Friday, April 05, 2013

கச்சத்தீவு-மறைக்கப்பட்ட உண்மைகள்!

(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா )


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு) பல மணற் திட்டுக்களும்,சிறிதும் பெரிதுமான பல தீவுகளும் உள்ளன,அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் 12 தீவுகள் உள்ளன,

1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.

அத்தீவுகளின் பெயர்கள்:

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் தீவு

03 புனவாசல் தீவு

04 முயல் தீவு

05 பூமரிச்சான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குருசடி தீவு



இதில் ஓரளவு பெரிய பரப்பினைக்கொண்டது கச்சத்தீவு ஆகும் ,ராமேஷ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, பரப்பளவு சுமார்  285 ஏக்கர்(1.15ச.கி.மீ).

இத்தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

கச்சத்தீவினை தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின்  செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

1974 ஒப்பந்தம்:

பண்டார நாயகா மறைவுக்கு பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக்கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார், இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமைக்கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ,அப்போதைய இந்திய பிரதமரை அனுகினார்.



பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள்,அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது,அது என்னவெனில்,மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி ,ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா சபையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா சபையில் தனக்கான ஆதரவை திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக்கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம்,ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்,அது அல்லாமல் 15 உறுப்பினர்களை தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினை தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினை தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

இது போன்ற "சூப்பர் திட்டங்களை" எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது,எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்க போரின் போது ,பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால் ,அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு ,கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை,அப்பொழது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்புப்பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, சட்டமேதை அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருந்தார் எனலாம். அதனைப்பின்னர் விரிவாக காணலாம்.

இந்திய நாட்டின்  ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை ,இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி ,யாருக்கு சொந்தம் என தெரியாத "டிஸ்பியுட்டட்" லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

இவ்வாறு கடல்ப்பகுதியில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது,புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்.எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில  உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

இதில் நடந்த உரிமை மீறல்களை காண்போம்,

இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில் ,இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும்,அப்படி செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி:

வெள்ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும்,ஜமீந்தார்களும் இருந்தார்கள்,அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வெள்ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார் என ஆவணங்கள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினை கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

கச்சத்தீவுரிமையை நிலைநாட்டும் பல ஒப்பந்தங்கள்,ஆவண விவரங்கள்:

1. During A.D. 1605, the clan of Ramanathapuram Sethupathy King was established by the Madurai Nayaks, incorporating 69 coastal villages and 7 Islands, of which Katchatheevu Island is one of the Island.

2. A copper plate plaque issued by King Koothan Sethupathy who ruled Ramanathapuram during the years 1622- 1635, depicts that the Sea upto Talaimannar belonged to Sethupathy Kings.

3. Coronation flowers which adorn the Goddess, Malai Valar Kathali Ammai of Rameswaram are grown in Katchatheevu Island. Similarly, cattle’s that are donated to the Temple are cared for in Katchatheevu Island and the Milk and other items needed for pooja are brought only from Katchatheevu island.

4. In the Kingdom of Ramanathapuram, there existed a separate account section to maintain and audit the accounts of Kathatheevu Island.

5. In the plaque issued to Jamindarine Mangaleswari Natchiyar, who took over after the period of Ramanathapuram King Muthuramalinga Sethupathy (who was imprisoned for a long period for having opposed the British), it is clearly mentioned that Katchatheevu Island belonged to Ramanathapuram Zamin.

6. There is a clear document evidencing leasing out Katchatheevu Island to East India Company by Ramanathapuram Sethupathy in the year 1822.

7. In Queen Victoria’s 1858 Proclamation whereby the powers got transferred to British Rule from East India Company, reference is made that Katchatheevu Island belong to Ramanathapuram Zamin.

8. P.P.Peris, who during the years of British Rule in 1936- 40, served as an Assistant Draftsman and later became a Ministerial Secretary after Sri Lanka attained independence, on 08.05.1966, made the following statement, confirming that Katchatheevu Island belonged to Ramanathapuram Kings. He says, “During the years 1936-40, when I served as Assistant Draftsman in the Land Survey Department, I was directed to survey the district boundaries of Ceylon. Therefore, I perused all records, documents, historical evidences and the Queen Victoria’s proclamation, by which 1 found that Katchatheevu Island belonged to King Sethupathy, Therefore I drew the Northern District of Ceylon delineating Katchatheevu Island.” This statement issued by the Ministerial Secretary on 08.05.1966, was widely reported in the then Daily Mirror published from Sri Lanka and thereafter reported in Indian Express in India.

9. There is a Registered Document (Registration No. 510/1880, Book 1, Volume 16) evidencing the fact that on 23.06.1880, eight coastal villages and four Island, including the Katchatheevu Island, belong to the Ramanathapuram Sethupathy’s were given in lease by the District Collector, Madurai jointly to one Abdul Kadar Marakayar and Muthusamy Pillai.

10. By a document dt.04.02.1885 (Registration No. 134/1885), Muthusamy Pillai, has taken the Katchatheevu Island on an annual lease of Rs.15 per annum from the Estate Manager of Ramanathapuram Sethupathy for the purpose of procuring dye roots.

11. Under a pact entered into between the Dutch and Ramanathapuram Seethupathy during the year 1767, a clause was incorporated to permit ail those residing Ramanathapuram Zamin can always visit Katchtheevu Island.

12. Baskara Sethypathy of Ramanathapuram, has assigned a portion of Katchatheevu island to Poet Sundaram.

13. When Zamindari Abolition Act came into force, Katchatheevu Island is mentioned as 285 Acres of Government Poromboke land in Ramanathapuram Village.

14. In the Ramanathpuram Gazetteer, issued by S.A.Viswanathan, Assistant Revenue Officer, Madras (then Tamiinadu was called Madras) on 11.11.1958, in Register No.68, Katchatheevu Island is shown as comprised in Ramanathapuram Village.

15. On 01.07.1913, when few Islands were taken on a 15 year lease by the Government of Madras Presidency from Ramanathapuram Sethupathy, Katchatheevu Island is mentioned by the Secretary to Government, as a territory belonging to Ramanathapuram Zamin and situate on the North East of Ramanathapuram.

16. In the year 1947, one K.M.Mohammed Merasa Marakayar, took the Katchatheevu Island on lease from Ramanathapuram Sethupathy. In the documents which was then executed, Katchatheevu Island was shown as a territory situated between Talaimannar and Danuskodi and belonging to Ramanathapuram Suzerainty.

17. In the Land Document Register issued by the Government, firstly issued in the year 1957 and again reprinted and issued as an updated publication, in the year 1966, at page 107, Katchatheevu Island is mentioned as a uninhabited territory belonging to Danuskodi.

18. Between the years 1913 and 1928, many Islands including the Katchatheevu Island were taken on lease from Ramanathapuram Sethupathy Kings and were again sublet to fishermen.

19. On several occasion the Sethupathy Kings, have themselves directly leased out many islands including the Katchatheevu Island to fishermen. There are records to show that fishermen from Tondi and Nambuthazhai have taken such leases.

20. In all the Indian Land Survey Records issued between the years 1874 and 1956, Katchatheevu Island is depicted as an Indian Territory alone. The Indian Land Survey Department has mentioned Katchatheevu Island as, measuring 285 Acres and 20 cents comprised in Survey No.1250,

மூலம்:  http://katchatheevu.com/katchatheevu-is-ours-concrete-evdiences/

நன்றி!
-------------------------



இந்தியா சுதந்திரமடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது,எனவே அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத "டிஸ்பியுட்டட் லேண்ட்" என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும்,அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்துவிட்டார் என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு ,அதன் செயல்ப்படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற , நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை,ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டத்தினை வரையறுத்துவிட்டார்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் சரியாக எல்லைப்பிரிக்காமல் இருந்தது எனவே எல்லைப்பிரச்சினையை தீர்க்க , பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நிலப்பரிமாற்றம் செய்யலாம் எனவும் வழியும் உருவாக்கி இருந்தார், அதை வைத்தே கட்சத்தீவை தாரைவார்த்தார்கள்.

மேலும் அரசியல் நிர்ணய சட்டத்தினை வடிவமைக்கும் போது பல பரிசீலனைகளை அரசியல் தலைவர்கள் முன் வைத்திருக்க கூடும்,எனவே ஆளுவோருக்கு இப்படி நிலத்தை விட்டுக்கொடுக்க அதிகாரம் இல்லைனு சொல்வதை ஏற்கவில்லை போல எனவே , அதுக்கும் ஒரு ஓட்டையும் போட்டுக்கொடுத்திருக்கார், ஆனால் கொஞ்சம் சிக்கலாக ,எளிதில் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாத படி தான் செய்திருக்கார் எனலாம்.

இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை,மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு,மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது(rattification at state council) என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.

அம்பேத்காருக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும் போல நம்ம அரசியல்வாதிகள் வருங்காலத்தில் காசுக்கு நாட்டையே வித்தாலும் வித்துடுவாங்கன்னு எனவே முன்னெச்சரிக்கையாக சிக்கலான சட்டத்தை போட்டு வைத்துவிட்டார்.

கச்சத்தீவினை விட்டுக்கொடுக்கும் நிகழ்வில் டிஸ்பியூட்டட் லேண்ட் என அறிவித்து விட்டுக்கொடுக்க மேற்சொன்ன சட்ட சிக்கலே காரணம் ஆகும்.

கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

இது முடியுமா என சந்தேகம் வரலாம், ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

பெருபாரி வழக்கு:

கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு , மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம் இருந்தது,இதில் ஒரு பகுதி ,கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது,அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன,ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவா ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும்,ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால் ,ஒவ்வொரு முறை செல்லவும்,விசா நடைமுறையினைப்பின்ப்பற்ற வேண்டும்.

எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்கு சொந்தம், எல்லைக்கோட்டினை வரையருக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை,எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

சமாதான பிறா  ச்சே புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு,இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது,ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

(Dr.Bidan chandra roy)


இது நடந்தது 1951 இல்,அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே,அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய் என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம்,இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மத்திய அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது,அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம்.ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள்  செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை,எல்லா எம்.எல்.ஏக்களும் பி.சி.ராய் பக்கமே,போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு,மத்திய அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை,பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

1951 இல் போட்ட வழக்கு ,அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உட்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு,ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

//the Agreement cannot be implemented by a law
relatable  to Art. 3 and legislation relatable to  Art. 368
would be inevitable.
It follows, therefore, that the Parliament acting under Art.
368  can  make a  law to  give effect and  implement the
Agreement  in  question covering  both Berubari  and the
Enclaves or pass a law amending Art. 3 so as to cover  cases
of  cession of the territory of India and thereafter make  a
law under the amended Art. 3 to implement the Agreement.//


முழு தீர்ப்பையும் காண்க:

http://www.indiacourts.in/IN-RE--THE-BERUBARI-UNION-ANDEXCHANGE-OF-ENCLAVES-Vs.-REFERENCE-UNDER-ARTICLE-143(1)-OFTHE-CONSTITUT_81ff5700-42dc-491f-89ab-d6b539e75ba1

----------------
(Nehru and V.Krishna menon)


நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார்,ஏன் எனில் அப்பொழுது மற்றக்கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள்,மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி ,மத்திய அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம்,எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்தப்போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது, மஞ்சத்துண்டு என்ன செய்தார் எனப்பார்ப்போம்.

கொஞ்சம் விரிவாகவே அக்கால திமுக-காங்கிரஸ் உறவைப்பார்ப்போம்,

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக்காக்க ,தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல் ,நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தி எதிர்ப்பு,மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா ,எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள ,கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

மாநில சட்ட சபைக்கும்,நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

சட்ட சபை- 137 இடங்கள்,தனிப்பெரும்பான்மை.

நாடாளுமன்றம்- 25 இடங்கள்.

 இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ,இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட "மைனாரிட்டி அரசு" நிலை தான்.

இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்,காங்கிரசுக்கு தனது 25 எம்பிக்களும்  நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்துக்கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார். பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும்,நேர்மையின் வடிவமான  தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில்  காங்கிரஸ் மீது எத்தகைய  வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம்.அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்,நட்புறவு :-))

அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது , கலைஞர் தலைமையிலான திமுகவும்,இந்திராக்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது.எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி,மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 எம்பிக்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார்,  அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான  ராமநாத புரம் எம்பி மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி எம்பி.பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளே, இந்திராகாந்தி,வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை  தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு :-))

காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் மஞ்சத்துண்டு,தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

 அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல் ஆகும்,வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்த சத்தியநாராயண ரெட்டி என்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார்,எனவே இது  பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ,இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர் , எனவே வழக்கப்படி  தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு,ஊழல் குற்றச்சாட்டினை மத்திய அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால் , பி.சிராய் வழியில் ,உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது எனலாம், ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு "வாலித்தீவு" ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

1976 கட்சத்தீவு ஒப்பந்தம்:

1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை,வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது,ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை,எனவே ஒரு திருத்தம் செய்து ,எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து ,புதிய ஒப்பந்தம் போட்டது,நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக்கொடுத்துவிட்டது,இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை,ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை,எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர் :-))

அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது,அம்புட்டு தான் மஞ்சத்துண்டின் இராச தந்திரம்.

கட்சத்தீவு மீட்பு சாத்தியமா?

1992 இல் ஆட்சிக்கு வந்த அம்மையார் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார்,ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான்,மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உட்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உட்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.
----------------------------

பின்க்குறிப்பு:

# சிற்சில தகவல் &காலப் பிழைகள்(நாள்,வருடம்) இருக்கலாம்,முடிந்த வரையில் சரியான தகவல்களை சேகரித்து அளித்துள்ளேன்,பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.asiastudies.org/index.php?option=com_content&view=article&id=221&Itemid=79

# http://www.eurasiareview.com/08022010-a-tamil-nadu-perspective-on-india%E2%80%99s-bilateral-agreements-center-state-relations/

# http://katchatheevu.com/

# http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/

# http://www.thehindu.com/news/national/jayalalithaa-seeks-early-hearing-on-katchatheevu/article3911978.ece

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!

**********************

85 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இவ்வளவு விஷயங்கள் இதுல இருக்கா? நம்ம அரசியல் வாதிகள் அந்த நாளில் இருந்து இது நாள் வரை சுயநலவாதிகளாக வே இருந்து வந்திருக்கிறார்கள்.வை.கோ. போன்றவர்கள்கூட இவ்விரங்களை மக்களுக்கு தெரிவிக்கவில்லையே!இதில் கட்சி பாகுபாடின்றி கச்சத் தீவை மீட்க.முன்வர வேண்டும்.
பெருபாரி வழக்கு புதிய தகவல்.

Anonymous said...

Vovs,

தகவல்களுக்கு நன்றி.....


-Maakkaan.

suvanappiriyan said...

பல புதிய தகவல்கள்!

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அறியாத பல தகவல்கள்.

இணையம் இருப்பதால் இபோது அறிய முடிகிறது.

இதனை இவ்வளவு காலம் ம்றைத்த அரசியல் தலைகளை என்ன சொல்வது?

சிரிமாவோ,சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பல இலட்சம் மலையகத் தமிழர் திருப்பி அனுப்பப் பட்ட போதும், இதே கதை!!!!!!!!!!

இடத்தைக் கேட்கும் சிங்களன், தமிழனை மட்டும் இடத்தில் இருந்து விரட்டுவான்!!!இதுதான் இலங்கைப் பிரச்சினை!!

ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!

நாய் நக்ஸ் said...

நல்ல பதிவு....

:-))))))))

Amudhavan said...

தமிழகத்துக்கு எதிராகக் காய் நகர்த்துபவர்கள் எல்லாருமே எதிர்காலத்தில் என்ன நடக்கும் அதற்கு இப்போதே என்னென்ன காரியங்களையெல்லாம் செய்துவைக்கலாம் என்கிற ரீதியிலேயே திட்டமிட்டு அதற்கேற்ப செய்து முடித்திருக்கிறார்கள். நம்முடைய தலைவர்கள் எல்லாருமே எந்தவித எதிர்கால திட்டங்களும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக்கொண்டால் போதும் என்பதிலும் பதவியை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி பேருக்கு ஒரு எதிர்ப்பு அறிக்கை மட்டும் கொடுத்து வைக்கலாம் என்றுதான் செயல்படுகிறார்கள்.
கலைஞரைத் தான்நினைத்தபடியெல்லாம் 'கொண்டுவருவதற்கும்' அவரிடம் இருந்த போர்க்குணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கும் இரண்டு மிகப்பெரிய ஆயுதங்கள் இந்திரா காந்திக்குக் கிடைத்தது. ஒன்று கலைஞரின் ஆட்சியில் ஏற்பட்ட ஊழல்களின் சான்றுகள். அது கலைஞராகவேபோய் மாட்டிக்கொண்டது.

இரண்டாவது எம்ஜிஆர்.

எம்ஜிஆர் என்ற துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு தமிழகத்தில் என்னென்ன நடைபெறவேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்களும் ஆட்சியாளர்களும்(அதிகாரிகள் வர்க்கம்)நினைத்தார்களோ அது அத்தனையையும் நடைபெறச் செய்துவிட்டார்கள். கலைஞரை அவர்களுடைய கைப்பாவையாக ஆக்கிவிட்டபின் எம்ஜிஆரையும் மிகச்சுலபமாக தாங்கள் சொன்னது கேட்கும் 'பப்பெட்டாக'(அவர் ஏற்கெனவே அப்படித்தான் என்பது வேறு விஷயம்)மாற்றிவிட்டார்கள்.

இது சம்பந்தமாய் ஆய்வு செய்யுங்கள். இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு பரபரப்பான புத்தகம் எழுதும் அளவுக்குச் செய்திகள் கிடைக்ககூடும்.
கச்சத்தீவு பற்றிய கட்டுரை சரியான தகவல்களுடன் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

முரளி,

வாங்க,நன்றி!
இதெல்லாம் ஆவணமாகி வெளியில் வந்தது,வெளியில் வர்ராமல் இன்னும் எம்புட்டு இருக்கோ,.அதெல்லாம் அவங்கங்க மனசாட்சிக்கு தான் வெளிச்சம்.

வைக்கோ மட்டும் என்ன செய்வார் அரசியல் தான் செய்வார்,அவரும் கழகத்தில் அப்போ இருந்து தானே இருப்பார்.

