கிறார்.

100 ரோல் ஃபில்ம் என்பது தேவைக்கு அதிகமான ரோல்களே.

திரைப்படங்களின் நீளத்தினை ரீல் கணக்கில் சொல்வார்கள்.

ஒரு ரீல் என்பது 1000 அடி, 300 மீட்டர் , சுமார் 11 நிமிடம் ஓடும் அளவுக்கான திரைச்சுருள்.

ஒரு ரோல் colour film negative  என்பது 1000 அடி நீளம் இருக்கும், அதாவது ஒரு ரீல் நீளம் இருக்கும்.

பெரும்பாலும் 35 மி.மீ  திரைப்பட நெகட்டிவ் ரோல்கள் , 1000 அடி, 400 அடி என இரண்டு வகையில் விற்கப்படும். பொதுவாக ஒரு ரோல் ஃபில்ம் என்றால் 1000- அடி நீளத்தையே குறிக்கும்.

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் 12 ரீல் அதாவது 12,000 அடி நீளத்தில் பொதுவாக தயாரிப்பார்கள் , தமிழில் 14-15 ரீல்கள் பொதுவான திரைப்பட நீளம் ஆகும்.

திரைப்படம் எடுக்க திட்டமிடும் போது , film roll எவ்வளவு தேவைப்படும் என்பதையும் கணக்கிடுவார்கள். இதனை இறுதியாக எடிட் செய்து உருவாக்கும் திரைப்படத்தின் நீளத்துடன் ஒரு விகிதாச்சாரத்தில் ஒப்பிட்டு கணக்கிடுவார்கள்.

பொதுவாக 1:4 ,கொஞ்சம் தாராளமாக ஷூட் செய்யலாம் என நினைத்தால் 1:5 என்ற விகிதத்தில் கணக்கிடுவார்கள்.

12 ரீல்  திரைப்படம் எடுக்க 1:4 என்ற விகிதம் எனில் 48 ரோல் ஃபில்மும், 1:5 எனில் 60 ரோல் ஃபில்ம் எனவும் கணக்கிட்டு வாங்குவார்கள்.

ஹாலிவுட் பாணி என சொல்லிக்கொள்ளும் லோக நாயகர் ,முக்தா ஶ்ரீனிவாசை "tight fisted" என கஞ்சத்தனம் என்கிறார். ஆனால் ஹாலிவுட்டில் ஒரு இயக்குனர் இப்படி கணக்கிட்ட அளவுக்கு மேல் ஃபில்ம் செலவழித்தால் படத்திலிருந்தே தூக்கிவிடுவார்கள்,பிறகு ஹாலிவுட்டில் எந்த ஸ்டுடியோவும் வாய்ப்பே கொடுக்காது.

ஹாலிவுட்டில் தயாரிப்பு தரப்பான ஸ்டுடியோ வைத்தது தான் சட்டம்.அதனால் தான் எவ்வளவு ஹிட் கொடுத்தாலும் ஒரு இயக்குனரோ, நடிகரோ 100 படம்ம் எல்லாம் அங்கு செய்ய முடியாது.

கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் , இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் விருப்பத்துக்கு படம் எடுக்க தனியாக தயாரிக்க கிளம்பிவிடுவது அதனால் தான். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஒரு கதையை அவ்வளவு லேசில் அப்ரூவ் செய்யாது.

(ஹி..ஹி நம்ம வாசகி , நம்ம பதிவை தான் படிக்குறாங்க, என்ன கொடுமை சார் இது)


ஏன் திரைப்பட சுருளில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பொருளாதார கணக்கீடு உள்ளது.

கலர் ஃபில்ம் நெகட்டிவ் விலை சர்வதேச விலை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும், முக்கியமாக வெள்ளியின் சந்தை விலையை வைத்து ,அவ்வப்போது விலை மாறும், ஏன் எனில் ஃபில்ம் ரோலில் உள்ள ரசாயன எமல்சன் silver halide ஆகும்.

வெள்ளியின் விலை 1 ரூபாய் ஏறினால் ஃபில்ம் நெகட்டிவின் விலை 10 ரூ ஏறும் என்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்..

திரைப்படம் எடுக்க ஒரு வகையான கலர் நெகட்டிவ் ஃபில்மும்  ,அதனை திரையிடும் சுருளாக print எடுக்க ஒரு வகையான ஃபில்ம் ரோல்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

கலர் ஃபில்ம் நெகட்டிவ்கள்  பல வகையான வேகம், ஒளி அமைப்பில் படமெடுக்க என இருக்கிறது, அதற்கு ஏற்ப கொஞ்சம் விலை முன்ன பின்ன மாறுபடும்.