அப்பொலாம் மத்திய அரசைப்பார்த்து மாநிலத்தலைவர்கள் உள்ளுக்குள் பயந்துக்கிட்டு தான் இருப்பாங்களாம்,எப்போ வேண்டும்னாலும் ஆட்சியை கலைத்துவிட்டு,உள்ளத்தூக்கிப்போடுவார்கள்.எனவே தான் திமுக தேர்தல் வரிக்கும் சவுண்டு விட்டுவிட்ட் ,தேர்தல் முடிந்ததும் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வழித்தான் எம்ஜிஆருக்கும்.
--------------

மாக்ஸ்,

வருகைக்கு நன்றி!
---------------

சுபி.சுவாமிகள்,

வணக்கம்,நலமா,வருகைக்கு நன்றி!
---------------

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

இணையம் இருந்தாலும் உண்மைய ஏற்க எந்த அரசியல் கட்சியின் தொண்டனுக்கும் மனசே வருவதில்லை.

நம்ம தலைகள் வழக்கமா செய்வது இதான், மளிகை கடை லிஸ்ட் போல எழுதிய கடிதம்,அடித்த தந்தி, போட்ட தீர்மானம்னு பெருமையாக சொல்லிப்பாங்க,அப்புறம் எதுகை மோனையில் ,தென்றலை தீண்டியதில்லை தீயை தாண்டியிருக்கேன் போன்ற வசனங்களை தகர டப்பா வாய்சில் சொன்னாப்போதும் தொண்டர்கள் புல்லரிச்சு போய்,அய்யய்யயோ தமிழினத்தலைவன்டானு கைத்தட்டுவாங்க :-))

# இலங்கை குடியுரிமை சட்டம்,மக்களை நாடுக்கடத்தியது எல்லாம் முன்னர்ப்பேசி வம்பாப்போச்சு ,சில இணையப்பெருச்சாளிகள் இதான் சாக்குனு புடிச்சு பிறாண்டிப்புடுங்க :-))

அதுக்கு ஒருப்பதிவு போடனும்னு ரொம்ப நாளா நினைப்பேன்,பெருச்சாளிக்கூட்டத்தை நினைச்சு அப்படியே விட்டுறது.
-----------

நக்ஸ் அண்ணாத்த,

வாரும்,

நல்லப்பின்னூட்டம்,நன்றி!!!
-------------------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

உங்களுக்கு பின்னர் விரிவா ஒரு பதில் அளிக்கிறேன்.

ஜோதிஜி said...

எனக்கு தான் நன்றி சொல்லனும்.

கிளப்பி விட்டதுக்கு.


நீங்க சொன்ன ராமநாதபுரம் மன்னர் சார்ந்த உண்மைகள் முற்றிலும் உண்மை. அந்த ஆதாரங்கள் கூட படித்தேன்.

கிருஷ்ணமேனன் படத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கின்றேன்.

மஞ்சதுண்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத நேயர் விருப்பத்தை இங்கே வைக்கின்றேன்.

பேரு நல்லாயிருக்குல்லே.

அப்புறம் ராஜநடராஜ்ன் வலைதளம் வேலை செய்யவில்லையோ?

ஜோதிஜி said...

இதில் விட்டுப்போன தகவல் ஒன்று உண்டு.

இந்திரா காந்தி இந்த ஒப்பந்தம்நிறைவேற்ற அதிகார மட்டத்தில் நிறைய ஆமாம்சாமிகளை போட்டு பிரச்சனைக்குரிய நபர்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி வைத்தார்.

Anonymous said...

வவ்வால்,

கச்சத்தீவு விடயத்தில் "கஞ்சிகளின்" பங்களிப்பு பற்றி ஒன்றுமே இல்லையே....சும்மாவா இருந்திருப்பார்கள்????...விஷக்கிருமிகள்...இன்றும் கூட வெளியுறவுத்துறை அவர்களின் கூடாரம் தானே....

-கொங்கு நாட்டான்.


? said...

கட்சத்தீவு குறித்து அறியாத் தகவல்களை அளித்திருக்கின்றீர் நன்றி.

காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒரே ஒத்த கொள்கை மக்களின் கோவணத்தைக்கூட உருவுவதுதான். இந்திரா காந்தி இதே மாதிரிதான் பாகிஸ்தானுடனும் சொதப்பினார், போரில் வெற்றி பெற்ற பின்னும் பாக் ஆக்கிரமித்த நிலத்தை மீட்கவில்லை. போதக்குறைக்கு அவருக்கு தமிழ்நாட்டில் எம்ஜியார் கருணாநிதி என இரு அடிமைகள் சிக்கிவிட்டார்கள்.இதை வைத்து இலங்கையுடன் நட்புறவை வளக்குறேன் என கச்சத்தீவை அளித்தார்.வாங்கிய கையோடு இலங்கை அரசியல்வாதிகள் புத்தியை காட்டிவிடவே தமிழருக்கு ஆயுதம் அளித்து தீவிரவாதத்தை வளர்த்து இலங்கை அரசினை அடக்கப்பார்த்தார். அதில் பல அப்பாவி மக்கள் செத்ததுதான் மிச்சம். ஈழம் காஷ்மீர் வடகிழக்கு என பல இடங்களில் போரும் அழிவும் நேரு குடும்பம் அளித்த பரிசுகள்.

இலங்கையில் போர் நடந்து மக்களை செத்த போது ஏதும் செய்யாமல் இப்போ ஆவூன்னு தமிழக அரசியல்வாதிகள் ஊடுகட்டுவது போல இந்த பிரச்சனையிலும் கை மாற்றும் போது சும்மா இருந்துவிட்டு கோர்டில் கேசு போட்டு தீவினை மீட்க முடியுமா என தெரியவில்லை.

சஞ்சய் said...

வவ்வால்,

பல தகவல்களைத் திரட்டி பதிவிட்டமைக்கு நன்றி.

…/இதெல்லாம் ஆவணமாகி வெளியில் வந்தது,வெளியில் வர்ராமல் இன்னும் எம்புட்டு இருக்கோ,//

…நீங்கள் சொல்வது போல கண்ணுக்குத் தெரிந்து இவை நடந்திருக்கிறது. தெரியாமல் என்னென்ன ஒப்பந்தம் போடப்பட்டதோ?


அந்த காலத்திலிருந்தே மத்தியில் கூட்டணி வைத்துக்கொண்டு ஊழல் பண்ணுவது திமுக, அதிமுகவிற்கு கைவந்த கலை. அதற்கு முதலில் அச்சாரம் போட்டது திமுக. இன்றுவரை அதை செவ்வனே கடைபிடித்து வருகிறது. என்ன அன்று மாநில அளவில் ஊழல் செய்துகொண்டிருந்த மாண்புமிகு மஞ்சதுண்டு மேம்படுத்தி மத்திய அளவில் சென்றுள்ளார்.

சிவானந்தம் said...

வவ்வால், அருமையான பதிவு.

சில சமயம் காசு கொடுத்து வாங்கும் பத்திரிகைகள் கூட விவரமாக எழுதுவதில்லை, அந்த அளவுக்கு தகவல்கள் இருக்கிறது.

இந்த உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

உங்களுக்கு சொல்லாம யாருக்கு நன்றி சொல்ல, நாம வத்திக்குச்சி போல தானா பத்திக்கிறதில்ல, ஹி...ஹி சமயத்துல "தண்ணியில" நமுத்துப்போயி வேற இருக்கும் :-))

நிறைய தவிர்த்துவிட்டே எழுதியிருக்கிறேன்,அரசியல் சம்பவங்களில் ஆய்வு செய்தால் எங்கே ஆரம்பிப்பது என்ற குழப்பம் வந்துவிடுகிறது,உங்களுக்கே அந்த அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்.

மஞ்சத்துண்டு காவியம்ம் எழுதினால் ஏகப்பட்ட வம்பு வருமே, ஏற்கனவே உ.பிக்கள் என் மேல காண்டாக திரியிறாங்க,நாம என்னமோ எல்லாரையும் தான் கலாய்க்கிறோம்,ஆனால் அவர்களுக்கு மஞ்சத்துண்டை மட்டும் கலாய்ப்பதாகவே தெரிகிறது.

# நீங்க சொன்னாப்போல தான் அரசியலில் தலையாட்டுகிற அதிகாரிகளை தான் அருகில் வைத்துக்கொள்வார்கள். இந்திராக்காந்தியும் அதற்கு விதிவிலக்கல்ல.

#ராச நட வலைப்பதிவு வேலை செய்யுதே,ஆனால் அவர் தான் வேலை செய்யக்காணோம், எங்கோ ஒட்டகத்துடன் மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கார் போல வருவார்.
-------------

கொங்குநாட்டார்,

இந்திராகாந்தி காலத்தில் சீக்கியர் லாபி தான் அதிகம்,மேலும் வட இந்தியர்களுக்கே முன்னுரிமைனு போயிட்டு இருந்துச்சு. பின்னர் தான் தென்னிந்தியர்கள் கொஞ்சம் தலை தூக்கினாங்க.

--------------------
நந்தவனம்,

வாரும்,நன்றி!

இதெல்லாம் உங்களுக்கும் அறியாத தகவல்களா ஆச்சரியமா இருக்கு.

காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் பொற்காலம் முடிந்த பின் ஏதேனும் ஒரு மாநிலக்கட்சியை அல்லக்கையாக வைத்துக்கொண்டு விரும்பியதை சாதித்தது,ஒருத்தர் வெளியில் போனால் இன்னொருத்தர் உள்லே வந்து,கடைசி வரையில் காங்கிரசுக்கு சேவகம் செய்தார்கள்.

பல உள்நாட்டு/அயல்நாட்டுப்பிரச்சினைகளை உருவாக்கி,அதனை வைத்து தன்னுடைய ஆளுமையை காட்டிக்கொள்ளவே தேசிய தலைவர்கள் விரும்பினார்கள்,அதுவும் இந்திராக்காலத்தில் உள்கட்சி எதிர்களை சமாளிக்க,தன்னுடைய இமேஜை பெரிதாக்கிக்கொள்ள என அதிரடியாக ஏதேனும் செய்துக்கொண்டே இருந்தார், சமயத்தில் வெற்றி,சமயத்தில் தோல்வி எனப்போனது. ஆனால் எதுவாக இருந்தாலும் தனக்கென ஒரு "தனித்தன்மை" காட்ட முயன்றார்.

# இப்போதைக்கு கோர்ட்டில் முறையிடுவது தான் ஒரே வழி,ஏன் எனில் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லாத ஒன்றாகிவிட்ட பிரச்சினையில் நமக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பில்லையே. நேர்மையான நீதிபதி ஒருவர் விசாரித்தால் நமக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கு,இல்லை இதெல்லாம் அயலுறவு கொள்கை முடிவு அதில் ஒன்னும் செய்ய முடியாது என கைவிரிக்கவும் வாய்ப்புள்ளது.
--------------
சஞ்சய்,

வாங்க,நன்றி!

அதே தான் வெளியில் வந்தது எல்லாம் ஒரு தூசு தான் ரகசியமாக அமுங்கி போனது மிக அதிகம்.

மத்திய அரசுக்கு சவாரி செய்ய குதிரைகள் தேவை ,குதிரைக்கு கொள்ளு தேவை, எனவே இரண்டும் சேர்ந்து ஆட்டைய போடுவது தான் இந்திய அரசியல்.

மஞ்சத்துண்டு ஆதிகாலத்தில் இருந்தே "அள்ளுவதில்" வல்லவர், இப்போ அதில் உச்சம் தொட்டுவிட்டார் :-))
--------------------
சிவானந்தம்,

வாங்க,நன்றி!

அந்தளவுக்கு நல்லா இருக்கா? எல்லாருக்கும் தெரிஞ்ச விடயத்தை சொல்கிறோம் என நினைத்தேன்,ரொம்ப கொடுமைனு சொல்லிடுவாங்களோனு நினைச்சேன், நல்ல வேளை மி எஸ்கேப்!!!

பத்திரிக்கைகள் எல்லாம் தனிப்பட்ட லாப,நட்ட கணக்குப்பார்த்தே செயல்ப்படும்.நமக்கு அப்படிலாம் கணக்கில்லையே.

இதில் இந்திய அரசியல் சூழல்,இந்திராவுக்கு இருந்த அரசியல் பிரச்சினைகள்,இலங்கை அரசியல் சூழல்ல் எல்லாம் விட்டுவிட்டேன்,அதெல்லாம்ம் சொன்னால் பெரிசாக போயிடும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி!

அஞ்சா சிங்கம் said...

முதல் படத்தை பார்த்தவுடன் நினைத்தேன் . நிறைய உண்மைகளை மறச்சிதான் வச்சிருக்காங்க என்று ஹி.ஹி...

குட்டிபிசாசு said...

வவ்வால்,

…Save kachchatheevu!... Shave..ச்சே! Save kachchatheevu ponnu!

//இந்திராகாந்தி காலத்தில் சீக்கியர் லாபி தான் அதிகம்,மேலும் வட இந்தியர்களுக்கே முன்னுரிமைனு போயிட்டு இருந்துச்சு//

நேரு மாமா, இந்திரா காந்தி காலத்தில் அவர்களுடைய அரசியல் ஆலோசகர்களாக அதிகம் இருந்தவர்கள் காஷ்மீரிகள். இந்திரா காந்தியின் முடிவுகள் இவர்களாலே தீர்மானிக்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளேன். இவர்களை பத்திர்கைகள் செல்லமாக "காஷ்மீரி மாபியா" என்பார்கள்.

…எமர்ஜென்சி, பங்களாதேஷ் போர், சோவியத் ஒப்பந்தம், வங்கிகள் தேசியமயமாக்கல், கச்சதீவு என எல்லாவற்ரிலும் இவர்களின் தலையீடு உள்ளது.

வவ்வால் said...

ஸிங்கம்,

சரியான சில்மிஷம் புடிச்ச ஸிங்கமா இருக்கீர், எம்புட்டு சீரியசா பதிவெழுதி இருக்கோம் ,அதெல்லாம் பார்க்காம படத்தையே உத்து பார்த்துக்கிட்டு :-))

பிரம்ம இரகஸியமெல்லாம் மறைச்சு தான் வச்சிருப்பாங்க, அதெல்லாம் அறிய பிரம்ம ஞானம் கைக்கூடனும் ,அடியேன் பிரம்ம ஞானம் தேடி :-))
------------

குட்டிபிசாசு,

டபுள் மீனிங்க் டயலாக்கு ,அதுவும் என்கிட்டே?

கச்சத்தீவை விட கச்சத்தீவு பொண்ணு மேல எல்லாம் கண்ணு வைக்கிறாங்களே அவ்வ்!

# காஷ்மீரிகள் தாக்கம் இருந்தது ,ஆனால் மற்றவர்களின் தாக்கமும் இருந்தது, நேரு பெரும்பாலும் கிருஷ்ண மேனன் சொல்வதை கேட்டே நடந்துக்கொண்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் ஊழலை செய்ததே கிருஷ்ண மேனன் தான், ராணுவத்துக்கு ஜீப் வாங்குறேனு சொல்லி 20 லட்சம் ஆட்டைய போட்டார், அப்போ இங்கிலாந்துக்கான தூதர் ஆ தான் இருந்தார், ஊழல் புகார் கிளம்பின நிலையில் ராணுவ அமைச்சராக்கினார், இப்படிலாம் மேனன் வசம் சிக்கிகிடந்தார் நேரு.ஏன்னா ரெண்டுப்பேருமே மன்மத குஞ்சுகள் :-))

அதே போல இந்திரா பீரியட்டிலும் , சீக்,பஞ்சாபி லாபி வலுவா இருந்தது.

கச்ச தீவு பிரச்சினை போது , வெளியுறவு துறை அமைச்சர், ஸ்வரன் சிங்க், செயலாளர் கேவல் சிங் னு பஞ்சாபி தாக்கம் தான்.

கஷ்மீரி பண்டிட்களும் இந்திராவின் கிச்சன் கேபினெட்டில் உண்டு, நான் அபிசியலா டாமினேட் செய்த பஞ்சாபி, வட இந்திய தலைகளையும் கணக்கில் எடுத்து சொன்னேன்.

எது எப்படியோ வட இந்தியர்கள் ,தமிழகத்தின் பக்கம் இருந்து என்றால் பார்ப்பணர்கள் இவர்களின் தாக்கம் தான் மத்தியில் எப்பொழுதும்.

பங்க்ளாதேஷ் பிரினையில் இந்திரா ரொம்ப தீவிரம் காட்ட முக்கிய காரணமே, அப்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பிராமணர்கள் மீது தான் பெரிய தாக்குதல்,பொதுவாக இந்துக்கள் மீது தாக்குதல் என சொல்லப்படும், எனவே அவர்களை காப்பாற்ற போர் என்ற அளவுக்கு தீவிரம் போச்சு. இதுக்கெல்லாம் லாபி நடந்தது.

ஒரு வேளை இலங்கையிலும் பிராமணர்கள் மீது பெரிய தாக்குதல் என்ற நிலை இருந்திருந்தால் கதையே வேறாக இருந்திருக்கும்.

Anonymous said...

வவ்வால்,

//பங்க்ளாதேஷ் பிரினையில் இந்திரா ரொம்ப தீவிரம் காட்ட முக்கிய காரணமே, அப்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்த " பார்ப்பணர்கள்" மீது தான் பெரிய தாக்குதல்...//


இத..இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்.....நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் இவனுங்களோட சேட்டை தவிர்க்க முடியாத ஒன்று. தற்போதும் எதிர்கால இந்திய வரலாறை தீர்மானிக்கப்போவதும் இந்தப் பன்னாடைகளே....என்ன வெளில தெரியாது...கஞ்சி + பார்ப்பண கூட்டணி எப்போதும் தமிழர் நலனுக்கு எதிராகவே இருக்கும்...உறங்கும் உள்துறை அமைச்சக ரகசிய கோப்புகளை பார்த்தல் தெரியும்...எப்போது அந்த நாள் வருமோ....

-கொங்கு நாட்டான்.








கலாகுமரன் said...

நீண்ட நெடிய வரலாறு ஸ் அப்பா கண்ண கட்டுதே...உங்களின் அதி தீவிர பாதை தேடுதல், மக்களை ஏமாற்றும் ஏமாற்றுகாரர்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

வேகநரி said...

கட்சத்தீவு பற்றி இப்போ தான் விபரமா அறிந்தேன்.ஒரு 285 ஏக்கர் ம்.. எயர்போட்டும் கட்ட முடியாது.
//பங்க்ளாதேஷ் பிரினையில் இந்திரா ரொம்ப தீவிரம் காட்ட முக்கிய காரணமே அப்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பிராமணர்கள் மீது தான் பெரிய தாக்குதல்//
பாகிஸ்தான் ஏன் முற்காலத்தில் இரண்டாக்கபட்டது என்பதின் உண்மை எங்களுக்கும் தெரியும் அதே மாதிரி பாகிஸ்தான் பங்களாதேஷ்காரர்களுக்கும் தெரியும். அப்படியிருக் நீங்க மட்டுமேன் குறுகிய ஜாதி அடிப்படையில் ஒரு காரணத்தை கொண்டுவருகிறீர்கள்?
//ஒரு வேளை இலங்கையிலும் பிராமணர்கள் மீது பெரிய தாக்குதல் என்ற நிலை இருந்திருந்தால் கதையே வேறாக இருந்திருக்கும்//
இலங்கையில் ஈழம் கேட்கபட்டதே ஆதிக்க ஜாதியினரால் மட்டுமே என்றே பலர் நம்புறார்கள்.இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும் இந்த ஈழம் கேட்கபட்டத்திற்கும் எந்த சம்பந்தம் கிடையாது.தமிழகத்தில் அரசியல் சுய லாபங்களுக்காக நடத்தப்படும் ஈழம் போராட்டங்களால் அவங்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடையாது. இலங்கை தமிழங்களுக்கும் நன்மை கிடையாது என்பது வேறு விடயம்.

Anonymous said...

இந்த மாதிரி பதிவை நான் இதுவரை படித்ததே இல்லை. Excellent historical article.

நம் வருங்கால சந்ததிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள எதுவாக இந்த பதிவை, கல்லூரி மற்றும் பள்ளி வரலாற்று புத்தகத்தில் ஏற்ற வேண்டும்.

இவ்வளவு பெரிய பதிவை வாசிக்கிறதற்க்கே எனக்கு ரொம்ப நேரம் எடுத்தது.

இத்தனை data வை collect பண்ணி தமிழில் டைப்பி தருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள்.

No words to thank you for your hard work.

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

வாரும்,நன்றி!

இப்படி எதிர்ப்பார்த்துக்கிட்டே இருந்தா எப்பூடி, அப்பப்போ நினைச்சத முன்னாடியே சொல்ல வேண்டாமா?

அரசியல் நிகழ்வில் வெளியில் தெரிவது கொஞ்சம் தெரியாதது தான் ரொம்ப அதிகம். ஆனால் நம்ம நரிக்குட்டி அதெல்லாம் செல்லாதுனு சொல்லிக்கிட்டு இருக்காரே பார்த்தீரா?

வேற வேற ஆட்கள் தான் பதவிக்கு வராங்க ஆனால் சிந்தனையெல்லாம் எப்பவும் ஒரே போல இருக்கு ,அதான் எப்படினு தெரியலை?

-----------------

கலாகுமாரன்,

வாங்க,நன்றி!

கண்ணக்கட்டிப்பிடுச்சா, எனக்கும் எழுதும் போது கண்ண கட்டுச்சு, எங்கெங்கோ அலைப்பாய்ந்தது,அப்புறம் அங்கே ,இங்கேனு கத்திரிப்போட்டு ஒரு வடிவாக்கினேன்.

மக்கள் எங்கே விழிக்க பொறாங்க இன்னும் மன்னராட்சி நினைவில் தான் வாழ்கிறார்கள்.
---------------

வேகநரி,

வாரும்,நன்றி!

சின்ன இடம் தான் ஆனால் நிலவியல் மற்றும் மீன்வள ரீதியாக முக்கியமான இடம்.

//பாகிஸ்தானில் இருந்த பிராமணர்கள் மீது தான் பெரிய தாக்குதல்//
பாகிஸ்தான் ஏன் முற்காலத்தில் இரண்டாக்கபட்டது என்பதின் உண்மை எங்களுக்கும் தெரியும் அதே மாதிரி பாகிஸ்தான் பங்களாதேஷ்காரர்களுக்கும் தெரியும். அப்படியிருக் நீங்க மட்டுமேன் குறுகிய ஜாதி அடிப்படையில் ஒரு காரணத்தை கொண்டுவருகிறீர்கள்? //

நரியார் எதுவும் தெரியாமலே எல்லாத்திலும் கரச்சல் கொடுக்கிறத மட்டும் நிப்பாட்ட மாட்டேங்கிறார் :-))

சரி நீரே சொல்லும் நான் தெரிஞ்சிக்கிறேன், சும்மா தெரியும்னு சொல்லிக்கிட்டு எதுவுமே சொல்லாமல் வியாக்கியனம் மட்டும் செய்தால் எப்பூடி?

ஈழப்பிரச்சினையை சொல்லும் போது ,சிங்கள- தமிழர் பிரச்சினைனு சொல்லும் ஊடகங்கள், ஏன் பங்களாதேஷ் உருவாக்க பிரச்சினையை சொல்லும் போது இந்துக்கள்-முஸ்லீம்கள் மோதல் ,அதனால் பல ஆயிரம் இந்துக்கள் இறப்பு, எனவே பிரிவினை செய்ய வேண்டியதாச்சுனு சொல்லனும்.

சிங்களர்களை -பவுத்தர்கள்னும், தமிழர்களை இந்துக்கள்னும் சொல்ல வேண்டியது தானே. இலங்கையிலும் மதம் அடிப்படையில் தானே பிரச்சினை.

நன்றாக சிந்தித்துப்பார்க்கவும்.

//இலங்கையில் ஈழம் கேட்கபட்டதே ஆதிக்க ஜாதியினரால் மட்டுமே என்றே பலர் நம்புறார்கள்.இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும் இந்த ஈழம் கேட்கபட்டத்திற்கும் எந்த சம்பந்தம் கிடையாது.தமிழகத்தில் அரசியல் சுய லாபங்களுக்காக நடத்தப்படும் ஈழம் போராட்டங்களால் அவங்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடையாது. இலங்கை தமிழங்களுக்கும் நன்மை கிடையாது என்பது வேறு விடயம்.//

உம்ம வியூகத்த முழுசா சொல்லும், தெரிஞ்சிப்போம்!

கடசியில தனி ஈழம்னு கேட்டது சிங்களர்கள்னு சொல்லாம இருந்தா சரி :-))
------------------

வேற்றுகிரகவாசி,

வாங்க,நன்றி!

ஆனாலும் நீங்க என்ன ரொம்ப புகழூறீங்க, ஹி...ஹி புகழ்ச்சி பிடிக்காமலா போகும் :-))

வரலாற்று பாடம் என்பது ஆள்வோருக்கு பிடிச்ச மாதிரி தான் வைக்கப்படும், உண்மையை எல்லாம் பாடத்தில் வைக்கவே மாட்டாங்க :-))

நெஞ்சுக்கு நீதினு வாழ்க்கை வரலாறு எழுதினால் கூட,ராபின்சன் பூங்காவுக்கு போனாப்போலவே எழுதிப்பாங்க :-))

கொஞ்சம் மெனக்கெட்டு தான் எழுத வேண்டியிருக்கு,ஆனால் இப்படி உங்களப்போல நாலுப்பேரு நல்லா இருக்குனு சொல்லும் போது, கிடைக்கிற மகிழ்ச்சிக்கு முன் அதெல்லாம் ஒன்னுமில்லை.

நன்றி!
-------------------

Anonymous said...

வவ்வால்,


நீல சாயம் வெளுத்து போச்சு..... டும்டும்டும்டும்.... சோக நரி வேஷம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்டும்...நரியின் சுயரூபத்தை அம்பலமாக்கிய அண்ணன் வவ்வால் வாழ்க...அங்க அடிச்சா இங்க வலிப்பது ஏன்?....ஈழப் போராட்டத்தை சாடுவதும்,மார்க்கபந்துகளுடன் விவாதத்தில் அண்ணனின் கருத்துக்களுக்கும் நரியின் "சுயரூபத்தை" காட்டும்.

--கொங்கு நாட்டான்.


குஜால்காரன் said...

//நேரு பெரும்பாலும் கிருஷ்ண மேனன் சொல்வதை கேட்டே நடந்துக்கொண்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் ஊழலை செய்ததே கிருஷ்ண மேனன் தான், ராணுவத்துக்கு ஜீப் வாங்குறேனு சொல்லி 20 லட்சம் ஆட்டைய போட்டார், அப்போ இங்கிலாந்துக்கான தூதர் ஆ தான் இருந்தார், ஊழல் புகார் கிளம்பின நிலையில் ராணுவ அமைச்சராக்கினார், இப்படிலாம் மேனன் வசம் சிக்கிகிடந்தார் நேரு.ஏன்னா ரெண்டுப்பேருமே மன்மத குஞ்சுகள் :-))//

பார்க்க குஷ்வந்த் சிங் அவர்களின் சுயசரிதை Truth, Love and a Little Malice, An autobiography - Khushwant Singh.

ரோஜா மாமா லண்டனில் இறங்கியவுடன் நேரா வண்டிய மவுண்டுபேட்டன் வீட்டுக்கு விட்டார். கிருஷ்ண மேனனோ அவரோட வண்டிய சர்தாரோட வீட்டுக்குள்ள விட்டிருக்கார்.

http://rprajanayahem.blogspot.in/2013/01/power-is-ultimate-aphrodisiac.html

குஜால்காரன் said...


அருமையான இடுகை. வாழ்த்துகள்.

Anonymous said...

**
பத்திரிக்கைகள் எல்லாம் தனிப்பட்ட லாப,நட்ட கணக்குப்பார்த்தே செயல்ப்படும்.நமக்கு அப்படிலாம் கணக்கில்லையே.
**

இன்னிக்கு so-called புலனாய்வுப் பத்திரிகைகளைத் தாங்கிப் பிடிப்பது அஞ்சாப்பு பசங்கதானே? அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் டாடா ஏஸ் வண்டிக்கு 'குட்டியானை' என்று பட்டம் சூட்டுவதுதான். இவனுகள் 'ஆராயும்' எந்தப் பிரச்சினை பற்றிய கட்டுரையையும் எப்படி முடிப்பார்கள் தெரியுமா?

## எது எப்படியோ, பிரச்சினை முடிவுக்கு வந்தால் சரிதான் ##

'மெய்ப்பொருள் காண்பது அறிவு' அப்படின்னு அவங்கள்ல யாருக்காவது தெரியுமா?

Anonymous said...

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பாஜக?

What Yashwant Sinha really said?

**
Refraining from extending any overt support to the demand for a separate Tamil Eelam, he pointed to Bangaldesh, East Timor and North and South Sudan, where people overthrew suppressive regimes and warned Rajapaksa to reform.
**

How it is interpreted by lankan politicians?

BJP threat to establish Eelam in SL: Govt. should reassess foreign policy – UNP

How viruvirupu reports.

இலங்கையில் திடீர் அலறல்: “தமிழர்களுக்கு ஈழத்தை உருவாக்கி கொடுக்க போகிறது பா.ஜ.க.!”
...
...
பா.ஜ.க. கூறிய கருத்து, தமிழகத்தில் பெரிதாக எடுபடவில்லை. ஆனால், இலங்கையில் அலற வைத்திருக்கிறதே! அண்ணே தமிழக பா.ஜ.க.வினரே… please note this point.


மற்றும் இலங்கையரின் எதிர்வினை

http://www.eurasiareview.com/01042013-response-to-bjps-yaswant-singh-lok-sabha-speech-on-sri-lanka-oped/

http://www.theindependent.lk/feature/editorial/item/1443-indo-lanka-fires

And finally the well-known north-indian "tail-between-the-legs" psyche.

Himalayan Blunder By Inderjit Badhwar

This guy compares rajapakse to Kamaraj. He don't want to create a cuba in srilanka but perfectly okay with IPKF creating vietnam in eelam.

viyasan said...

//1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.//

உண்மையாக‌வா, ந‌ம்பவே முடிய‌வில்லை. 1480 இல் தான் ராமேஸ்வர‌ம் தீவு உண்டான‌தா? ராமேஸ்வ‌ர‌ம் தீவு ராமாயண‌ கால‌த்திலிருந்தே இருப்ப‌தாக‌ அல்ல‌வா நான் நினைத்தேன்.

வேகநரி said...

வவ்வால்,
நீங்க வேறு இடத்தில் கேட்டது
//இருக்கிற நாட்டை விட்டு போயிட்டு உருவாக்கனும் என சொல்வதும் ஒன்றா? அப்படி உருவாக்கனும் என சொல்லும் போது வாழ வர வேண்டாமா?//
இருக்கிற நாட்டைவிட்டு போனவங்க பற்றி பிரபாகரனின் உத்தியோகபூர்வ அரச கவிஞர் சொல்கிறார் படியுங்க அறிந்து கொள்ளுங்கள். காசி ஆனத்தன் தான் அவங்க கவிஞர் என்று நினைத்தேன். இரத்தினதுரை என்பவர்தான் பிரபாகரனின் உத்தியோகபூர்வ கவிஞர்.

பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயல் எரிகையில் விட்டு
விமானத்தில் ஏறி பறந்தவர்
வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே
வீடு திரும்பினால் காறியே துப்புவோம்
கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்
கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்
அப்பு ஆச்சியை கவணம் கவணம் என்று
அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்
தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென
தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்
துப்புக் கெட்டவர் அகதி லேபலில்
தூசு தட்டியே காசு பிழைத்தனர்
ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்
எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்
போகட்டும் பாய்விரித்தால் போதும்
படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி
நாய்சாதி ஓடி நக்கில் பிழைக்கட்டும்
தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி
கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும்

viyasan said...

@வேக‌ந‌ரி,
புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் உழைப்பும் ஆத‌ர‌வுமில்லாம‌ல் ஈழ‌விடுத‌லைப்போர் கோடிக்க‌ண‌க்கான‌ பண‌த்தைச் செல‌விட்டு 30 வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்ற‌து என‌ ஒரு முட்டாளும் ந‌ம்ப‌மாட்டான். இந்த‌க் க‌விதை ஒரு தாய் ம‌க‌னைத் திட்டுவ‌து போன்றது, நீர‌டித்து நீர் வில‌குவ‌தில்லை என்ற‌ ப‌ழமொழி ஈழ‌த்திலுண்டு, இது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் உள்வீட்டுப் பிர‌ச்ச‌னை, அதை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை இழிவுப‌டுத்த‌ வெளியாட்க‌ள் பாவிப்ப‌து அவ‌ர்க‌ளுக்கு ஈழ‌த்த‌மிழர்க‌ளின் மீதுள்ள‌ காழ்ப்புண‌ர்வைத் தான் வெளிப்படுத்துகிற‌து. இதே புதுவை இர‌த்தின‌துரை இந்த‌க் க‌விதைக்கான‌ கார‌ண‌த்தைக் குறிப்பிட்ட‌து ம‌ட்டும‌ல்ல‌. புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளைப் புக‌ழ்ந்து பாடியுமுள்ளார்.

".... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தை தந்தது. அதே புலம்பெயாந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்."

வவ்வால் said...

கொங்குநாட்டார்,

நரியார் மேல எப்பவும் ஒரு கண்ணு வச்சிட்டே இருக்காப்போல தெரியுதே, பார்த்து நரி பாய்ஞ்சிடப்போவுது :-))
-------------
குஜால்,

நன்றி!

நேருவோட லீலையை நேரு&எட்வினானு படமா கூட எடுத்து வெளியிட்டாச்சு, ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு சூட்டைக்கிளப்பலை.

நேரு,மேனன் கதையை விக்கிப்பீடியா வரைக்கும் அலசி தொவைச்சு காயப்போட்டுடாங்க, சில இந்துத்வாக்களின் ஆங்கில பிலாக் எல்லாம் படிச்சிருக்கிரா, பயங்கரமான அஜால் குஜால் கதை எல்லாம் சொல்லி இருப்பாங்க, ஆனால் அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கானு தெரியலை,அதனால அதை எல்லாம் எடுத்துப்போடுவது இல்லை.
---------------
அனானி,

நன்றி!

யாருப்பா நீர் , பத்திரிக்கை உலக நடப்பை எல்லாம் சொல்லுறீர், பெரும்பாலும் ,டீ,காபி வாங்கிக்கொடுத்துக்கிட்டு ,அப்படியே துப்பியெறியும் பத்திரிக்கை நிருபரா ஆனவங்க எல்லாம் இருக்காங்க, இப்போ தான் மாணவ நிருபர் திட்டம், ஜர்னலிசம் படிச்சவங்களை எல்லாம் வேலைக்கு வைக்கிற பழக்கம் வந்திருக்கு.

சூவில தான் அடிக்கடி எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தா சரினு தான் முடிப்பாங்க :-))
----------------
அனானி,

நன்றி!

பா.ஜ.க எல்லாம் சந்தர்ப்பத்தினை பயன்ப்படுத்தி பொலிடிகல் மைலேஜ் பார்க்கிறது.சுஷ்மா ஸ்வராஜ் ,பக்சே கூப்பிட்டு விழா நடத்தினப்போதெல்லாம் சின்ஹா எங்கே போயிருந்தாரோ?

பத்திரிக்கைகள் எல்லாம் உண்மையான நோக்கத்தில் செய்திப்போடுவதே ரொம்ப அபூர்வமாகிடுச்சு, எல்லாமே யாரொ ஒருவரின் அரசியல் அபிராயங்களுக்கு ஏற்ப செய்தியை திரிக்கவே செய்கின்றன.
-----------

வியாசன்,

வாங்க,நன்றி!

ராமேஷ்வரம் பற்றி நீங்க நேரா வால்மீகிட்டேயே கேட்டிருக்கலாம், எதுக்கு இந்த வவ்வாலு :-))

இராமாயணம் ஒரு புராணக்கதை, இருந்த இடங்களை வைத்து கதை பின்னியிருக்கலாம். எனவே இராமேஷ்வரம் இருந்திருக்கலாம், ஆனால் இராமயணத்தில் இராமேஷ்வரத்தினை தீவுனு சொல்லியிருக்கா என பார்க்கணும்?

ஏன் எனில் இராமேஷ்வரம் எனும் இடம்ம் ,மெயின் லேண்டுடன் ஒட்டியிருந்திருக்கலாம், இப்போ மாதிரி இடையே கடல் இல்லை என நினைக்கிறேன் , அப்படி இருந்திருந்தால் ராமர் பாலம் கட்டித்தான் இராமேஷ்வரத்துக்கு போனதாக எழுதியிருப்பார், ஆனால் இராமேஷ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் என சொல்லியிருப்பதால், அப்பொழுது தீவாக இல்லாமல் இராமேஷ்வரம் இருந்திருக்கலாம், பின்னர் புயல் உருவாகி, நிலவியல் மாற்றம் ஏற்பட்டு கடல் உட்புகுந்து பிரித்து தீவு உருவாகி இருக்கலாம்.