ஒரு ரோல், 1000 அடி கலர் ஃபில்ம் ரோலின் தற்போதைய சர்வதேச விலை 823 டாலர்கள். நம்ம ஊரில் சுமார் 50,000 Rs பக்கம் என கேள்வி.Kodak,Agfa ,Fuji film போன்றவை கலர் ஃபில்ம் நெகட்டிவ், பிரிண்ட் ஃபில்ம் என தயாரித்து வழங்குகின்றன.

see here: http://motion.kodak.com/motion/Products/Production/index.htm

இன்றைய நிலவரத்துக்கு 100 ரோல் ஃபில்ம் விலை மட்டும் ஐம்பது லட்சம் விலை வரும், டாலர் அடிப்படையில் என்பதால் 1987 இல் ஒரு டாலர் சுமார் 20-22 ரூபாய் அளவில் தான் இருந்தது. 20 ரூ என கணக்கிட்டாலும் அன்றைய விலைக்கே 100 ரோல் கலர் நெகட்டிவ் 20 லட்சம் வருகிறது.

அதாவது படத்தின் பட்ஜெட் ஒரு கோடியில் 20% , இது பொருளாதார ரீதியாக தவறான செலவீனம்.

இன்று 500 ரோல்கள் எல்லாம் வீணடிக்கும் உலகமகா இயக்குனர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் , ஆனால் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்பதை கணக்கில் கொண்டால் இது பெரிய தொகை இல்லை எனலாம்.500 ரோல் ஃபில்ம் விலை சுமார் 2.5 கோடி வரும். 100 கோடியில் 2.5% மட்டுமே.

ஆனாலும் தேவை இல்லாமல் ஃபில்ம் ரோல்களை வீணாக்குவதாலேயே படத்தின் பட்ஜெட் முதலில் கணக்கு போட்டதை விட தாண்டி போவது வழக்கம்.

மேலும் எடுத்த அனைத்து கலர் நெகட்டிவ்களையும் லேப்பில் கொடுத்து பிராசஸ் செய்து நெகட்டிவ் மற்றும் எடிட் செய்ய ஒரு பாசிட்டிவ் என தயாரிக்க வேண்டும். முதல் பிரதிஎன்பது  பாசிட்டிவில் எடிட் செய்து திரையிடும் வகையில் ஒரு படம் என ஒன்றை உருவாக்குவது ,பின் முதல் பிரதியின்  அடிப்படையில் நெகட்டிவில் எடிட்டிங் செய்து , பின்னர் அனைத்து திரையரங்குகளுக்கும் பிரிண்ட் போட்டு விநியோகம் செய்வார்கள்.

இப்பொழுது நான் லீனியர் எடிட்டிங்க் எல்லாம் வந்த பின் வேலை சுலபமாக நடக்கிறது. இதனை "Non_Destructive editing" எனவும் சொல்வார்கள் ஏன் எனில் உண்மையான ஃபிலிமில் கட் செய்வதே இல்லை,அனைத்தும் டிஜிட்டல் இண்டர் மீடியத்தில் மட்டுமே.

100 ரோல் ஷூட்டிங்க செய்தால் அதில் பல தேவையில்லாத ஓ.கே செய்யாத ஷாட்களும் இருக்கும், ஆனால் அனைத்தையும் பிராசஸ் செய்து பின்னரே எது தேவை ,தேவையில்லை என எடிட்டர் கண்டுப்பிடிப்பார்.எடிட்டரின் பணி குப்பை தொட்டியை கிண்டி புதையல் எடுப்பது போல :-))

நம்ம ஊரில் ஒரு அடி கலர் நெகட்டிவ் டெவெலப் செய்ய சுமார் 10 ரூ இன்றைய அளவில் பில்ம் லேப்கள் வசூலிக்கின்றன.ஹாலிவுட்டில் ஒரு அடிக்கு 0.16 முதல் .20 டாலர்கள்.

100 ரோல்கள் என்றால் ஒரு லட்சம் அடி அதனை 10 ரூபாயால் பெருக்கினால் சுமார் 10 லட்சம், பின்னர் நெகட்டிவ் பிரிண்ட், ஒரு மாஸ்டர் பாசிடிவ் பிரின்ட் என எல்லாம் சேர்த்து , 100 ரோல் வாங்க என்ன செலவாயிற்றோ அதே அளவுக்கு முதல் பிரதி எடுக்கவும் செலவாகும்.அதுக்கு அப்புறம் எடிட்டிங்க் இன்ன பிற போஸ்ட் புரொடக்‌ஷன் செலவுகள் இருக்கு.