கடல் நீரோட்ட மாற்றம், புயல் போன்றவற்றால் தீவு உருவாவது இயற்கையாக நடப்பதே. வரலாற்றில் சமீபகாலத்தில் அப்படி ஒரு தீவு உருவாகி,பின்னர் அழிந்தும் இருக்கிறது.

வங்க கடலில்,கொல்கத்தா அருகே உருவான மணல் தீவு பற்றிய செய்தி:

//New Moore (as it was known in India) or South Talpatti (as it was known in Bangladesh) was a small uninhabited offshore sandbar landform in the Bay of Bengal, off the coast of the Ganges-Brahmaputra Delta region.[1] It emerged in the Bay of Bengal in the aftermath of the Bhola cyclone in 1970, and disappeared at some later point.[2]//

http://en.wikipedia.org/wiki/New_Moore_/_South_Talpatti
-----------------------
நரியார்,

வாரும்,நன்றி!

அது எப்படி ஓய் இத மாதிரி சமாச்சாரம்னா அபார சுறுசுறுப்பு காட்டுரீர் :-))

இந்த மாதிரி கவித எல்லாம் உமக்கு மட்டும் எங்கே இருந்து கிடைக்குதோ?

இதுக்கான பதிலை சம்பந்தப்பட்ட மக்கள் தான் சொல்லனும்.

இந்தக்கேள்வி எனக்கு மட்டும் வரவில்லை ஈழபோராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் வந்திருக்கு,ஆனால் நான் சொன்னால் மட்டும் பாயுறாங்க :-))

viyasan said...

//கடல் நீரோட்ட மாற்றம், புயல் போன்றவற்றால் தீவு உருவாவது இயற்கையாக நடப்பதே. வரலாற்றில் சமீபகாலத்தில் அப்படி ஒரு தீவு உருவாகி,பின்னர் அழிந்தும் இருக்கிறது.//

நான் அதை ம‌றுக்க‌வில்லை. 1480 இல் ராமேஸ்வ‌ர‌ம் தீவு உருவாகிய‌து என்ப‌த‌ற்கு என்ன‌ ஆதார‌ம். அண்மையில் 1480 இல் க‌ட‌ல் புய‌லால் தீவுக‌ள் உருவாகின‌ என‌ நம்பும் நீங்க‌ள், இல‌ங்கையும் இந்தியாவும் ஒன்றாக‌ இருந்து பெரும் க‌ட‌ல் கோளால் இல‌ங்கையின‌தும் தமிழ்நாட்டினதும் இணைப்பு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌ போது பிரிந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரையின‌ர் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தான் என்ற‌ க‌ருத்தை எப்ப‌டி புராண‌ம் என்று ம‌றுக்க‌ முடியும். க‌ட‌ல் நீரோட்ட‌ மாற்ற‌த்தால் 10 தீவுக‌ள் உருவாகின‌, அதுவும் 1480 இல் என்று ந‌ம்பும் நீங்க‌ள் புராண‌த்தைப் ப‌ழிப்ப‌து தான் வேடிக்கை. இராம‌ர் அணை இராம‌ர் க‌ட்டியத‌ல்ல‌, இல‌ங்கையும் இந்தியாவையும் இணைப்பின் எச்ச‌ம் தான் அது.

அதிருக்க‌ட்டும், ராமேஸ்வ‌ர‌ம் 1480 இல் உருவாகிய‌த‌ல்ல‌ மிக‌வும் ப‌ழ‌மையான‌து என்ப‌து கூட‌வா தெரியாது. ராமேஸ்வ‌ர‌ம் தீவு 1480 இல் உருவாகிய‌தென்றால் ராமேஸ்வ‌ர‌ம் கோயிலின் வ‌ய‌து 533 ஆண்டுக‌ளுக்கும் குறைவான‌தா. சோழ‌ர்க‌ள் கூட‌ ராமேஸ்வ‌ர‌ம் கோயிலுக்குத் தொண்டு செய்திருக்கிறார்க‌ள். 1300 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் நாய‌ன்மார்க‌ள் தேவார‌ம் பாடியிருக்கிறார்க‌ள்.யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, 11ம் நூற்றாண்டில் இல‌ங்கை அர‌ச‌ன் ப‌ராக்கிர‌ம‌பாகு ராமேஸ்வ‌ர‌ம் கோயிலுக்குச் சென்ற‌தும், திருப்ப‌ணிக‌ள் செய்த‌தும் செப்புத் த‌க‌ட்டில் ப‌தித்து இல‌ங்கை அருங்காசிய‌க‌த்தில் உள்ள‌ன‌. ம‌ன்னிக்க‌வும், ராமேஸ்வ்ர‌ம் தீவு 1480 இல் உருவாகிய‌து என்ற முட்டாள்த‌ன‌த்தைப் போல் வெறுதுவும் இருக்க‌ முடியாது, த‌ய‌வு செய்து திருத்திக் கொள்ள‌வும்.

வவ்வால் said...

வியாசன்,

//ராமேஸ்வ்ர‌ம் தீவு 1480 இல் உருவாகிய‌து என்ற முட்டாள்த‌ன‌த்தைப் போல் வெறுதுவும் இருக்க‌ முடியாது, த‌ய‌வு செய்து திருத்திக் கொள்ள‌வும்.//

உங்களைப்போன்ற ஆர்வக்கோளாறுகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை ,அவ்வ்வ்.

நான் போட்டிருக்கும் பின்னூட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறேன்,நீங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்கிங்க. மீண்டும் ஒரு முறைப்படிக்கவும்...

//இராமாயணம் ஒரு புராணக்கதை, இருந்த இடங்களை வைத்து கதை பின்னியிருக்கலாம். எனவே இராமேஷ்வரம் இருந்திருக்கலாம், ஆனால் இராமயணத்தில் இராமேஷ்வரத்தினை தீவுனு சொல்லியிருக்கா என பார்க்கணும்?

ஏன் எனில் இராமேஷ்வரம் எனும் இடம்ம் ,மெயின் லேண்டுடன் ஒட்டியிருந்திருக்கலாம், இப்போ மாதிரி இடையே கடல் இல்லை என நினைக்கிறேன் , அப்படி இருந்திருந்தால் ராமர் பாலம் கட்டித்தான் இராமேஷ்வரத்துக்கு போனதாக எழுதியிருப்பார், ஆனால் இராமேஷ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் என சொல்லியிருப்பதால், அப்பொழுது தீவாக இல்லாமல் இராமேஷ்வரம் இருந்திருக்கலாம், பின்னர் புயல் உருவாகி, நிலவியல் மாற்றம் ஏற்பட்டு கடல் உட்புகுந்து பிரித்து தீவு உருவாகி இருக்கலாம்.
//

இப்பவும் புரியலைனு சொன்னா மீண்டும் சொல்கிறேன்.

# நான் மற்றவர்களை போல மூலத்தினை மறைப்பதில்லை, பதிவில் சில தளங்களின் சுட்டிப்போட்டிருக்கிறேன்,அதில் உள்ளவற்றின் தொகுப்பே இப்பதிவு,சரிப்பார்த்துக்கொள்ளவும்.

தீவு உருவானது என்பதற்கு நான் கொடுத்திருக்கும் விளக்கம் வேறு என்பதை கூட புரிந்துக்கொள்ளாமல் பேசிக்கொன்டிருந்தால் என்ன செய்ய?

viyasan said...

//அப்படி இருந்திருந்தால் ராமர் பாலம் கட்டித்தான் இராமேஷ்வரத்துக்கு போனதாக எழுதியிருப்பார், ஆனால் இராமேஷ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் என சொல்லியிருப்பதால், அப்பொழுது தீவாக இல்லாமல் இராமேஷ்வரம் இருந்திருக்கலாம்//

"இராமாயணம் ஒரு புராணக்கதை, இருந்த இடங்களை வைத்து கதை பின்னியிருக்கலாம்" என்று புராண‌த்தில் ந‌ம்பிக்கையில்லாதது போல் ப‌ட‌ம் காட்டி விட்டு இப்பொழுது இராமாய‌ண‌த்தை ஆதார‌ம் காட்டி தீவாக‌ இல்லாம‌ல் இருந்திருக்க‌லாம் என்னும் அறிவாற்றலை எப்ப‌டிப் புக‌ழ்வ‌து என்று என‌க்குத் தெரிய‌வில்லை. இராமாய‌ண‌ கால‌த்தில் இராமேஸ்வ‌ர‌ம் தீவாக‌ இல்லாம‌லுமிருந்திருக்க‌லாம், அத‌ற்கும் முன்னால் இல‌ங்கை த‌மிழ்நாட்டுட‌ன் இணைந்திருந்து பிரிந்திருந்துமிருக்க‌லாம், அப்பொழுது பிரிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் தான் இன்றைய ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளாக‌க் கூட‌வுமிருக்கலாம் அல்ல‌வா? அதை விடுங்க‌ள், என்னுடைய‌ க‌ருத்து என்ன‌வென்றால் 1480 இல் இராமேஸ்வ‌ர‌ம் தீவு உருவாக‌வில்லை. அது உங்க‌ளின் ஞான‌த்திலிருந்து உருவாகிய‌தா என்பதைக் கூறுங்க‌ள் அப்ப‌டி இல்லாவிட்டால் அதைத் திருத்துங்க‌ள் என்ப‌து தான்.

Anonymous said...

வவ்வால்,

//நரி பாய்ஞ்சிடப்போவுது :-))//


பாஞ்சா....தீஞ்சு போகும்...:-))

--கொங்கு நாட்டான்.



Anonymous said...

வவ்வால்,

//இப்பவும் புரியலைனு சொன்னா மீண்டும் சொல்கிறேன்.//

என்ன கைய புடிச்சி இழுத்தியா?...கைய புடிச்சி இழுத்தியா?....புடிச்சி இழுத்தியா?...:-))

கலக்குங்க...கலக்குங்க...

--கொங்கு நாட்டான்.


வவ்வால் said...

வியாசன்,

மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா ,அவ்வ்வ்!

சரி ஆரம்பிப்போம்,

//"இராமாயணம் ஒரு புராணக்கதை, இருந்த இடங்களை வைத்து கதை பின்னியிருக்கலாம்" என்று புராண‌த்தில் ந‌ம்பிக்கையில்லாதது போல் ப‌ட‌ம் காட்டி விட்டு இப்பொழுது இராமாய‌ண‌த்தை ஆதார‌ம் காட்டி தீவாக‌ இல்லாம‌ல் இருந்திருக்க‌லாம் என்னும் அறிவாற்றலை எப்ப‌டிப் புக‌ழ்வ‌து என்று என‌க்குத் தெரிய‌வில்லை. //

உங்களுக்கு எழுத்தாளர் சுஜாதா கதை பிடிக்கும்னு வச்சிப்போம், அந்த கதையில , "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ,கணேஷ் & வசந்த் வந்திறங்கினார்கள், அப்பொழுது திடீர் என கூட்டத்தில் இருந்து தாடி வைத்த மர்ம மனிதன் ஒருவன் கத்தியுடன்ன் கணேஷ் மீது பாய்ந்தான், கணேஷ் கடைசி நேரத்தில் விலகிக்கொள்ளவே கத்தியுடன் பாய்ந்த மர்மனிதன் தண்டவாளத்தில் விழுந்து மண்டை உடைத்துக்கொண்டான்"

என கதை போகிறது, இப்போ இதில் எதெல்லாம் உண்மை? சென்ட்ரல் ஸ்டேஷன் மட்டுமே உண்மை,மத்தது எல்லாம் கற்பனை, கதையே கற்பனை அப்போ சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் என்பதும் கற்பனைனு சொல்வீங்களா?

#நான் சொன்னது புயல் வந்து ,ராமேஷ்வரதுக்கும், பாம்பனுக்கும் இடையே கடல் கால்வாய் உருவாகி, தீவானது என்ற விளக்கம். விக்கிப்பீடியாவில் உள்ளதைக்காணவும்.

//n 1823, Sir Arthur Cotton (then an Ensign), was trusted with the responsibility of surveying the Pamban channel, which separates the Indian mainland from the island of Rameswaram and forms the first link of Ram Setu. Geological evidence indicates that this was at one point bridged by a land connection, and some temple records suggest that the connection was broken by violent storms in 1480. Cotton suggested that the channel be dredged to enable passage of ships, but nothing was done until 1828, when some rocks were blasted and removed under the direction of Major Sim.[34][35]//

http://en.wikipedia.org/wiki/Adam's_Bridge

மேலும் பதிவின் அடியில் தரவுகளாக சுட்டிகள் கொடுத்துள்ளேன்,அதில் கச்சத்தீவு.ஆர்க் என்ற தளம் போனாலும் நான் சொன்ன புயலால் தீவு உருவான செய்தி இருக்கும்.

//1480 இல் இராமேஸ்வ‌ர‌ம் தீவு உருவாக‌வில்லை. அது உங்க‌ளின் ஞான‌த்திலிருந்து உருவாகிய‌தா என்பதைக் கூறுங்க‌ள் அப்ப‌டி இல்லாவிட்டால் அதைத் திருத்துங்க‌ள் என்ப‌து தான்.//

நான் இத்தனை சுட்டிகள் போட்டு எழுதியும், எதையுமே ஒரு முறை கூட படித்து பார்க்காமலே, நானே கற்பனையா சொன்னேனா எனக்கேட்டால் எப்பூடி?

நான் எழுதும் பதிவுகள் ,கிடைத்த தகவலின் அடிப்படையிலே பெரும்பாலும் அமையும், கேள்விப்பட்ட தகவல் எனில் அதையும் சொல்லிவிடுவேன், செவி வழிச்செய்தி தான் என்று. மற்றவர்களை போல எதையும் மறைத்து ,சொந்தமாக அகழ்வாராய்ச்சி செய்தார் போல எல்லாம் கதைவிடுவது இல்லை.

ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதையே நான் எடுத்து பகிர்ந்திருக்கிறேன்,அதன் நம்பகத்தன்மைக்கு அடியேன் பொறுப்பல்ல, சுட்டிகளும் கொடுத்தாயிற்று, அப்புறம் எதுக்கு நான் பதிவில் திருத்தம் செய்யணும்?

# இலங்கைக்கு நடந்து செல்லும் அளவில் கடல் மட்டம் இருந்தது எனவும் படித்துள்ளேன், அதுகுறித்து ஜோதிஜி பதிவிலும் பேசி இருக்கிறேன்.

நீங்கள் சொன்னது போல அங்கு மனிதன் இருந்தான்,பின்னர் கடலால் பிரிக்கப்பட்டான் வரையில் சரி, ஆனால் அங்கு முதலில் மனிதன் எப்பொழுது போனான்,அவன் தமிழனாக தான் இருந்தான் என்றால் எங்கிருந்து போயிருப்பான், இலங்கையை விட பெரிய மற்றும் மனிதர்கள் வாழும் தகுதிக்கொண்ட நிலப்பரப்பான தமிழகத்தில் இருந்து தான் சென்றிருக்க வேண்டும்.

இலங்கையிலேயே தோன்றிய மனிதன் என சொல்வீர்களானால், அது தமிழனோ,சிங்களனோ இல்லை, வேடர்களும், ரோடியர்கள் போன்றவர்களே என வரலாறு சொல்கிறது.

எனவே நீங்கள் சரி என்றால் புராணத்தினை ஆதாரமாக சொல்லாமல் வேறு ஏதேனும் தரவுடன்ன் வரவும்.
-------------

கொங்கு நாட்டார்,

பார்த்து தீய வைக்கவும் :-))

# ஹி...ஹி நம்ம கிட்டே பஞ்சாயத்துக்கு வர்ரதுனா பொதுவாக பதிவுல எல்லாமே அலறுவாங்க, தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டால் ,கதம்,கதம் தான் :-))
----------------

viyasan said...

//Geological evidence indicates that this was at one point bridged by a land connection, and some temple records suggest that the connection was broken by violent storms in 1480.

முன்னொரு கால‌க‌ட்ட‌த்தில் ராமேஸ்வ‌ர‌த்திற்கும் சேது அணைக்குமிடையில் ம‌ண‌ல்தொட‌ர்ச்சி இருந்திருக்கலாமென‌ புவியிய‌ல் த‌ட‌ய‌ங்க‌ள் காட்டுகின்ற‌ன‌. அத்துட‌ன் கோயிலிலுள்ள சில ஆவ‌ணங்க‌ளின் ப‌டி அந்த‌ தொட‌ர்பு 1480 இல் இட‌ம்பெற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌ புய‌லால் உடைக்கப்பட்ட‌தாக‌ தெரிகிற‌து.//

இத‌ற்கும் நீங்க‌ள் கூறிய‌த‌ற்கும் பெரீய‌ வேறுபாடு உண்டு. :- )

//1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள். அத்தீவுகளின் பெயர்கள்://

உங்க‌ளின் க‌ற்பனை த‌றிகெட்டு ஒடியிருக்கிற‌து. க‌ற்ப‌னைக் க‌தைக‌ளுக்கு இது உத‌வுமே தவிர‌, புவியிய‌ல், வ‌ர‌லாறு, அர‌சிய‌ல், இருநாடுக‌ளுக்குமிடையிலான‌ எல்லைப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கு சின்ன‌ ஒரு விட‌ய‌த்தை இந்த‌ள‌வுக்கு திரிப்பதும் , ஊதிப்பெருக்கி எழுதுவதும் உதவாது, அதை யாரும் ந‌ம்ப‌ மாட்டார்க‌ள். 1480 இல் பெரிய‌ புய‌ல் வ‌ந்த‌து அதில் ஒரு ராமேஸ்வ‌ர‌ம் தீவு ம‌ட்டும‌ல்ல‌, 11 தீவுகள் கிழ‌ம்பி எழுந்த‌ன‌ என்று புராண‌க்க‌தாசிரிய‌ர் கூட‌க் கூறிய‌தில்லை. நீங்க‌ள் எங்காவ‌து க‌தாகால‌ட்சேப‌ம் செய்தால் ந‌ல்ல‌ ப‌ண‌ம் சம்பாதிக்க‌லாம். முத‌லில் விக்கிப்பீடியா விட‌ய‌ங்க‌ளையே அபப்டியே முற்றாக ந‌ம்பக் கூடாது, கண்ட, நின்ற கோட்டான், குருவிக‌ள், ஏன் வெவ்வால்க‌ள் கூட தங்க‌ளின் இட்ட‌த்துக்கு க‌ருத்துக்க‌ளை அங்கு ப‌திவு செய்ய‌லாம்.

உண்மை என்ன‌வென்றால் ராமேஸ்வ‌ர‌ம் தீவுக‌ளும் அந்த‌ 11 தீவுக‌ளும் நீங்க‌ள் கூறிய‌து போல் 1480 இல் மகாவிஸ்ணு பாற்க‌ட‌லிலிருந்து எழுந்து வ‌ந்த‌து போல் வ‌ர‌வில்லை. ராமேஸ்வ‌ர‌மும் ஏனைய‌ தீவுக‌ளும் ஆயிர‌க்க‌ண‌க்கான ஆண்டுக‌ள் ப‌ழ‌மை வாய்ந்த‌வை. ஆனால் இல‌ங்கை ராமேஸ்வ‌ர‌ம் ம்ற்றும் ஏனைய‌தீவுக‌ளுக்கிடையிலான‌ ம‌ண‌ல் திட்டுக‌ள் 1480 இல் ஏற்ப‌ட்ட‌ புய‌ல் வ‌ரை மிக‌வும் தெளிவாக‌, வெளிப்ப‌டையாக‌ வெளியில் தெரிந்த‌ன‌. இன்று பெரும்பாலான‌ ம‌ண‌ல் திட்டுகள் நீரில் மூழ்கி விட்ட‌ன‌, முன்னொரு கால‌த்தில் ம‌ண‌ல் திட்டுக்க‌ளில் ஒய்வெடுத்துக் கொண்டே ப‌ட‌கில் இல‌ங்கையை அடைய‌லாமாம். அதை அப்ப‌டியே விள‌ங்கியோ, விள‌ங்காம‌லோ திரித்து 1480 புய‌லில் தான், இத்த‌னை ப‌ழமை வாய்ந்த‌, த‌மிழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றுட‌ன் பின்னிப் பிணைந்த‌ ராமேஸ்வர‌ம் தீவு, 1480இல் தான் உருவாகிய‌து என்றது வெறும் அப‌த்த‌ம், அதிலும் விழுந்தாலும் இன்னும் மீசையில் ம‌ண்ப‌ட‌வில்லை என்று ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்டுவ‌து அதை விட‌ அப‌த்த‌ம். த‌வறை ஒப்புக்கொள்ளும் ப‌ண்பு கூட‌ க‌ட‌வுளின் கொடைதான் ஆனால் அது எல்லோருக்கும் கிடைப்ப‌தில்லை போல் தெரிகிறது. :- )

Anonymous said...

வவ்வால்,

முடியல....முடியல....தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும் பாஸ்?????

--கொங்கு நாட்டான்

Anonymous said...

வவ்வால்,

அடேய்... பச்சிலை புடுங்கி.. நான் எஸ்எஸ்எல்சி பெயிலுடா....

அண்ணே! நான் ஏழாவது பாஸ்னே… பாஸ் பெருசா… பெயில் பெருசா...??? :-))

--கொங்கு நாட்டான்.

joe said...

வவ்வால்,

1480ல் ராமேஸ்வரம் தீவு உருவானது என்ற உம்முடைய கூற்று பிழை என்று எண்ணுகிறேன் .1412ம் வருடத்தில் பாண்டியர் வசம் ஆட்சியில் இருந்ததாக விக்கி சொல்கிறது

வவ்வால் said...

வியாசர்,

நான் என்ன சொல்லி இருக்கேன்,நீங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்கீர்?

இதெல்லாம் ஏற்கனவே பல்வேறு இணைய தளங்களில் இருக்கு,அதை எடுத்து எழுதி இருக்கிறேன் என சொல்லி இருக்கிறேன்,அப்புறமும் நான் கற்பனை செய்து உருவாக்கிட்டேன்னு சொன்னா எப்பூடி.

நான் மேற்கோள் காட்டிய சுட்டியில் இருப்பதை படித்துப்பார்க்காமலே,என்னை குறை சொல்லும் ஒரே நோக்கத்துடன் பேசுவதாக தெரிகிறது.

கச்சத்தீவு.ஆர்க் தளத்தில் இருப்பதை சொன்னேன்,மேலும் கேட்டதால் விக்கியில் இருப்பதும் சொன்னேன்.

விக்கி 100% சரினு நானும் சொல்லவில்லை, கூடுதல் விளக்கத்துக்கு தான் சொல்லி இருக்கிறேன்.

ஹி...ஹி நீங்க விக்கியை சான்றா சொன்னதேயில்லையா :-))

சரி நீங்க சொல்வதற்காவது தரவுகள் கொடுங்களேன்,அதுவும் செய்யாதீங்க :-))

வாயாலே வடை சுடுவதில் பெரிய ஆளா இருப்பீங்க போல :-))

#பதிவு போடும் போதே பின்க்குறிப்பில் சொல்லிவிட்டேன்,இப்பவும் சொல்கிறேன் ,மாற்றுக்கருத்தினை தரவுடன் சொன்னால் திருத்தம் செய்வேன்,சும்மா நான் சொல்வேன் ,அதான் சரினு சொன்னால் எப்பூடி?
------------

கொங்கு நாட்டார்,

தூக்கத்தில் கொசு கடிக்காமல் இருக்கனும்னா தூங்காம இருக்கனும் :-))

# ஹி...ஹி இந்த சோக்கை முன்னர் நரியாருக்கு நான் சொன்னேன்,இப்போ வியாசருக்கா :-))
--------------
ஜோ,

நன்றி!

தமிழில் தானே விளக்கம் சொல்லியிருந்தேன் ,மறுபடியும் அதையே கேட்டால் எப்பூடி?

ராமேஷ்வரம் முன்னரே இருந்தது, ஆனால் தீவானது புயலுக்கு பின்.

12 ஆம் நூற்றாண்டு வரையில் ராமேஷ்வரத்தில் கல்லால் கட்டப்பட்ட கோயிலே இல்லை.

பின்னர் இலங்கை மன்னன் பராக்கிரம பாகு கட்ட ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டார், அதன் பின்னர் 14 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் ராமநாதபுரம் மன்னரே முழுக்கோயிலைக்கட்டினார். இப்போ இருப்பது போல பெருசா கட்டினதே 18 ஆம் நூற்றாண்டில் தான்.

நம்ம ஊருல சும்மா எல்லாக்கோயிலையும் பல ஆயிரம் ஆண்டு முன் கட்டியது என சொல்வதே வழக்கமா போச்சு.

viyasan said...

//12 ஆம் நூற்றாண்டு வரையில் ராமேஷ்வரத்தில் கல்லால் கட்டப்பட்ட கோயிலே இல்லை.
பின்னர் இலங்கை மன்னன் பராக்கிரம பாகு கட்ட ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டார்.//

இல‌ங்கை ம‌ன்ன‌ன் முத‌லாம் பராக்கிர‌ம‌பாகுவின் கால‌ம் 11ம் நூற்றாண்டு. அவ‌ர் த‌ன‌து வாழ்நாளில் தான் ராமேஸ்வ‌ர‌ம் கோயிலில் க‌ட்டிடத்திருப்ப‌ணி செய்திருப்பாரே த‌விர‌ இற‌ந்த‌ பிற‌கு அல்ல‌. அதுவும் நிச்ச‌ய‌மாக‌ க‌ல்லால் தான் க‌ட்டியிருப்பார். ராமேஸ்வ‌ர‌ம் கோயிலில் க‌ருவறை விமான‌ப்ப‌குதி மிக‌வும் ப‌ழ‌மையான‌து.

//14 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் ராமநாதபுரம் மன்னரே முழுக்கோயிலைக்கட்டினார்//
சோழ‌ம‌ன்ன‌ன் ப‌ராந்த‌க‌சோழ‌ன் 9ம் நூற்றாண்டிலேயே ராமேஸ்வ‌ர‌ம் கோயிலுக்குத் திருப்ப‌ணி செய்த‌தாக‌ ப‌டித்த‌ ஞாப‌க‌முண்டு. க‌ட‌ல்தாண்டி ப‌ல‌ நாடுக‌ளிலெல்லாம் க‌ற்றளிக‌ள் க‌ட்டிய‌ சோழ‌ர்க‌ள், பாட‌ல்பெற்ற‌ த‌லமாகிய‌ ராமேஸ்வ‌ர‌த்தில், அதுவும் இவ்வ‌ள‌வு ப‌ழ‌மையும்,பெருமையும் நிறைந்த‌ இட‌த்திலுள்ள‌ கோயிலுக்குத் திருப்ப‌ணி செய்து க‌ல்லால் கட்டடியிருக்க‌ மாட்டார்க‌ள் என்று ந‌ம்ப‌முடிய‌வில்லை. க‌ண்ட‌, க‌ண்ட‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளையும் ந‌ம்பி, குழிக்குள் இற‌ங்கி நின்று கொண்டு, மேலும் வெகு வேகமாக‌த் தோண்டுகிறார் போலிருக்கிற‌து வவ்வால் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் பஞ்சாய‌த்துத் த‌லைவ‌ர். :-)

viyasan said...

//கச்சத்தீவு.ஆர்க் தளத்தில் இருப்பதை சொன்னேன்,மேலும் கேட்டதால் விக்கியில் இருப்பதும் சொன்னேன்.//
ராமேஸ்வ‌ர‌ம் தீவு ம‌ட்டுமில்லை, நீங்க‌ள் குறிப்பிட்ட‌ 11 தீவுக‌ளில் எந்த‌ ஓரு தீவும் 1480ம் ஆண்டுப் புய‌லில் க‌ட‌லிலிருந்து மேலே கிழ‌ம்ப‌வில்லை என்ப‌து இப்போதாவ‌து நீங்க‌ள் உண‌ர்ந்திருக்க‌ வேண்டும். அந்த‌ இணைய‌த்த‌ள‌த்தின் த‌வ‌றை நீங்க‌ளும் உங்க‌ளின் வலைப்ப‌திவில் தொட‌ர‌ வேண்டுமா? இப்பொழுதாவ‌து திருத்த‌லாம் தானே. அல்ல‌து இன்னும் ராமேஸ்வர‌மும் நீங்க‌ள் குறிப்பிட்ட‌ 11 தீவுக‌ளும் 1480ம் ஆண்டுப் புய‌லில் உருவானவை என்று நீங்க‌ள் ந‌ம்புகிறீர்க‌ளா? அப்ப‌டியானால் அதையாவ‌து வெளிப்ப‌டையாக‌த் தெரிவிக்க‌லாம் தானே. :-)

viyasan said...

//கச்சத்தீவு.ஆர்க் தளத்தில் இருப்பதை சொன்னேன்,மேலும் கேட்டதால் விக்கியில் இருப்பதும் சொன்னேன்.//

இதுக்குத் தான் சொல்ற‌து, கொப்பி அடிச்சா வ‌குப்பில‌ கெட்டிக்கார‌ன் எவ‌னோ அவ‌னிட‌மிருந்து தான் கொப்பியிடிக்க‌ வேணும், ஆனா நீங்க‌ கிளாசில‌ பின்வரிசையில‌ இருக்கிற‌வ‌னிட‌மிருந்து கொப்பி அடிச்சிருக்கிறீர்க‌ள் போல் தெரிகிறது.:-)

வெறும் எழுந்த‌மான‌மாக‌ வாசிக்கும் போதே க‌ச்ச‌தீவு.கொம் இலுள்ள‌ க‌ருத்துக்க‌ளில் பெரும்பாலான‌வை த‌வ‌றானவை என்ப‌து தெரிகிற‌து.

வவ்வால் said...

வியாசர்,

//இல‌ங்கை ம‌ன்ன‌ன் முத‌லாம் பராக்கிர‌ம‌பாகுவின் கால‌ம் 11ம் நூற்றாண்டு. அவ‌ர் த‌ன‌து வாழ்நாளில் தான் ராமேஸ்வ‌ர‌ம் கோயிலில் க‌ட்டிடத்திருப்ப‌ணி செய்திருப்பாரே த‌விர‌ இற‌ந்த‌ பிற‌கு அல்ல‌. அதுவும் நிச்ச‌ய‌மாக‌ க‌ல்லால் தான் க‌ட்டியிருப்பார். ராமேஸ்வ‌ர‌ம் கோயிலில் க‌ருவறை விமான‌ப்ப‌குதி மிக‌வும் ப‌ழ‌மையான‌து.//

எங்கேயிருந்து தான் இப்படியான ஆளுங்க கிளம்பிவராங்களோ தெரியலையே ,முடியல ,அவ்வ்...

கீழ்காணவும்...

//Parākramabāhu I, also called Parākramabāhu The Great (born c. 1123, Punkhagama, Ceylon—died 1186, Polonnaruwa), Sinhalese king of Ceylon (1153–86) who united the island under one rule, reformed Buddhist practices, and sent successful expeditionary forces to India and Burma.//

http://www.britannica.com/EBchecked/topic/442755/Parakramabahu-I

1100 ஆம் ஆண்டென துவங்கினால் ,11 என இருப்பதால் 11 ஆம் நூற்றாண்டு அல்ல 12 ஆம் நூற்றாண்டு, அஞ்சாம் வகுப்பு வரலாறு படிச்சாக்கூட அப்படித்தான் எங்க ஊருல சொல்லித்தராங்க, ஒலகம் முழுக்கவே அப்படித்தான்.

ஆண்டு கால கணக்கில்,

0-100- முதல் நூற்றாண்டு,

100-200 - இரண்டாம் நூறாண்டு என போகும்.

இப்போ 2013 என சொன்னால் இது 20 ஆம் நூற்றாண்டு அல்ல, 21 ஆம் நூற்றாண்டு , ஸ்ஸ்ப்பா என்னப்போய் நூற்றாண்டு என்றால் எப்படி கணக்கிடுவாங்கனு என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வைக்குறாங்களே ,என்ன கொடுமை சார் இது :((

தலைவரே ,இப்படித்தான் எப்பவுமே இல்லை, எப்பவுமே இப்படித்தானா ?

# //சோழ‌ம‌ன்ன‌ன் ப‌ராந்த‌க‌சோழ‌ன் 9ம் நூற்றாண்டிலேயே ராமேஸ்வ‌ர‌ம் கோயிலுக்குத் திருப்ப‌ணி செய்த‌தாக‌ ப‌டித்த‌ ஞாப‌க‌முண்டு.//

அடேங்கப்பா என்னா ஒரு ஞாபக சக்தி ,கிழிஞ்சது போ :-))

//The History of The Temple

It is said that the ancient shrine was placed in a thatched hut until the 12th century. Parakrama Bahu of Sri Lanka built the first ever masonry structure here. The Setupathy rulers of Ramanathapuram completed the rest of the temple. Some of the temple vimaanams are similar to the Vimaanams of the Pallava period. Much more was added to the temple between the 12th and the 16th centuries. The long corridor (3rd prakaram) dates back only to the 18th century. The Gandhamadhana Parvatam (hill) offers a panoramic view of the temple. Travancore, Ramanathapuram, Mysore and Pudukkottai kingdoms provided royal patronage to this famous Hindu temple.//

http://www.indohistory.com/rameshwaram_temple.html

12 ஆம் நூற்றாண் வரையில் கோயில் ஒரு குடிசையாக தான் இருந்தது என இந்த தளத்தில் மட்டுமல்லா எல்லாவற்றிலும் இருக்கு, தேடிப்பார்க்கவும்.

பராந்தக சோழன் செய்த சேவைப்பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை, ஒரு வேலை குடிசை கட்ட கீத்து,கழி வாங்கி கொடுத்தானோ என்னமோ :-))

# //அல்ல‌து இன்னும் ராமேஸ்வர‌மும் நீங்க‌ள் குறிப்பிட்ட‌ 11 தீவுக‌ளும் 1480ம் ஆண்டுப் புய‌லில் உருவானவை என்று நீங்க‌ள் ந‌ம்புகிறீர்க‌ளா? அப்ப‌டியானால் அதையாவ‌து வெளிப்ப‌டையாக‌த் தெரிவிக்க‌லாம் தானே. :-)//

நான் முன்னர் உள்ள தகவல்களை தரவுகளாக கொண்டு பதிவு எழுதியுள்ளேன், அதற்கு மாற்றாக தரவுகள் கொடுக்கப்பட்டால் ஏற்கப்படும். நானும் கேட்டுவிட்டேன் , ஏதேனும் சுட்டிக்கிட்டி காட்டுங்க ,அதுக்கு ஏற்றார்ப்போல மாற்றிவிடலாம்னு , அதெல்லாம் செய்யாம, நீங்க தான் ஒலகவரலாற்றின் ஒரே ஆதாரம் போல வாயாலவே வடை சுட்டுக்கிட்டு இருக்கீரே, எதாவது தரவு காடும்,பொறவு மாற்றிப்புடலாம் :-))

# //இதுக்குத் தான் சொல்ற‌து, கொப்பி அடிச்சா வ‌குப்பில‌ கெட்டிக்கார‌ன் எவ‌னோ அவ‌னிட‌மிருந்து தான் கொப்பியிடிக்க‌ வேணும், ஆனா நீங்க‌ கிளாசில‌ பின்வரிசையில‌ இருக்கிற‌வ‌னிட‌மிருந்து கொப்பி அடிச்சிருக்கிறீர்க‌ள் போல் தெரிகிறது.:-) //

ஸ்ஸ்ஷ்பா ,என்ன கொடுமையா இது, பதிவு எழுதும் போதே ,இங்கே ,இங்கேயிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளதுனு சொல்லி நன்றியெல்லாம் சொல்லிடுறேன் (அப்படி வெளிப்படையாக சொல்லும் பதிவர்கள் வெகு குறைவு),அப்புறமும், புரிஞ்சிக்கலைனு ,நான்கைந்து முறை சொன்னப்பிறகு ,கொப்பியடிச்சாலும் நல்லா கொப்பியடிக்கணும்னா எப்பூடி?

உங்க கணக்குப்படியே முதல்வகுப்பில் தேறக்கூடிய இணைய தளங்களை காட்டினால் அதிலிருந்து தகவல்களை பயன்ப்படுத்திக்கொண்டு(கொப்பி அடிச்சு) பதிவெழுத தயார் :-))

---------------------

Anonymous said...

ஹல்லோ...

வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள பேசறேன்....வவ்வால் இருக்காரா....:-))))

--கொங்கு நாட்டான்.

viyasan said...