பல படத்தயாரிப்பாளர்கள் பட்ஜெட் எகிறிவிட்டால், ஷூட்டிங்க் முடித்துவிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் செய்ய பணமில்லாமல் தவிப்பதுண்டு.

1987 இல் 20 லட்சம் ஃபில்ம் ரோல் வாங்க செலவாகியது என்றால் மேலும் 20 லட்சம் முதல் பிரதி தயாரிக்கவும் ஆகி இருக்கும்.ஒரு லட்சம் அடியில் 14 ஆயிரம் அடிக்கு தான் படம் மீதி எல்லாம் குப்பைக்கு தான் போயிருக்கும்.

இதனாலாயே ஹாலிவுட்டில் ஃபில்ம் ரோல்களை சிக்கனமாக்க தான் பயன்ப்படுத்த சொல்வார்கள். இப்போது 2013 க்கு அப்புறம் ஹாலிவுட்டில் செல்லுலாய்ட் 35 மி.மீ ஃபில்ம் என்பதே புழக்கத்தில் இருக்காது என சொல்கிறார்கள்.படம் எடுப்பதும் டிஜிட்டல், திரையிடுவதும் டிஜிட்டல் என மாற 2013 ஐ காலக்கெடுவாக வைத்துள்ளார்கள். எல்லாம் செலவீனத்தினை கட்டுப்படுத்தவே.இன்செப்ஷன் , பேட்மன் படங்களை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் , படம்பிடிக்க கண்டிப்பாக 35 மி.மி ஃபில்ம் ரோலை தான் பயன்படுத்த வேண்டும், எனவே ஹாலிவுட் இயக்கினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

காரணம் டிஜிட்டல் விலை மலிவு என்றாலும் அதன் தரம் செல்லூலாய்ட் எமல்ஷன் ஃபில்ம் அருகில் கூட இருக்காது என்பதை இயக்குனர்களும் ,ஒளிப்பதிவாளர்களும் அறிவார்கள். டிஜிட்டலில் படம் எடுப்பது ,புரொஜெக்‌ஷன் செய்வது எல்லாம் செலவை குறைக்கவே மற்றபடி டிஜிட்டல் தரம் இன்னும் ஃபில்ம் ரோல் அளவுக்கு முன்னேறவில்லை.

படத்தின் நீளத்தைப்பொறுத்து ஒரு படத்தின் திரைப்பிரதி தயாரிக்க சுமார் ரூ 70,000 இல் இருந்து ரூ  100,000 வரையில் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட் என்றால் ஒரு 300 ஜிபி ஹார்ட் டிஸ்க்கில் Digital cinema package(DCP) என்ற ஃபார்மேட்டில் ஒலி, ஒளி அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தியேட்டருக்கு அனுப்பப்படும், இதற்கு சுமார் ரூ 5000 போதும். ஆனால் நம்ம ஊரில் QUBE அல்லது UFO வில் அனுப்ப ரூ 20,000 ஆகிறதாம். Qube என்பது ஒரு digital film distribution server and player மட்டுமே அதனுடன் தனியாக , digital projector இணைக்க வேண்டும்.மேலும் கியூப் முறை E-cinema format மட்டுமே சப்போர்ட் செய்யும்,,dcp ஃபார்மேட் செய்வதில்லை. இப்போது கியிபிலும் dcp வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி, மேலும் இந்த விலை வித்தியாசம்,மற்றும் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் போன்றவற்றை இன்னொரு தனிப்பதிவில் காணலாம்.

இப்போ உங்களுக்கே புரிந்திருக்கும் , 1987 இல் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்திற்கு 100 ரோல் பில்ம் சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவழித்தது பெரிய விடயம் அல்லவா. அக்காலத்தில் பெரும்பாலான படங்கள் சுமார் 50-60 ரோல்கள்  செலவழித்தே எடுக்கப்பட்டது.  உண்மையில் ஒரு காட்சியினை எப்படி எடுப்பது என சரியான திட்டமிடாமல் (shot composition) படம்பிடித்தால் மட்டுமே ஃபில்ம் ரோல் நிறைய செலவாகும்.