//ஆண்டு கால கணக்கில்,
0-100- முதல் நூற்றாண்டு,
100-200 - இரண்டாம் நூறாண்டு என போகும்//

Oops.... :-)

//பராந்தக சோழன் செய்த சேவைப்பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை, ஒரு வேலை குடிசை கட்ட கீத்து,கழி வாங்கி கொடுத்தானோ என்னமோ//

வ‌ல‌ஞ்சேரி, திருத்த‌ணி செப்புத்த‌க‌ட்டைப்ப‌ற்றிக் கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா? இல்லை அல்ல‌வா, ஏனென்றால் நீங்க‌ள் காப்பிய‌டிக்கும் இணைய‌த்தள‌ங்க‌ளில் அதெல்லாம் இருக்காது. :-)

Thiruttani and Velanjeri Copper Plates:
http://www.tamilartsacademy.com/articles/article28.xml

"One of the copper plates was issued by the Pallava ruler Aparajitavarman in his ninth year. The other one was issued by Parantaka Chola in the 25th year about 930 A.D. Both these plates, particularly the Pallava copper plate throws very valuable light on the political and religious history of Tamilnadu and is the most important discovery in recent years.

The Chola copper plate is also of great interest. It refers to the conquest of Kanchipuram and erection of imposing palaces there by Karikala Chola. It mentions the spider story about the birth of Koccengannan. For the first time, the name of Vijayalayachola's father is known as Orriyuran. About PARANTAKA, the donor, the copper plate states that he PERFORMED TULABHARA IN THE TEMPLES of Kanyakumari, RAMESVARAM and Srirangam."


உண்மையில் உல‌கெல்லாம் க‌ற்றளி க‌ட்டிய‌ சோழ‌ர்க‌ள் ஒரு குடிசைக் கோயிலுக்குச் சென்று துலாபாரம் ந‌ட‌த்தி விட்டு, அந்த‌க் கோயிலைத் திருத்திய‌மைக்க‌வில்லையென்ப‌து ந‌ம்ப‌முடியாதெவொன்று. அதிலும் ராமேஸ்வ‌ர‌ம் மிக‌வும் முக்கிய‌மான‌ கோயில்.

எது எப்ப‌டியிருந்தாலும், ராமேஸ்வ‌ர‌ம்தீவு 1480 இல் க‌ட‌லுக்குள்ளிருந்து வெளியே வ‌ர‌வில்லை என்ப‌து உங்க‌ளுக்குத் தெளிவாகி விட்ட‌து என்ப‌தில் என‌க்கு மிக்க‌ மகிழ்ச்சியே. :-) :-)

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

எங்க ஓடிப்போயிறப்போரோம், இங்கே தான் உலாத்துக்கிட்டு கிடப்போம்,சொல்லும்.

ஹி...ஹி அடியேன் கவலையில்லா காளையர் சங்க தலிவரு :-))
------------

வியாசர்,

என்னத்தையோ முழுங்க முடியாம ஊப்ஸ் கூப்ஸ்னு சவுண்டு விடுறாப்போல தெரியுது, நூற்றாண்டு எப்படி சொல்வதுனு தெரியலையேனு கவலைப்படாதிங்க , சரி இப்போ சொல்லுங்க 2013 எந்த நூற்றாண்டு :-))

# அய்யத்தலக்கடி கொய்யா, துலாபாரம் கொடுத்தால் கோயில் இல்லாமலா கொடுத்திருப்பான்னு சூப்பரா கண்டுப்பிடிச்சு இருக்கிங்களே :-))

மெனக்கெட்டு துலாபாரம் கொடுத்ததுக்கு எல்லாம் செப்பேடு எழுத தெரிஞ்ச சோழ மன்னனுக்கு கட்டிய கோயிலைப்பற்றி செப்பேடு எழுதி வைக்க தெரியாம போச்சே :-))

நீங்க எல்லாத்தையுமே யூகத்தின் அடிப்படையில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க, நல்ல வேளை அங்கே பராந்தக சோழன் உச்சாவோ,கக்காவோ போனான்னு எழுதி வைக்கலை, எழுதி இருந்தா , அந்த காலத்திலேயே இராமேஷ்வரத்தில வெஸ்டர்ன் டாய்லட் கூட கட்டியிருந்தார்,உலகமெல்லாம் கற்றளி கட்டிய மன்னன் வெட்டவெளியிலா உச்சா போயிருப்பான் ,எனவே கண்டிப்பாக வெஸ்டர்ன் டாய்லெட் இருந்திருக்க வேண்டும்,இல்லைனா எப்படி உச்சா போயிருக்க முடியும்னு "அறிவுப்பூர்வமா" பேசியிருப்பீங்க :-))

# ராமேஷ்வரம் தீவானது 1480 இல் நடந்திருக்கலாம்னு முதல் விளக்கத்திலேயே சொல்லியாச்சு, அப்புறமும் வளைச்சு வளைச்சு பேசிட்டு என்னமோ புதுசா நீங்களே சொன்னாப்போல பேசிட்டு.

நான் சொன்னப்பதிவில் கூட கடலில் இருந்து ,அப்படியே எழுந்ததுனு போட்டில்லை, உருவானது என்று தான் போட்டிருக்கு,நானும் அதையே சொல்லி இருக்கிறேன்.

நீங்களா வார்த்தைகளை திரித்து பேசிப்பின்னர், எப்படினு கேட்டுக்கிட்டு இருக்கீங்க :-))

கச்சத்தீவு ஆதிகாலத்தில் இருந்து இலங்கைக்கே சொந்தம் என சொல்வது உண்மையாக இருந்தால் எதுக்கு 1974 இல் ஒப்பந்தம் போட்டு கேட்டு வாங்கணும், இதோ பாருங்க ஆதாராம் இருக்கு எங்க ஏரியானு சொல்லிட்டு வச்சிக்க வேண்டியது தானே?

சொந்தம்னு சொல்லிக்க ஆதாரமில்லாததால் தான் இந்தியாவின் அரசியல் சூழலை பயன்ப்படுத்திக்கொண்டு தந்திரமாக கேட்டு வாங்கியது இலங்கை.

viyasan said...

//கச்சத்தீவு ஆதிகாலத்தில் இருந்து இலங்கைக்கே சொந்தம் என சொல்வது உண்மையாக இருந்தால் எதுக்கு 1974 இல் ஒப்பந்தம் போட்டு கேட்டு வாங்கணும், இதோ பாருங்க ஆதாராம் இருக்கு எங்க ஏரியானு சொல்லிட்டு வச்சிக்க வேண்டியது தானே?//


இந்தியா அடாவ‌டித்த‌ன‌மாக‌ க‌ச்ச‌தீவை bargain chip ஆகப் பாவித்து க‌ட‌ல் எல்லைக‌ளைத் தீர்மானிக்க‌ முடிவு செய்தது. இல‌ங்கையிட‌ம் ஆதார‌ங்க‌ளிருந்த‌தால் இல‌ங்கை ச‌ர்வதேச‌ நீதிம‌ன்ற‌ம் ம‌ட்டும் சென்றிருக்கும். ஆனால் ராம‌நாத‌புர‌ம் ச‌மிந்தாரி ஆதார‌ங்க‌ள் வ‌லுவான‌தல்ல‌ என்ப‌தை இந்தியா உண‌ர்ந்த‌தால் தான் இந்தியா அந்த‌ள‌வுக்கெல்லாம் வ‌ற்புறுத்தாம‌ல் பிர‌ச்ச‌னையைத் தீர்த்துக் கொண்ட‌து. இந்தியா க‌ச்சதீவைப் bargain chip ஆகப் பாவித்து இல‌ங்கையின் க‌ட‌லெல்லையை 40 கிலோ மீற்றர் இழ‌க்க‌ச் செய்த‌து. க‌ச்ச‌தீவு விட‌ய‌த்தில் இழ‌ந்த‌து இல‌ங்கை தானே த‌விர‌ இந்தியா அல்ல‌. அண்டை நாட்டுட‌ன் ந‌ட்புற‌வைப் பேண‌ இல‌ங்கை தான் சுமுகமான‌ முடிவுக்கு ஒத்துழைத்த‌து. இராமநாதபுரம் சமிந்தாரி ஆதாரங்களில் இந்திய மத்திய அரசுக்கு மட்டுமல்ல, நீங்களே ஆறுதலாக வாசித்துப் பார்த்தால் உங்களுக்கே அவை எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவை என்பது புரியும்.

viyasan said...

//ராமேஷ்வரம் தீவானது 1480 இல் நடந்திருக்கலாம்னு முதல் விளக்கத்திலேயே சொல்லியாச்சு, //

இதில் ஊகிப்ப‌து நீங்க‌ள் தானே த‌விர‌ நான‌ல்ல‌, அப்ப‌டியெதுவும் ந‌ட‌க்க‌வில்லை, ராமேஸ்வ‌ர‌ம் ஒரு தீவாக‌த் தான் 1480க்கு முன்னால் ம‌ட்டும‌ல்ல அத‌ற்கு முன்னாலும் இருந்த‌து என்ப‌து குழ‌ந்தைக்கும் தெரியும் உங்க‌ளைத் த‌விர‌. உதார‌ண‌மாக யாழ்ப்பாண‌ம் குடாநாடு என்ப‌து எல்லோருக்கும் தெரியும், அத‌னால் எப்பொழுது தொட‌க்க‌ம் குடாநாடு என்று எந்த‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலிலும் இல்லை. அத‌ற்காக‌ யாழ்ப்பாண‌ம் 1480 இல் தான் குடாநாடாகிய‌து என்று நான் சொல்லி விட்டு, அந்த‌ப் புய‌லில் யாழ்ப்பாண‌த்தையும், ப‌ண்ணைக்க‌ட‌லையும் இணைக்கும் பாதையில் கொஞ்சம் உடைந்து போய்விட்ட‌து, அத‌னால் யாழ்ப்பாண‌ம் 1480 புய‌லில் தான் குடாநாடாகிய‌து என்று நாம் சொன்னால் எல்லோரும் நிச்ச‌ய்மாக‌ச் சிரிப்பார்க‌ள் அது போல் தான் இதுவும்.

நாய் நக்ஸ் said...
This comment has been removed by a blog administrator.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by a blog administrator.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by a blog administrator.
நாய் நக்ஸ் said...
This comment has been removed by a blog administrator.
வவ்வால் said...

வியாசர்,

//இந்தியா அடாவ‌டித்த‌ன‌மாக‌ க‌ச்ச‌தீவை bargain chip ஆகப் பாவித்து க‌ட‌ல் எல்லைக‌ளைத் தீர்மானிக்க‌ முடிவு செய்தது. இல‌ங்கையிட‌ம் ஆதார‌ங்க‌ளிருந்த‌தால் இல‌ங்கை ச‌ர்வதேச‌ நீதிம‌ன்ற‌ம் ம‌ட்டும் சென்றிருக்கும். ஆனால் ராம‌நாத‌புர‌ம் ச‌மிந்தாரி ஆதார‌ங்க‌ள் வ‌லுவான‌தல்ல‌ என்ப‌தை இந்தியா உண‌ர்ந்த‌தால் தான் இந்தியா அந்த‌ள‌வுக்கெல்லாம் வ‌ற்புறுத்தாம‌ல் பிர‌ச்ச‌னையைத் தீர்த்துக் கொண்ட‌து. இந்தியா க‌ச்சதீவைப் bargain chip ஆகப் பாவித்து இல‌ங்கையின் க‌ட‌லெல்லையை 40 கிலோ மீற்றர் இழ‌க்க‌ச் செய்த‌து. க‌ச்ச‌தீவு விட‌ய‌த்தில் இழ‌ந்த‌து இல‌ங்கை தானே த‌விர‌ இந்தியா அல்ல‌. அண்டை நாட்டுட‌ன் ந‌ட்புற‌வைப் பேண‌ இல‌ங்கை தான் சுமுகமான‌ முடிவுக்கு ஒத்துழைத்த‌து.//

உங்களை நினைச்சா சிரிப்பா தான் இருக்கு, சொல்வதெல்லாமே யூகம் தான், ஆனால் என்னைப்பார்த்து யூகம்னு சொல்லுங்க.

நீங்க சொல்வதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கா? முதலில் இலங்கையிடம் ஆதாரம் என எதாவது இருந்தா சும்மா விட்டு இருக்குமா?

உமக்கு வரலாறும் தெரியலை, கடல் எல்லை பற்றியும் தெரியலை, இலங்கைக்கு தான் மொத்தமா எல்லா கடலும் சொந்தமா என்ன, இந்தியாவுக்கு கடல் எல்லையே வராதா?

பிரிட்டீஷ் ஆண்டப்போது கூட இலங்கை பிரிட்டீஷ் இந்தியாவின் கீழ் வரும் நிர்வாக அமைப்பு தான்.

ஒரே ஒரு உரிமை , நேரடியா இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் தலைமை, ஆனால் நிர்வாக,ராணுவ ,ஆளுமை மெட்ராஸ் பிரசிடென்சி கீழ்.

இங்கைக்கு கவர்னர் தான் ,கவர்னர் ஜெனரல் கிடையாது, நீதிமன்ற நடவடிக்கைகள் மெட்ராஸ் உச்சநீதிமன்றத்தின் கீழ்(ஆம் அப்பொழுது உச்ச நீதிமன்றம் மெட்ராஸ் மற்றும் கல்கத்தா)

விடுதலையின் போது இந்திய தலைவர்கள் இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதினு சொல்லி கேட்டிருந்தால் ,இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர்த்துவிட்டு போயிருப்பாங்க, இந்திய தலைவர்கள் வாழைப்பழ சோம்பேறிகள் என்பதால் எதுவும் கேட்கவில்லை(இதுக்கு பின்னர் ஒரு சதியும் இருக்கு)

சரி உம்ம வரலாற்று பொது அறிவுக்கு ஒரு கேள்வி, இலங்கையில் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப்போராட்டம் நடந்ததா?

உண்மையில் 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததா?

உண்மையான வரலாற்றை என்னால் சொல்ல முடியும் ,வேண்டாம்னு விட்டா சும்மா கிடக்கவனை சொறிஞ்சு விடுறீர் ,அப்புறம் குத்துதே குடையுதேனு பொலம்ப வேண்டியதாகிடும் :-))
-----------

நக்ஸ்,

என்ன இம்சையா , சம்பந்தம் இல்லாம ஏதோ சொல்லிக்கிட்டு,மன்னிக்கவும், படிப்பவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் உமது கருத்துக்களை நீக்கிவிட்டேன்.

viyasan said...

தலைவரே,

இதிலிருந்து உங்க‌ளுக்கு இல‌ங்கையைப் ப‌ற்றி எதுவும் தெரியாது என்ப‌து தெரிகிற‌து.. இல‌ங்கைய‌ர‌களை பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் இந்திய‌ர்க‌ளாக‌க் க‌ருதிய‌தில்லை. இல‌ங்கைய‌ர்க‌ள், சிங்கள‌வ‌ர்களும், த‌மிழ‌ர்க‌ளும், முஸ்லீம்க‌ளும் த‌ம்மை இந்திய‌ர்க‌ளாக‌க் க‌ருதிய‌துமில்லை. ஒரு சில‌ த‌லைமைச்செய‌ல‌க‌ங்க‌ளை பிரிட்டிசார் அவ‌ர்க‌ளின் வச‌திக்காக‌ இந்தியாவில் வைத்திருந்திருக்க‌லாம். இன்று கூட‌ ஐக்கிய‌ ராச்சிய‌த்துக்கு விசாவுக்கான‌ அலுவ‌ல‌க‌ம் இந்தியாவில் தான் உண்டு. அதெல்லாம் சும்மா, அதற்காக எங்களை இந்தியர்கள் என்று சொல்ல முடியாது. :-))))

//இங்கைக்கு கவர்னர் தான்,கவர்னர் ஜெனரல் கிடையாது//
இல‌ங்கைக்கு க‌வ‌ர்ன‌ர் இல்லை, க‌வர்ன‌ர் ஜென்ர‌ல் தான் இருந்தார்க‌ள். 

//நீதிமன்ற நடவடிக்கைகள் மெட்ராஸ் உச்சநீதிமன்றத்தின் கீழ்(ஆம் அப்பொழுது உச்ச நீதிமன்றம் மெட்ராஸ் மற்றும் கல்கத்தா//
1801 இலிலேயே இல‌ங்கை சுப்ரீம் கோர்ட் நிறுவ‌ப்ப‌ட்டு விட்ட‌து. நீங்க‌ள் எந்த‌ ஆண்டில் மெட்ராஸ் உச்ச‌நீதிமன்ற‌த்தின் கீழ் இருந்ததாகக் குறிப்பிடுகிறீர்க‌ள்.

"Royal Charter of Justice of 1801 of King George the 3rd establishing the Supreme Courts of the Island of Sri Lanka." 
http://www.supremecourt.lk/index.php/history.html

//விடுதலையின் போது இந்திய தலைவர்கள் இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதினு சொல்லி கேட்டிருந்தால் ,இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர்த்துவிட்டு போயிருப்பாங்க, இந்திய தலைவர்கள் வாழைப்பழ சோம்பேறிகள் என்பதால் எதுவும் கேட்கவில்லை(இதுக்கு பின்னர் ஒரு சதியும் இருக்கு)//
Nice Try. இலங்கைத் த‌மிழ‌ர்க‌ளே அதை நிச்ச‌ய‌மாக‌ எதிர்த்திருப்பார்க‌ள்.

//சரி உம்ம வரலாற்று பொது அறிவுக்கு ஒரு கேள்வி, இலங்கையில் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப்போராட்டம் நடந்ததா?///

இல‌ங்கையில் சுத‌ந்திர‌த்துக்காக‌ப் பெரிய‌ள‌வில் போராட்ட‌ம் ந‌ட‌க்க‌வில்லை, ஏனென்றால் இல‌ங்கைய‌ர்க‌ள் பெரிதாக‌ பிர‌ச்ச‌னையிருப்ப‌தாக‌ உண‌ர்வில்லை. இல‌ங்கை அப்பொழுது செல்வாக்கான‌ நாடு, இந்திய‌ர்க‌ள் (பாகிஸ்தானிய‌ர் உட்ப‌ட‌) அங்கு வேலைக்கு வ‌ந்தார்கள். இல‌ங்கை சுத‌ந்திர‌ம் அடைவ‌த‌ற்கு கார‌ணியாக‌வும், முன்ன‌ணியிலும் திக‌ழ்ந்தவ‌ர்க‌ள் இல‌ங்கைத் த‌மிழ்த்தலைவ‌ர்க‌ளாகிய‌ சேர். இராம‌நாத‌னும், சேர். அருணாச‌ல‌மும் தான். அவ‌ர்க‌ளுக்கு பிரித்தானிய‌ அர‌சிலும், அர‌ச குடும்ப‌த்திலும் ந‌ட்புற‌வு ம‌ட்டும‌ல்ல‌,சேர் ஆன‌ந்த‌க்குமார‌சாமியின் த‌ந்தை சேர்.முத்துக்குமார‌சுவாமி அர‌ச‌குடும்ப‌த்தில் உற‌வினரை ம‌ண‌ம் செய்திருந்தார். இந்தியா சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ர், சேர் இராம‌நாத‌னின் முய‌ற்சியினால் தான் இல‌ங்கைக்கு சுத‌ந்திர‌ம் கிடைத்த‌து.

//உண்மையான வரலாற்றை என்னால் சொல்ல முடியும் ,வேண்டாம்னு விட்டா சும்மா கிடக்கவனை சொறிஞ்சு விடுறீர் ,அப்புறம் குத்துதே குடையுதேனு பொலம்ப வேண்டியதாகிடும் :///
சொல்லுங்க‌ள், நிச்ச‌ய‌மாக‌ அதில் ப‌ல‌ ஒட்டைக‌ளும், த‌வ‌றுக‌ளும், க‌ற்ப‌னைக‌ளும் இருக்கும். அவ‌ற்றை நான் சுட்டிக்காட்டி திருத்துகிறேன், பார்த்தீர்க‌ளா, மேலேயுள்ள உங்க‌ளின் இல‌ங்கையைப் ப‌ற்றிய‌ ஒரு சில‌வ‌ரிக‌ளிலேயே எத்த‌னை ஓட்டைகள் என்று.  :-))))  

வவ்வால் said...

வியாசர்,

இலங்கையில் இருந்தது சுப்ரீம் கோர்ட் என்ற பெயரில் தான்,ஆனால் மெட்ராஸ் மாகாண சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவது வழக்கமாக இருந்தது,அதை வைத்தே சொன்னேன், ஒரே ஆட்சி என்பதால் எங்கும் நடத்தலாம் என நடத்தினார்களோ என்னமோ. நான் வழக்கு விரங்களைப்பற்றி படித்ததை வைத்து சொன்னது, நீங்கள் 1801 ல் அங்கு சுப்ரீம் கோர்ட் வந்துவிட்டதாக சொன்னதால் ,அதற்கு முந்த வரலாற்றை வைத்து சொல்லிவிட்டேனோ என நினைக்கிறேன்.

ஆனால் பலவற்றுக்கும் மெட்ராஸ் பிரசிடென்சி நிர்வாகத்தின் கீழ் வந்ததால் ,அப்போது இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்படும் சூழல் நிலவியது ,அதனை சில இலங்கை தலைவர்கள் விரும்பாததால் தான் 1948க்கு தள்ளிப்போனது,அதிலும் பெரிய சதி இருக்கிறது, இன்னும் அதனை கண்டுப்பிடிக்க காணோம்,எனக்கு இலங்கை வரலாறு தெரியவில்லை என சொல்லிக்கொண்டு.

# சரி இலங்கைக்கு கவர்னர் ஜெனரல்கள் இருந்தர்கள் என்கிறீர்களே எப்போதிலிருந்து இருந்தார்கள், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு சுட்டியக்காட்டினாப்போல காட்ட வேண்டியது தானே, கண்டிப்பா தேடிப்பார்த்திருப்பீங்க ,ஆனால் அதை சொன்னால் உங்க சாயம் வெளுத்து விடும் என்பதால் சொல்லவில்லை :-))

இலங்கைக்கு முதல் கவர்னர் ஜெனரலே 1948 இல் தான் நியமிக்கப்பட்டார் :-))

http://en.wikipedia.org/wiki/Governor-General_of_Ceylon

நல்லாப்படிச்சு பாருங்க!

ஏன் 1948 வரையில் இல்லை, சரி சுதந்திரம் வழங்கியதாக சொல்லப்படும் 1948 இல் நியமித்தார்கள் ,ஆனால் அப்புறம் ஏன் 1971 வரையில் கவர்னர் ஜனரலே பதவியில் இருந்தது ஏன். அப்போ இலங்கை சுதந்திரமே அடையவில்லையா :-)),மேலும் 72 வரையில் பிரிட்டிஷ் குயீன் தான் ஆட்சியின் தலைமை.

சொல்லப்போனால் 1948 இல் இலங்கை சுதந்திரமே அடையவில்லை, டொமினியன் ஸ்டேட்டஸ் தான் பெற்றது.

காரணம் இலங்கை தலைவர்களே சுதந்திரத்தினை விரும்பவில்லை, வெள்ளைக்காரனா பார்த்து , சரி டொமினியனா மாறீக்கோங்கனு கொடுத்தது தான்.

இந்தியா,பாகிஸ்தான்,பர்மா,வியட்நாம்,சிங்கப்பூர், மலேஷியானு எல்லா நாடுகளும் முழு சுதந்திரம் அடைந்த காலத்தில் டொமினியன் அந்தஸ்து போதும் என கையக்கட்டிக்கிட்டு சொன்னவங்க இலங்கை தலைவர்கள், அதை எறுமை மாடு மாதிரி ஙேனு பார்த்துக்கிட்டு இருந்தவங்க இலங்கை மக்கள் :-))

இந்த லட்சணத்தில் நீங்க அடுத்தவங்களுக்கு வரலாறு தெரியலைனு சவடலாப்பேசிக்கிட்டு காலம் தள்ளுறிங்க.

இலங்கை தலைவர்கள் ஏன் சுதந்திரம் கேட்கவில்லை என்பதன் சதியை நீங்கள் உணராத வரையில் ,இலங்கையில் மக்களுக்கு அமைதி கிடைப்பதே இயலாத ஒன்று.

நாய் நக்ஸ் said...

நன்றி....!!!!!!!

புரியாத மாதிரி.....
மீண்டும்...மீண்டும்....நன்றி...இதையும் நீக்கவும்...ப்ளீஸ்...

நீக்கியதற்கு நன்றி...!!!!
தொடர்புக்கு வந்தால் தானே...பரவா இல்லை...பதிவு போடுகிறேன்.....விரைவில்....

வவ்வால் said...

//Nice Try. இலங்கைத் த‌மிழ‌ர்க‌ளே அதை நிச்ச‌ய‌மாக‌ எதிர்த்திருப்பார்க‌ள்.
//

ஹி...ஹி எல்லா நாடும் முழுமையா சுதந்திரம் அடைவதை பார்த்தப்பின்னரும் ,சுதந்திரம் வேண்டும்னே கேட்காத மக்களா இந்தியாவுடன்ன் இணைவதை எதிர்த்திருக்க போகிறார்கள்.

பொதுமக்களுக்கோ, பிரிட்டீஷுக்கோ அப்படி ஒரு எண்ணம் வரக்கூடாதுனே சுதந்திரக்கோரிக்கையே வைக்காமல், எங்களுக்கு டொமினியன் அந்தஸ்தே போதும் என வெள்ளையருக்கு தங்கள் எப்பவும் நெருக்கம்னு காட்டிக்கொண்டார்கள் இலங்கை தலைவர்கள்(சிங்களம் +தமிழ்)

இவ்விரு பிரிவு தலைவர்களும் வெள்ளையருக்கு சேவகம் செய்வதில் தனி ஆர்வம் கொண்டு வெள்ளையருக்காக இலங்கையை விற்ற வரலாறு அறிவீரோ?

அதனால் தான் 1971 வரையிலும் கூட பிரிட்டீஷ் டொமினியனாகவே காலம் தள்ளினார்கள், ஏகப்பட்ட சதி, சுயநலம். அந்த வரலாறு எல்லாம் அறியாமல் பேசும் உங்களை என்னவென்பது.

viyasan said...

//1971 வரையிலும் கூட பிரிட்டீஷ் டொமினியனாகவே காலம் தள்ளினார்கள்//

ஒருவ‌ழியாக 1480 இல் ராமேஸ்வ‌ர‌மும் 11 தீவுக‌ளும் உருவாகின‌ என்ற‌ க‌தையை ச‌ம்ப‌ந்த‌மேயில்லாம‌ல் இல‌ங்கையின் சுத‌ந்திர‌த்தைப் ப‌ற்றிப் பேசும் வ‌கையில் திசை திருப்பி விட்டார் அண்ண‌ன் வெள‌வால் அவ‌ர்க‌ள். இன்றைக்கும் க‌ன‌டா, அவுஸ்திரேலியா, ஜ‌மைக்கா, பார்பேடோஸ் போன்ற‌ ப‌ல‌ நாடுக‌ள் பிரிட்டிஸ் ம‌காராணியை நாட்டின் த‌லைவியாக‌க் கொண்டிருக்கிறார்க‌ள். அது பெரிய‌ பிர‌ச்ச‌னையேயில்லை. இன்றைக்கு அப்ப‌டியிருந்திருந்தால் இந்த‌ள‌வுக்கு இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் அழிந்திருக்க‌ மாட்டார்க‌ள். 1972 குடிய‌ர‌சு அர‌சிய‌ல‌மைப்பில் சோல்ப‌ரி அர‌சிய‌ல‌மைப்பில் இருந்த‌ சிறுபான்மையின‌ர் பாதுகாப்புகாக ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌த்துக்க‌ளையும் நீக்கிய‌தால் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்சனை இந்த‌ள‌வுக்கு மோச‌மான‌து. சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் கைக‌ளில் இல‌ங்கை குடிய‌ர‌சாகிப் போனால், த‌மிழ‌ர்க‌ளுக்கு மோச‌மான‌ விளைவுக‌ள் ஏற்ப‌டும் என்ப‌தை உண‌ர்ந்த‌தால் தான் த‌மிழ்த்த‌லைவ‌ர்க‌ள் பிரிட்டிஸ் டொமினிய‌னில் இல‌ங்கையைத் தொட‌ர்ந்து வைத்திருக்க‌ விரும்பினார்க‌ள். இந்தியா முழுச்சுத‌ந்திர‌மாகி என்ன‌த்தை கிழிச்சுதாம், இன்றைக்கும், முப்ப‌து வ‌ருட‌ யுத்த‌த்துக்குப் பின்னாலும், எல்லாவித‌மான‌ சமூக‌ வ‌ள‌ர்ச்சி சுட்டிக்காட்டிக‌ளிலும் (Social Indicators), எழுத்த‌றிவிலும் (Literacy rate), நோய் ஒழிப்ப‌திலும் (Infectious disease control, life expectancy, infant mortality rate etc.), வாழ்க்கைத்த‌ர‌த்திலும் (Standard of life) இந்தியாவை விட‌ இல‌ங்கை முன்ன‌ணியில் தானிருக்கிற‌து. :-) :)

வேகநரி said...

வவ்வால்,
இலங்கை சென்ற இந்திய‌ எம்பிகள் கொண்ட குழுவின‌ர் தமிழ் பகுதிகளில் வாழைப்ப‌ழ‌ம் சாப்பிட்டனர், சிக‌ர‌ட்டு பிடித்தனர் என்று வியாசன் எழுதியது எனக்கு ஆச்சரியம்தரவில்லை.அவர்களின் இந்திய வெறுப்பு அப்படிதான் எழுதுவார்கள். ஆனா வவ்வாலு இதில் நீங்க கவனிக்க வேண்டிய முக்கிய விஷ‌யம் என்னவென்றால் உங்களுக்கொருவன் கப்ஸா விட்டான் இலங்கை தமிழ்பகுதிகளிலே தீப்பெட்டி கூட கிடையாது சாப்பாடும் இல்லை என்று. உண்மை என்னென்றா தமிழகத்தை சேர்ந்த சீமானின் ஆள் கூட இலங்கை போனா அடபாவிங்களே ஏதேதோ சொன்னாங்களே அப்படியொன்றயும் இங்கே காணல்லயே என்று தான் நினைப்பார். ஆனா தமிழகம் திரும்பியதும் வெளிநாட்டில் இருந்து வரும் டொலரை ஏன் விடுவான் என்பதற்காக அங்கே ரொம்ப கஷ்டம் தீப்பெட்டி கூட கிடைக்காது என்றே சொல்லி திரிவார்.
FICCI( Federation of Indian Chambers of Commerce and Industry) முதலாளிகளே நடத்தும் அமைப்பு என்று தாக்குதல் தொடுத்துள்ளீர்கள்.அமெரிக்க முதலாளி குழு சீனாவுக்கு செல்கிறது,ஆஸ்திரேலிய முதலாளி குழு இந்தியா செல்கிறது,கனடா தமிழ் முதலாளி குழு ராசபக்சேயை இலங்கை சென்று சந்திக்கின்றன.பிரதமர் கூட ஜேர்மனியில் நிற்கிறார். இப்படியாக ஒவ்வொருநாடும் மற்ற நாடுகளுடன் பொருளாதார மற்றும் வியாபார வாய்ப்புகளைப் பெருக்கி முன்னேறவே முயற்சிக்கின்றன.இந்தியா மட்டும் தமிழக அரசியல் வாதிகளின் அரசியல் கோமளிதனத்திற்காக இவற்றை செய்ய கூடாது என்று எப்படி எதிர்பார்க்கலாம். சவூதி அரேபியாவில் இருந்து நிறைய பேர் வேலையிழந்து தமிழகம் வேறு வரப்போகிறார்கள்.

வவ்வால் said...

வியாசன்,

வர்ரலாறு தெரியவில்லை என சொன்ன உங்களின் வரலாற்று ஞானமே ஆடுதே :-))

கவர்னர் தான் என சொன்னதற்கு என்ன சொன்னீர்கள்? எனவே அக்காலத்தில் இலங்கை பிரிட்டீஷ் இந்தியாவின் கீழாக இருக்க வேன்டிய சூழலில், இந்தியாவுடன் சுதந்திரக்காலத்தில் இணைக்கப்படும் வாய்ப்பும் உருவானது,ஆனால் சில சுயநல தலைவர்கள் தான் கவனமாக தவிர்த்தார்கள், ஒரு வேளை அப்படி ஒரு மாநிலமாக இணைந்திருந்தால் இது போன்ற இழிநிலையே உருவாகி இருக்காது.

இலங்கையில் பிரச்சினை ஏற்பட இந்தியா காரணம் என முன்னர் சொன்னதில் எதாவது உண்மை இருக்கா? விடுதலை அடையும் முன்னரே தமிழர்கள் பாதிக்கப்படுவோம்னு நினைத்தார்களே ஏன், மேலும் சிங்களம்,புத்தம் என சட்டம் போட்டது,கல்வி ஒதுக்கீடு என எல்லாம் சிங்கள அரசு செய்ததால் தான் பிரச்சினையே உருவாச்சு, இதில் இந்தியா எங்கே வந்தது,ஆனால் உங்களுக்கு எல்லாவற்றுக்கும் குறை சொல்ல இந்தியா வேண்டும் :-))

//. இன்றைக்கு அப்ப‌டியிருந்திருந்தால் இந்த‌ள‌வுக்கு இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் அழிந்திருக்க‌ மாட்டார்க‌ள். 1972 குடிய‌ர‌சு அர‌சிய‌ல‌மைப்பில் சோல்ப‌ரி அர‌சிய‌ல‌மைப்பில் இருந்த‌ சிறுபான்மையின‌ர் பாதுகாப்புகாக ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌த்துக்க‌ளையும் நீக்கிய‌தால் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்சனை இந்த‌ள‌வுக்கு மோச‌மான‌து. சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் கைக‌ளில் இல‌ங்கை குடிய‌ர‌சாகிப் போனால், த‌மிழ‌ர்க‌ளுக்கு மோச‌மான‌ விளைவுக‌ள் ஏற்ப‌டும் என்ப‌தை உண‌ர்ந்த‌தால் தான் த‌மிழ்த்த‌லைவ‌ர்க‌ள் பிரிட்டிஸ் டொமினிய‌னில் இல‌ங்கையைத் தொட‌ர்ந்து வைத்திருக்க‌ விரும்பினார்க‌ள்.//

இப்படி சொல்வதை வைத்து பார்த்தால் சிங்கள ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதை நீங்களே ஏற்பதாக தெரிகிறது.

ஆனா தலைவரே அப்புறமாக இப்படி சொல்லுறிங்க,

//முப்ப‌து வ‌ருட‌ யுத்த‌த்துக்குப் பின்னாலும், எல்லாவித‌மான‌ சமூக‌ வ‌ள‌ர்ச்சி சுட்டிக்காட்டிக‌ளிலும் (Social Indicators), எழுத்த‌றிவிலும் (Literacy rate), நோய் ஒழிப்ப‌திலும் (Infectious disease control, life expectancy, infant mortality rate etc.), வாழ்க்கைத்த‌ர‌த்திலும் (Standard of life) இந்தியாவை விட‌ இல‌ங்கை முன்ன‌ணியில் தானிருக்கிற‌து. :-) :)//

இப்போ நல்ல முன்னணியில் மக்கள் இருக்காங்க என சொன்னதில் தமிழர்களும் அடக்கமா? அப்படினா தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சொன்னது பொய்யாகிடுமே :-))

அதான் இந்தியாவை விட முன்னணி தரத்தில் தமிழனை சிங்களன் வாழ வைக்கும் போது எதுக்கு சண்டை போடணும் ?

ஒரே கொயப்பாக இருக்கு?

இந்தியா என்ற தற்பெருமை எல்லாம் பேசிக்காதிங்கனு சொல்லிட்டு ,நீங்க சிங்களன் அடிச்சாலும் இலங்கையின் தற்பெருமை பேசிக்கொண்டு இருப்பதன் காரணம் என்ன?

உண்மையில் இலங்கையில் சொல்லப்படும் வாழ்க்கை தர குறியீடுகள் எல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம்,குடி நீர் இல்லை, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு,ஆனால் மிக நன்றாக வாழும் மேட்டுக்குடியினரை மட்டும் அரசு கட்டாயத்தின் பேரில் சர்வே எடுத்து ,வாழ்க்கை தரம் உயர்வாக இருக்கு எனக்காட்டிக்கொள்கிறது இலங்கை என்ற அடிப்படை உண்மை கூட புரியலையே.

இப்போது போர் நின்றுவிட்டது, மேலும் நீங்கள் சொன்னது போல சிறப்பான வாழ்க்கை தரக்குறியீடுகள் இருக்கும் போது மக்கள் எல்லாம் ஏன் இப்பவும் இலங்கையை விட்டு வெளியேற ஆசைப்படனும்?
---------------------

வவ்வால் said...

வேகநரி,

இந்திய எதிர்ப்பு என்பது இந்தியாவில் கூட உண்டு,அது உளரசியலமைப்பை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கில்,ஆனால் பொத்தாம் பொதுவாக தொட்ட்டதற்கும் சம்பந்தமில்லாமல் பேச அல்ல.