இயக்குனர்கள் பாலா ,செல்வராகவன் போன்றோர் இப்படி ஃபில்ம் ரோலை கண்டபடி செலவு செய்தே தயாரிப்பாளருக்கு நஷ்டம் உண்டாக்குவது வழக்கம் என திரையுலகில் ஒரு பேச்சுண்டு. அதே வேலையை தான் அக்காலத்தில் மணிரத்னமும் செய்திருப்பார் போல, அதனையே தயாரிப்பாளர் முக்தா ஶ்ரீனிவாசனும் சொல்ல வருகிறார்.

மேலும் லோகநாயகர் அவரே ஃபில்ம் ரோல் கொடுத்து படபிடிப்பை தொடர்ந்து நடத்த உதவியதாக சொன்னதையும் தயாரிப்பாளர் இல்லை என மறுத்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்காத ஃபில்ம் ரோல், ஓல்டு ஸ்டாக் போன்றவற்றை ஒளிப்பதிவாளர்கள் பயன்ப்படுத்த தயங்குவார்கள். ஏன் எனில் அவற்றில் சில சமயங்களில் சரியாக பதிவாகாமல் போகலாம், காரணம் controlled temperature  இல் தான் ஃபில்ம் ரோல்கள் வைத்திருக்க வேண்டும், இல்லை எனில் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை "silver halide" கிரகித்து நீர்ப்படலம் (fog)உருவாகிவிடும், இதனால் படம் எடுப்பது பாதிக்கப்படும். உப்பினை திறந்து வைத்திருந்தால் நீர் பிடிப்பது போல, இதனை  hygroscopic  nature என்பார்கள்.

எனவே ஃபில்ம் ரோல் கொடுத்து உதவினேன் என சொன்ன கதையும் அடிப்பட்டு போச்சு. மேற்கண்ட உதாரணங்களே லோக நாயகர் விட்ட கதையை கந்தல் ஆக்கும் போது அவர் சொன்ன மற்ற கதைகளும் இப்படியானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு படம் அனைவராலும் பாராட்டப்பட்டு , 25 ஆண்டுகள் கடந்த பின் யாருக்கு உண்மை தெரியும், கேள்விக்கேட்க போறாங்க என அவதூறாக பேசுவதை தடுக்க எல்லாம் சட்டம் ஒன்றும் செய்யாது போல இருக்கே :-))

பிரபலம் அவதூறாக பேசினால் அதனை கேள்விக்கேட்க அவரை விட ஒரு பெரிய பிரபலத்தால் மட்டுமே நம்ம நாட்டில் முடியும் போல :-))

என்ன கொடுமை சார் இது!
------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி, கோடாக், ரெட் ஒன்,ஆசியன் ஏஜ்,தி இந்து, இணைய தளங்கள்,நன்றி!
-----------------------

21 comments:

ராஜ் said...

வவ்வால்,
இந்த போஸ்ட் என்னோட டாஷ் போர்டுல 25 தடவை காட்டுது..போஸ்ட் புப்ளிஷ் பண்ணிட்டு திரும்பவும் எடுத்து இருக்கீங்க போல்...... :):):)
சு.சுவாமி ட்வீட்ஸ் நிறைய செம காமெடியா இருக்கும்..அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புனா அதை குப்பை தொட்டிக்கு அனுப்பிடுவேன்னு அவரே சொல்லி இருக்கார்.
இல்லாட்டி அவர் ஐயர் ஆக் இருக்கிறதால ஒரு பயமாய் கூட இருக்கலாம்... :):):)
கமல் இப்ப ஹாலிவுட்ல் படம் இயக்க போய் இருக்காரே..பார்போம் Barrie M. Osborne தயார்க்கிற ஒரு படத்தை இயக்க போறாருன்னு நியூஸ் பார்த்தேன்..பார்போம் அங்க போய் பட ரோல்லை வேஸ்ட் பண்ணாம படம் எடுக்கிறான்னு ....????

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

அது தப்பா ,டிராப்ட்ல இருந்தது எல்லாம் செலக்ட் ஆகி பப்ளிஷ் ஆகிடுச்சு ,இப்போ தான் எல்லாம் டெலிட் செய்தேன் ,இன்னுமா 25 காட்டுது?

ஆமாம் சுவாமி தில்லா ,துவித்தர் ,பிலாக்னு போட்டு தாக்குறார், அங்கே எல்லாம் வச்சுக்கவே மாட்டாங்க :-))

ஏமாந்த சோணகிரி பிலாக்கர், துவித்தரை தான் பிடிச்சு போடுவாங்க. சுவாமி பிலாக்கில இன்னும் செமையா போட்டு வாங்கி இருப்பார், கேஜிபி உளவாளி என்ரெல்லாம் கட்டுரை இருக்கு.

ஹாலிவுட்டில் எல்லாம் பொத்தினா போல வேலை செய்வார் :-))

இன்செப்ஷன் படம் எடுக்க 1.5 வருஷம் ஆச்சுன்னு பொதுவா சொன்னாலும் ஷூட்டிங் நடந்தது மொத்தம் 55 நாள் தான் அந்த அளவுக்கு முன் கூட்டியே திட்டம் போட்டு வேலை செய்வாங்க. ஸ்பாட்ல போய் உட்கார்ந்துக்கிட்டு யோசிக்கிற வேலை எல்லாம் கிடையாது அங்கே.

Anonymous said...

ஹை டெஃபனிஷனல்லாம் வந்தப்புறமும் டிஜிட்டல், ஃபிலிம் அளவுக்கு வரவில்லையா? ரெட் காமிரா என்றெல்லாம் சொல்கிறார்கள், கமல் படமே டிஜிடலில் எடுத்தார்களே?

சரவணன்

JR Benedict II said...

சூப்பர் பதிவு அண்ணா குறிப்பாக பிலிம் ரோல்சை பற்றி மிக தெளிவாக விளங்கபடுத்தி இருக்கீங்க (இந்திய காசோடு சேர்த்து).. பதிவு உண்மையிலே கலக்கல் ரெண்டுவாட்டி வாசிக்க வைச்சுட்டிங்க..

//ஹி..ஹி நம்ம வாசகி , நம்ம பதிவை தான் படிக்குறாங்க, என்ன கொடுமை சார் இது//

அட அது டுவிட்டர் (????) போல இருக்கு.. டுவிட்டர்ல எப்போ வவ்வால் வந்திச்சு? சொல்லவே இல்ல..

ராஜ் சொல்வதை போல எனக்கும் அப்படியே டேஸ்போர்டில் உங்க பதிவுகள் ஆக்கிரமித்துள்ளன.. (இப்பவும்) ஆனா ஓபின் பண்ணினா Sorry, the page you were looking for in this blog does not exist. ன்னு வருது

நன்றி

Anonymous said...

பதிவு சூப்பர்...




By-Maakkaan.

Anonymous said...

Got bombarded with your posts Vavvaalji...I thought you published everything before going to Velur J ..:)

சார்வாகன் said...

வணக்கம்
வவ்வால்& அசின்.
இன்றுதான் வணக்கம் சொல்வதற்கு நல்ல பலன் கிடைத்தது.ஹி ஹி.
*********
இணையத் த்கவல் சட்டம் கணிணி தகவல் மையம் என் கூறுகிறது அல்லவா அந்தவகையில் இணையமும் வரலாமா?
சரி எதுக்கு வம்பு!!!!!
*****
அண்ணன் சு.சாமி கிளம்பிடாருய்யா,கிளம்ப்பிட்டாரு. இனி அரசியல் களை கட்டும். சு.சாமி என்ன சொனாலும் தப்பு ஆகாது. கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்க்ளே!!
***********

நாயகன் போல் கருத்து கொண்ட ராபின் ஹூட் படங்கள் இப்போது ஓடாது. ஏன் எனில் ஒலகமயமாக்களில் நேற்றைய நாயகர்கள் இன்று வில்லன் ஆகிவிட்டார்!!.அபோது அந்த அள்வு வெற்றி கிடைத்ததே பெரிய விடயம்.சும்மா இருக்காம இதில் புலமபல் வேறு.

*************

ஃபிலில் நல்லா ஓட்டிக் காட்டியதற்கு நன்றி!!!

வில்லனின் விநோதங்கள் said...

அவ்வ்.. எதோ கீச்சுகள் பற்றினு பார்க்க வந்தேன், பார்த்தா கடவுள் துவேஷமால்லே இருக்கு...

? said...

வவ்வாஜி, இன்னமும் 2000ல்ல போட்ட சட்டத்தையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி? சட்டத்தை 2008ல்ல திருத்திவிட்டார்கள்.

66 A Punishment for sending offensive messages through communication service, etc.( Introduced vide ITAA 2008)

Any person who sends, by means of a computer resource or a communication device,-

a) any information that is grossly offensive or has menacing character; or

b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,

c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages (Inserted vide ITAA 2008)

shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine.