இலங்கை தமிழர்கள் உண்மையான காரணத்தை மறைத்து விட்டு என்னமோ இந்தியாவே எல்லாத்துக்கும் மூலக்காரணம் என்பதா பேசுவதும், பின்னர் இந்தியா தான் தீர்த்து வைக்கணும் என சொல்வதும் முரண்படுகிறது.

இப்பவும் சொல்கிறேன், இலங்கையில் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி, பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்கு.

நீங்களும் பொய்யாக எல்லாம் சுபிட்சம்னு சொல்ல வருவது ,சிங்கள அரசின் விளம்பரம் போல இருக்கு :-))

இன்னமும் நீங்க மலையகத்தமிழர்கள் வாழ்க்கை நிலைப்பற்றி பேசவோ,புரிந்துக்கொள்ளவோ தயாரில்லை. அதே போல போருக்கு பின்னர் அங்கு வாழும் மக்களின் நிலை என்னவென பேசவும் தயாரில்லை.

இலங்கை அரசின் பாதுகாப்பு வளையத்தில் ஆரம்பம் முதலே கிடைக்கும் வசதிகளையே இப்பவும் பேசிட்டு இருக்கிங்க.

ஒரு ஈழத்தமிழரே பதிவு போடுகிறார், போருக்கு பின் வாழ வழியற்ற தமிழ் பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள்,விபச்சாரம் என்பது ஒழிக்க முடியாதது எனவே அரசு முறைப்படி நடத்த அனுமதி வழங்கனும் என்று?

இதையே வேறு யாரேனும் சொல்லி இருந்தால் இந்த ஈழத்தமிழர்கள் சண்டைக்கு போயிருப்பார்கள்,ஆனால் அப்பதிவில் பேசும் ஈழத்தமிழர்கள், இந்திய தமிழர்கள் எல்லாம் முற்போக்காக பேசுவதாக நினைத்துக்கொண்டு விபச்சாரம் தவறு எல்லாம் தாரளமாக செய்யலாம், சரியான பாதுகாப்பு, கொடுக்கணும் என்கிறார்கள் என்ன கேவலமான சிந்தனை.

ஒரு பெண் வாழ வேறு வழியே இல்லை என்றால் தான் விபச்சாரம் செய்யவே துணிவாள் அப்படியான சூழல் அங்கு நிலவும் போது ,மனித வாழ்வு குறியீடு இந்தியாவை விட அதிகம் என பெருமை படும் வியாசர் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

பணம் என்று வந்துவிட்டால் இனம் என்பதெல்லாம் போய்விடும், இதனால் தான் இந்தியாவிலும் இந்தியன்,தமிழன் என்ரெல்லாம் பேசிக்கொண்டிறாமல் ஏற்றத்தாழ்வுகளை காண்கிறோம்.

ஆனால் ஈழத்தமிழர்கள் பேசும் போதெல்லாம் இனம்,தொப்புள் கொடி உறவென்று சொல்லிவிட்டு, போரில் கணவனை இழந்த பெண் விபச்சாரம் செய்து பிழைக்கலாம், அரசு முறைப்படுத்த வேண்டும் என்பதில் உள்ள குரூரம் பற்றி பேச யாரும் தயாரில்லை.

வேகநரி said...

//இன்னமும் நீங்க மலையகத்தமிழர்கள் வாழ்க்கை நிலைப்பற்றி பேசவோ புரிந்துக்கொள்ளவோ தயாரில்லை.//
ஏன் வவ்வால் எதுக்காக என் மீது அபாண்டமா பழி சுமத்திறிங்க? மலையகத்தமிழர்கள் தான் உண்மையான இந்திய தமிழர்கள் ஆனா மலையகத்தமிழர்களுக்காகவா தமிழகத்தில் போராட்டம் நடக்குது? மலையகத்தமிழர்களுக்காகவா தமிழகத்தில் தீ குளித்து தங்களை பெற்றவர்களையும் அனாதையாக்கினார்கள்?
வவ்வால், பொதுவாக இலங்கையில் இலங்கை தமிழர் வாழ்கை தரம் உயர்ந்தது. இந்திய தமிழர் வாழ்கை தரம் குறைந்தது. ஆனா இந்திய தமிழர்களும் முன்னேறி வாராங்க. இலங்கையில் முன்னேறி மிக நல்ல நிலையில் உள்ள இந்திய தமிழர்களும் இருக்கிறார்கள்.
//இப்பவும் சொல்கிறேன் இலங்கையில் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்கு//
மலையகத்தமிழர்கள் இந்திய தமிழர்களின் வாழ்கை நிலை,வாழ்கை தரம் குறைந்திருப்பதினால் அவர்களுக்கு தேவையானதை வாங்க முடியல்ல. பொருட்களுக்கு தட்டுபாடு தடை என்று தமிழகத்தில் சொல்லபடுவது எதுவும் கிடையாது பொருள் வாங்கும் வசதி நிலையை உருவாக்க வேண்டும். பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்கு என்று சொல்லும் உங்களுடன் மேற்கொண்டு பேச என்ன இருக்கு பாஸஂ?

வேகநரி said...

//ஒரு பெண் வாழ வேறு வழியே இல்லை என்றால் தான் விபச்சாரம் செய்யவே துணிவாள் அப்படியான சூழல் அங்கு நிலவும் போது மனித வாழ்வு குறியீடு மிகவும் தவறு//
வவ்வால் சென்னையில்அல்லது தமிழகத்தில் இல்லாத விபச்சாரமா?
அல்லது புனித பூமி மொரோக்கோவில் இல்லாத விபச்சாரமா இலங்கையில் நடக்கிறது?
இலங்கையில் நடந்தால் மட்டும் ஏன் இந்த பில்லட்ப்?
இலங்கை யதார்த்தவாதிகள் பகுத்தறிவாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

வவ்வால் said...

நரிக்குட்டி,

வாரும்,உம்மை போன்றோரிடம் தான் உண்மைய கேட்டு தெரிஞ்சிக்கணும் :-))

சரி அப்போ நீரும்,வியாசரும் சொன்னாப்போல நல்ல வாழ்க்கை தரமாக இலங்கையில் இருக்கு ,அப்புறம் ஏன் எல்லாம் இன்னும் வெளிநாட்டுக்கு போகனும்,மேலும் இப்போ சில நாடுகள் நீங்க சொன்ன வாழ்க்கை தர குறியீடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டது போல, எனவே 2009 க்கு மேல் வந்தவர்களுக்கு குடியுரிமை இல்லைனு சொன்னால் , சும்மா இருக்காம ஏன் போராடுறாங்க, நல்ல வாழ்க்கை இருக்க சொந்த பூமிக்கு வரலாம்ல.

ஆனால் இணையத்தில் மட்டும் நாட்டை பிரிந்து வாழும் துயரம் உங்களுக்கு தெரியுமானு சொல்லும் மக்கள், இலங்கைக்கு போக சொல்லி சுவிஸ்,ஆசி, துபாய் போன்ற நாடுகள் சொன்னால் , போக மாட்டேங்கிறாங்களே ஏன்?

நீங்க சொன்னாப்போல ராசபக்சே சொன்னால், தமிழ்நாட்டு தலைவர்கள் ,அதெல்லாம் பொய்யினு சொல்லுறாங்க, அப்போ என்னைப்பொன்ற ஆட்கள் எதை நம்புறது?

ராசபக்சேவும் நல்ல வாழ்க்கை இருக்குனு சொல்லிக்கிறார்,நீங்களும் அதையே சொல்லுறிங்க, எனவே இலங்கையில் சுபிட்சமான வாழ்க்கை இருக்கு என தெரியாத மூடனாக தமிழக மக்கள் இருக்கிறார்கள் தானே? தமிழக தலைவர்களும், ஊடங்கள் எல்லாருமா சேர்ந்து தமிழக மக்களை முட்டாளக்கிட்டாங்களா அப்போ?

இப்போ கூட ஆஸ்திரேலியாவுக்கு சென்ற ஒரு குழுவுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டேன்னு நிலுவையில் நிக்குது, இந்தியாவை விட நல்ல வாழ்க்கை தரம் இருக்கும் நாட்டில் இருந்து ஓடிப்போக நினைக்கலாமா?

#//வவ்வால் சென்னையில்அல்லது தமிழகத்தில் இல்லாத விபச்சாரமா?
அல்லது புனித பூமி மொரோக்கோவில் இல்லாத விபச்சாரமா இலங்கையில் நடக்கிறது?
இலங்கையில் நடந்தால் மட்டும் ஏன் இந்த பில்லட்ப்?//

சென்னையில் என்ன உரிமை போர் புரிந்த ஆதரவு இழந்த பெண்களா விபச்சாரம்ம் செய்றாங்க, அப்படி செய்வதையும் சட்டப்படி செய்ய சொல்லி யாரும் கேட்கலை, செய்தால் தப்பில்லைனும் சொல்லவில்லை.

இலங்கையில் விபச்சாரம் செய்யும் சூழலுக்கு ஏன் போனார்கள், உங்களைப்போன்ற மக்களுக்காக போராடியதால் குடும்பம் அழிந்து போனதால், வாழ வழியில்லாமல் போனதால். அப்பெண்கள் சுதந்திரப்போராட்ட வீரர்களின் மனைவிகள், மகள்கள்,உறவுகள் இல்லையா அப்போ? அவர்களை பார்த்து பிழைக்க விபச்சாரம் செய்துக்கொள், அரசே முறைப்படுத்தி செய்தால் இன்னும் நல்லா இருக்கும்னு ஆலோசனை ,மக்கள் எப்படி தங்களுக்கு சோகம் இருக்கு,எல்லாம் அன்பை பொழியனும்னு சொல்ல முடியும்?

அப்போ வெளிநாட்டுக்கு போனவர்களின் பெண்கள் வேலை கிடைக்கலைனா விபச்சாரம்ம் செய்யவும் தயாராகத்தான் வெளிநாட்டுக்கு போனார்கள் என சொன்னால் கோவப்பட மாட்டார்கள் என நம்பலாமா?

யதார்த்தமாக ,முற்போக்கா பேசுவதெல்லாம் அடுத்தவங்களுக்கு ,அவங்களுக்கு என்றால் அய்யோ ,அம்மானு கூப்பாடு போடுவாங்களோ?

# சரி விகடனில் முன்னாள் போராளிப்பெண் விபச்சாரம் செய்வதாக பேட்டிக்கொடுத்து வந்த போது எதுக்கு எல்லாம் ,தூ வெட்கம் கெட்ட விகடனே எனக்காரித்துப்பினார்கள், அதே கருத்தை இவர்களே பேசினால் , முற்போக்கு,யதார்த்தமா?

தமிழ்க மக்கள் தொப்புள் கொடி உறவு புலம்பெயர்ந்தவர்களுக்காக போராடனும் என சொல்லுபவர்கள், இலங்கையிலே கஷ்டப்படும் மக்களுக்கு நாங்க உதவுவோம் என சொல்லாமல் ,விபச்சாரம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் அதில் என்ன தவறு இருக்கு என வேறுமாதிரியாக சொல்ல வேண்டும்?

சிலரின் இரட்டை வேடம் இணையத்தில் வரும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு உதவும் உங்களைப்போன்றவர்களுக்கு நன்றி!

Anonymous said...

வவ்வால்,

//சிலரின் இரட்டை வேடம் இணையத்தில் வரும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு உதவும் உங்களைப்போன்றவர்களுக்கு நன்றி!///

நான் சொன்னேன்ல...நரி நொம்ப டேஞ்சரஸ் பெலோ.....

---கொங்கு நாட்டான்.

Anonymous said...

வவ்வால்,

//சிலரின் இரட்டை வேடம் இணையத்தில் வரும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு உதவும் உங்களைப்போன்றவர்களுக்கு நன்றி!///

நான் சொன்னேன்ல...நரி நொம்ப டேஞ்சரஸ் பெலோ.....

---கொங்கு நாட்டான்.

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

டேஞ்சரையே டேமேஜ் செய்றது தானே நம்ம வேலை.

இலங்கையில் தமிழ்நாட்டை விட சுபிட்சமா தமிழர்கள் வாழுறாங்கன்னு சொல்லி மாட்டியிருக்கார் நரிக்குட்டி,அப்போ ராச பக்சே ஊடகத்தில் சொல்வதும் அதான் ,இப்போ ராச பக்சே நல்லாட்சி வழங்குவதாக சொல்வது சரியா, இல்லையானு வெளிப்படையா சொல்லி ஆகணும், இப்போ எந்த பக்கம் நரிப்பாயுதுனு பார்த்துடுவோம்.

Anonymous said...

வவ்வால்,

நரி நழுவும்....பார்த்துடுவோம்.

---கொங்கு நாட்டான்.

வேகநரி said...

வவ்வால் இது உங்க தளம். எனது கருத்துகள் உங்களுக்கு பிடிக்காவிட்டால் எனது கருத்துகளை தாராளமா நீங்க அகற்றிவிடலாம். ஆனால் எதற்காக கொங்கு நாட்டான் என்ற பெயரில் இரட்டை வேட நாடகம்?

Anonymous said...

வவ்வால்,

அனைத்திலும் தவறான கோணம் பார்க்கும்...நரியாருக்கு பதில் சொல்லுங்க யுவர் ஆனர்....

---கொங்கு நாட்டான்.

வேகநரி said...

நீங்க சொல்லும் உங்க சொந்த கருத்தின் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே உங்க கற்பனை கொங்கு நாட்டான் என்ற கற்பனை கதாபாத்திரம்.

Anonymous said...

வவ்வால்,

நரிம்மா...மற்ற பதிவுகளின் பின்னூட்டங்களைப் பார்க்கவும்....கொங்கு நாட்டான் இருப்பான்...


-கொங்கு நாட்டான்

Anonymous said...

வவ்வால்,

நான் எப்ப வந்தாலும் சர்ச்சை கிளம்புது.....இப்ப நான் என்ன செய்ய...:-)

-கொங்கு நாட்டான்

வவ்வால் said...

நரியாரே,

என்ன வகையான அரசியல் இது, இப்படிக்கா சொல்லிட்டு அப்படிக்கா எஸ்கேப்பாக புரளியை கிளப்பிவிடுறாப்போலவே இருக்கு :-))

முட்டு சந்தில தானா போயி மாட்டிக்கிறது,அப்புறமா இப்படி ஏதேனும் பழியை சொல்லிட்டு எஸ்கேப் ஆகிறதே சிலருக்கு வேலையாப்போச்சுப்பா :-))

நரியார், நான் கொங்கு நாட்டார் இல்லை,ஒரு வேளை கொங்கு நாட்டார் தான் வவ்வாலா இருக்கலாம்!!??, விடாதீர் புடிச்சு, நீர் தானே வவ்வால்னு சொல்லி மிரட்டி எழுதி வாங்கிடும் :-))

அப்பாடா எனக்கு ஒரு தொல்லை விட்டுது,நான் நானே இல்லைனு சொல்லிட்டு ,வம்பு தும்புல இருந்து தப்பிச்சுடலாம் :-))


# எனக்கு புடிச்ச கருத்து,புடிக்காத கருத்துனே எதுவும் இல்லை, சம்பந்தமில்லாமல் விளம்பரம் போட்டால் தான் நீக்குவேன்,மற்றதை எல்லாம் நீக்கியதேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் அனானிகள் கருத்து சொன்னாலும் பதில் சொல்லும் ஒரே ஒரு தமிழ்ப்பதிவர் அடியேன் மட்டும் தான்.

நீங்க சொல்வது தப்பாகவே இருந்தாலும், அதனை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு, தடுக்கவே மாட்டேன்.ஆனால் தப்பை தப்புன்னு ஓங்கி மண்டையில அடிச்சு சொல்லுவேன் :-))

----------

கொங்கு நாட்டார்,

இப்படில்லாம் பேச ஆரம்பிச்சாங்கன்னா நீர் பிராபல்யம் ஆகிட்டதா அர்த்மய்யா, எஞ்சாய் செய்ய வேண்டாமோ :-))

Anonymous said...

வவ்வால்,

ஹையா..அப்போ நான் பிராபல்ய அனானின்னு சொல்லுங்க (பிராபல்ய பதிவர் போல).....:-))


நரி நழுவிடுத்து.....

---கொங்கு நாட்டான்.

Sury said...

வாழ்த்துக்கள்
உங்கள் பதிவை யாரோ ஒரு டெசொகாரர் படித்துவிட்டார் போலிருக்கு
உச்சநீதிமன்றத்தில் டெசோ கச்சத்தீவு வழக்கு
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

நீர் பிராபல்யமே தான்,அதில் என்ன சந்தேகம் :-))

நரிக்குட்டி வசமா மாட்டியதும் எஸ்கேப் ஆகிட்டார் :-))
-----------------

சூரி,

வாங்க,நன்றீ!

ஹி..ஹி இதான் காகதாளிய நியாயம் என்பது :-))

ஆனால் எல்லாம் நம்ம பதிவின் மகிமைனு கொஞ்சம் உதார்விட்டுக்கனும் ,அப்போ தான் நாமும் பிராபல்யமாகலாம் :-))

Anonymous said...

வவ்வால்,

உச்சநீதிமன்றத்தில் டெசோ கச்சத்தீவு வழக்கு....


வாழ்த்துக்கள்...!!!!!

---கொங்கு நாட்டான்.

Anonymous said...


//teso-decides-approach-sc//


teso-**decides**-approach-sc

ஜோதிஜி said...

மீண்டும் வந்து ஒரு முறை படித்தேன்.

தமிழ்ச் செல்வன்ஜீ said...

எது எதற்கோ இயக்கம் ந்டத்தும் சமூக ஆர்வலர்கள், தமிழக மீனவர் நலன் கருதி கச்சத்தீவு மீட்பு இயக்கம் காணலாம்...

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அடேங்கப்பா! எப்பேர்ப்பட்ட பதிவர் ஐயா நீர்! இவ்வளவு நாள் விட்டுவிட்டேனே! இந்தச் சிக்கலுக்கான தீர்வையே வழங்கி விட்டீர்களே!!

இப்பொழுது கச்சத் தீவு மீட்புக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் தொடுக்கப்பட்டுள்ளனவா என்று கட்டுரையைப் படிக்கும்பொழுது கேள்வி எழும்பியது; கருத்துரையில் கேட்க நினைத்தேன். ஆனால், கட்டுரையின் இறுதியில் அந்தத் தகவலையும் உறுதிப்படுத்தி வயிற்றில் பாலை வார்த்து வீட்டீர்கள்! இப்படியொரு அரும்பெரும் பதிவுக்காக மிக்க நன்றி!