முழு ஐடி தண்டனை சட்டமும் இங்க இருக்கு
http://cybercrime.planetindia.net/ch11_2008.htm

கூடவே இன்னும் சில விஷயமும் இருக்கு... ஒருவரை ஆபாசமாக படம் பிடித்து போட்டால் அல்லது ஏமாற்றினால் 3 வருசம். அதைவிட இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு எதிராக இணையத்தில் எழுதினால் ஆயுள் தண்டனையாம் (section 66F).


-------------------
தற்பெருமையால் வீணாய் போனவர்தான் லோகம். ஆஸ்கர் நாயகன்னு பில்டப் கொடுத்த இவரு ரகுமான் ஆஸ்கார் வென்றதும் என்ன சொன்னாருன்னு தெரிஞ்சதுதானே? பிரபுதேவா பாப்புலர் ஆன போது இவரு உதிர்த்த முத்து- "நல்ல காலம் பிரபுதேவா இந்தியாவுல பொறந்தாரு, ஏன்ன அமெரிக்காவுல தெருவுக்கு தெரு பிரபுதேவா மாதிரியே ஸ்டீர்ட் டேன்சருங்க இருப்பாங்க".ஆனா லோகம் சொல்லாத விடயம் என்னன்னா அமெரிக்கா டீவி நடிகனுகளே லோகம் ரேஞ்சுக்கு நடிப்பாங்க என்பதுதான்.
-------------

பிலிம் ரோலை பத்தி எங்க ரீலு அந்து போற அளவுக்கு ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கறீங்க, வாழ்க!

செழியன் said...

எப்ப ஏன் கமலை எல்லாரும் கழுவி உத்துரிங்க

வவ்வால் said...

சரவணன்,

மும்பை எக்ஸ்பிரஸ்(2005) முதல் டிஜிட்டல் படம் என்கிறார்கள். ஆனால் இன்று வரை 4 கே அளவுக்கு தான் டிஜிட்டலில் படம் பிடிக்க முடியும், ஹை டெஃபினிஷன் என்பதெல்லாம் ஒரு ஸ்டாண்டர்டரைசேஷன் அவ்வளவு தான், எம;ஷன் அடிப்படையில் ஃபில்மில் பிக்சல் அளவெல்லாம் இல்லை , அதன் ஒளித்தன்மை அளவிட முடியாதது. தோராயமாக 4கே ரெசொலுஷன் போல 20 மடங்கு என்கிறார்கள். எனவே ஃபில்ம் அளவுக்கு டிஜிட்டல் வர இயலாது. இருப்பதில் சிறந்த டிஜிட்டல் என ரெட் ஒன், சோனி எஃப்65 கேமராக்களை சொல்லலாம்.

4கே யில் படம்பிடித்தாலும் திரையிட 2கே டிஜிட்டல் பிரிண்ட் தான் :-))

(ஹாலிவுட்டில் இப்போதெல்லாம் 4கே பிரிண்ட் தான்)

மேலும் விரிவாக டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் பற்றிய பதிவில் சொல்கிறேன்.
----------------

ஹாரி,

நன்றி!

சினிமா பற்றி சொன்னதும் என்னா ஒரு ஆர்வம், ரெண்டு தடவை படிக்கிறிங்களே, உங்களுக்காகவே இன்னும் சில சினிமா பற்றிய பதிவுகள் போடலாம் போல இருக்கே :-))
**
ஹி...ஹி அது வலைப்பதிவு தான் பின்னூட்ட பகுதி பார்க்கிறாங்க. அட நம்ம பெருமைய சொல்லிக்க விட மாட்டேங்கிறாங்களே, உடனே அது துவித்தர்ன்னு சொல்லி வாரி விடுறாங்கப்பா :-))
**
தவறுதலாக எல்லா டிராப்டும் செலக்ட் ஆகி இருப்பது தெரியாமல் பப்ளிஷ் கொடுத்துட்டேன் , எல்லாம் பப்ளிஷ் கொடுத்துட்டேன், அப்புறம் டெலிட் செய்த பின்னும் தெரியுது போல்ல , என்ன கொடுமை ஹாரி இது :-))

-------------
மாக்கான்,

நன்றி!
------------

ரெவரி,

நன்றி!

அப்போ எனக்கு கன்ஃப்ர்மா களி தான்னு முடிவே கட்டிடீங்களா அவ்வ் :-((

தவறுதலாக டிராப்ட் எல்லாம் பப்ளிஷ் ஆகி டெலிட் செய்துவிட்டேன், அத்இல் இப்படி ஒரு பிரச்சினை வரும்னே உணரவில்லை.
-----------------
சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

வணக்கம், இன்னும் சூப்பர் வணக்கம் எல்லாம் வருதுல்ல :-))

இணைய தகவல் சட்டம் தவறா இருக்கு ,திருத்தம் செய்யப்பட்டு இருக்குனு நந்தவனம் சொல்லி இருக்கார்,பாருங்க.
----
சு.சுவாமிகள் என்ன குண்டு போட்டாலும் வழக்கு போட மாட்டாங்க ,எல்லாம் அவாள் சொன்னா தனி சிறப்பு தானுங்ண்ணா!
-----------

ராபின் ஹீட் போல படங்கள் வேறு வடிவில் வந்துக்கிட்டு தான் இருக்கு, சமீபத்தில் கந்த சாமி, ரஜினியின் சிவாஜி எல்லாம் அப்படித்தானே , இருப்பவரிடம் எடுத்து இல்லாதவரிடம் கொடுப்பது... சினிமா மொழியில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னு , ஹீரோவை நியாயப்படுத்தலாம் :-))
---------------
வில்லன்,
நன்றி!

கடவுள் துவேஷமா ,ஓஹோ ஆழ்வார் பேட்டை ஆண்டவன் தான் உங்க கடவுளா, ஆழ்வார் பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா , பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் போட்டி போட்டு சொல்லவா :-))
----------

நந்தவனம்,

தகவலுக்கு நன்றி!

நான் 66 A of information technology act 2000 @ the hindu news இல் வந்ததை அப்படியே செலக்ட் செய்து கூகிகிள் செய்து எடுத்து போட்டது.

சட்ட திருத்தம் செய்யப்பட்ட பின்னும் ஏன் 2000 என மொட்டையாக செய்தி போடுகிறார்கள் என தெரியவில்லை.

உங்க பின்னூட்டத்தினை பதிவில் அப்டேட் ஆக இணைத்துக்கொள்கிறேன்.
----------
//என்னன்னா அமெரிக்கா டீவி நடிகனுகளே லோகம் ரேஞ்சுக்கு நடிப்பாங்க என்பதுதான்.//

அஃதே...அஃதே, ஆலையில்லா ஊருக்கு இளுப்பை பூ சர்க்கரை போல நம்ம ஊருக்கு லோகநாயகர் என்பதை அவரு அடிக்கடி மறந்திடுறார். புரோஸ்தெடிக் மேக் அப் ஐ அப்பிக்கிட்டு நடிப்பவர்களை ஆஸ்கர் பேனல்/மேலை சினிமா விமர்சகர்கள் பெருசா எடுத்துக்க மாட்டாங்க என்பதை கூட அறியவில்லை.

ரீல் அந்து போனதை மறந்திடக்கூடாதுன்னு தான் இதெல்லாம் :-))
-------------
செழியன்,
நன்றி!

ரொம்ப அழுக்கா இருப்பதால் தான் கழுவி சுத்தப்படுத்துகிறோம் :-))
-------------

Unknown said...

வணக்கம் வவ்வால்,

சூப்பராக அலசியிருக்கிறீர்கள் அத்தோட அது யாரு போட்ட முட்ட.....போட்ட முட்டையா????

”தளிர் சுரேஷ்” said...

அருமையான விளக்கப் பதிவு! எனக்குத்தான் கொஞ்சம் சினிமா(டெக்னிகல்) ஞானம் குறைவு! எனினும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்! நன்றி! என் டேஷ் போர்டிலும் நிறைய காட்டுகிறது உங்கள் பதிவு ஆனால் ஓபன் ஆகவில்லை! தேடி கண்டு பிடிச்சேன்! நன்றி!

ஜோதிஜி said...

அவங்க உங்க பதிவை படிக்கல. ராஜன் விவகாரத்தை முகப்புநூலில் படித்துக் கொண்டுருக்காங்க.

இன்னும் ஒரே ஒரு ஆராய்ச்சி மட்டும் தான் பாக்கி.

ஆனால் எழுதினா பக்கி பய புள்ள என்று ஏஏஏஏஏ என்று திட்டிவிடுவாங்களே?

வவ்வால் said...

இனியவன்,

நன்றி!

அது அரசாங்கம் போட்ட முட்டை அம்மி கல்லையே உடைக்குமுங்கண்ணா :-))
\
------------
சுரேஷ்,

நன்றி!

ஞானம் எல்லாம் நமக்க்கும் கொறவு தான் , கற்றது கணினி அளவு கல்லாதது கூகிள் அளவு, படிச்சதை பகிர்கிறோம்.

நம்ம தப்பு தான் தவறுதலா எல்லாம் செலக்ட் ஆகி இருப்பதை பார்க்காமல் பப்ளிஷ் கொடுத்ததால் அப்படி ஆகிப்போச்சு, சிரமத்திற்கு வருந்துகிறோம்.
--------------

ஜோதிஜி,

நன்றி!

ஏன் ...ஏன்..இந்த காண்டு , எனக்குலாம் வாசகி இருக்கமாட்டாங்களா? என் பதிவை படிக்கிறாங்கன்னு சொன்னதும் ஆள் ஆளுக்கு அது துவித்தர், முகப்புநூல்னு சொல்லிக்கிட்டு ,

ஹி...ஹி நான் ஒரு பதிவு போட்டதும் அவங்க துவித்தர், முகப்பு நூலில் பகிர்ந்துடுவேன் அதை படிக்கிறாங்க , இப்போ ஓ.கேவா :-))
(முதலில் தமிழ் படிக்க தெரியுமானு கேட்கலை)

அது என்ன ஆராய்ச்சின்னு புரியலை வெளக்கமா சொன்ன அதையும் செய்துடுவோம் ... ஹி...ஹி எவ்வளவோ செய்துட்டோம் இதை செய்ய மாட்டோமா?
---------------

அஞ்சா சிங்கம் said...

அட அராத்து பிடிச்ச வவ்வாலே . டேஷ் போர்டில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பதிவுதான் இருக்கு ..
ஸ்க்ரால் பண்ணி பண்ணி என் சுட்டி விரல் தேஞ்சி போயிடுச்சி .................
******************
66எ பிரிவு ரொம்ப குழப்பமானது அவதூறு என்பதற்கு எது வரையரை என்றே புரியவில்லை .................
தொழுகையின் போது காற்று பிரிந்தவர்கள் எல்லாம் நரகத்தில் போடுவது போல ..........
********************************************************

Anonymous said...

need a post abt these two..

http://kalakakkural.blogspot.in/

http://savukku.net/home1/1658-2012-10-02-10-12-02.html

Anonymous said...

annan vazhga

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

ஏனிந்த உறுமல் , தவறுதலாக டிராப்ட் எல்லாம் பப்ளிஷ் ஆகிடுச்சு ,மன்னிச்சு!!!

-----------

குழப்பமான சட்டத்தினை வைத்துக்கொண்டு சாமனியனை மட்டும் அடக்குறாங்களே, சு.சுவாமி அந்த காட்டு காட்டுறார் எல்லாம் பம்முறாங்க :-))
---------

அனானி,

வைகோ புலிகள் மீதான தடைப்பற்றி பேசியதை வைத்து எழுதியதை நானும் படிச்சேன்,அதை என்ன கிண்ட சொல்லுறிங்க, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா :-))
------

அனானி அண்ணே,

எதுக்கு இந்த வாழ்க? சரி வாழ்வோம்,நன்றி!

aravi said...

Voval why you hate kamalhasan and trying to defame him ?????any personal problem with him. He is just an artist who dedicate himself to flim industries. He is doing good.no doubt, Unkaluku sevapa irunda pudikathu pola?????

வவ்வால் said...

அரவிந்தன்,

நன்றி!

உங்களுக்கே நியாயமா படுதா இது, எனக்கும் லோக நாயகருக்கும் என்ன வாய்க்கா,வரப்பு தகறாரா இல்லை அவரை வச்சு படம் தயாரிச்சு நட்டம் ஆனேனா?

25 வருடம் முன்னர் வந்த படத்திற்கு இப்போ பஞ்சாயத்து வைக்கிறாரே அதை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா?

லோகநாயகர் தான் ஒரு படத்தயாரிப்பாளரை அவதூறு செய்கிறார், ஒரு பார்வையாளனாக யாதார்த்தம் என்ன என சொல்லி இருக்கேன்.

உலகப்படங்களை காப்பி அடித்து எழுப்பது கூட பரவாயில்லை ,அதெல்லாம் கண நேரத்தில் என் மூளையில் உதித்த சிந்தனைனு சொல்லி கதை விடுவதை எல்லாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

ஹி...ஹி லோகநாயகர் காப்பி அடிச்ச படங்களை பற்றி ஒரு கட்டுரை எழுதி பாதியில நிக்குது அதை போட்டிருந்தா என்ன சொல்லி இருப்பீங்களோ :-))